| முகப்பு | தொடக்கம் | 
| 
சிறுகுடி கிழான் பண்ணன் | 
| 
 173 | 
| 
யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய! | |
| 
பாணர்! காண்க, இவன் கடும்பினது இடும்பை; | |
| 
யாணர்ப் பழு மரம் புள் இமிழ்ந்தன்ன | |
| 
ஊண் ஒலி அரவம்தானும் கேட்கும்; | |
| 
5 | 
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி, | 
| 
முட்டை கொண்டு வன் புலம் சேரும் | |
| 
சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்ப, | |
| 
சோறுடைக் கையர் வீறு வீறு இயங்கும் | |
| 
இருங் கிளைச் சிறாஅர்க் காண்டும்; கண்டும், | |
| 
10 | 
மற்றும் மற்றும் வினவுதும், தெற்றென; | 
| 
பசிப்பிணி மருத்துவன் இல்லம் | |
| 
அணித்தோ? சேய்த்தோ? கூறுமின், எமக்கே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
சிறுகுடி கிழான் பண்ணனைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் பாடியது.
 | 
| 
 388 | 
| 
வெள்ளி தென் புலத்து உறைய, விளை வயல், | |
| 
பள்ளம், வாடிய பயன் இல் காலை, | |
| 
இரும் பறைக் கிணைமகன் சென்றவன், பெரும் பெயர் | |
| 
........................................................பொருந்தி, | |
| 
5 | 
தன் நிலை அறியுநனாக, அந் நிலை, | 
| 
இடுக்கண் இரியல் போக, உடைய | |
| 
கொடுத்தோன் எந்தை, கொடை மேந் தோன்றல், | |
| 
.......................................................னாமருப்பாக, | |
| 
வெல்லும் வாய்மொழிப் புல்லுடை வி | |
| 
10 | 
பெயர்க்கும் பண்ணற் கேட்டிரோ, மககிரென, | 
| 
வினைப் பகடு ஏற்ற மேழி கிணைத் தொடா, | |
| 
நாள்தொறும் பாடேன்ஆயின், ஆனா | |
| 
மணி கிளர் முன்றில் தென்னவன் மருகன், | |
| 
பிணி முரசு இரங்கும் பீடு கெழு தானை | |
| 
15 | 
அண்ணல் யானை வழுதி, | 
| 
கண்மாறிலியர் என் பெருங் கிளைப் புரவே! | |
| 
திணை அது; துறை இயன்மொழி.
 | |
| 
சிறுகுடி கிழான் பண்ணனை மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் பாடியது.
 |