| முகப்பு | தொடக்கம் | 
| 
சேர, சோழ, பாண்டியர் | 
| 
 110 | 
| 
கடந்து அடு தானை மூவிரும் கூடி | |
| 
உடன்றனிர் ஆயினும், பறம்பு கொளற்கு அரிதே; | |
| 
முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நல் நாடு; | |
| 
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்; | |
| 
5 | 
யாமும் பாரியும் உளமே; | 
| 
குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
மூவேந்தரும் பறம்பு முற்றியிருந்தாரை அவர் பாடியது.
 |