| முகப்பு | தொடக்கம் | 
| 
சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் | 
| 
 14 | 
| 
கடுங் கண்ண கொல் களிற்றால் | |
| 
காப்பு உடைய எழு முருக்கி, | |
| 
பொன் இயல் புனை தோட்டியால் | |
| 
முன்பு துரந்து, சமம் தாங்கவும்; | |
| 
5 | 
பார் உடைத்த குண்டு அகழி | 
| 
நீர் அழுவ நிவப்புக் குறித்து, | |
| 
நிமிர் பரிய மா தாங்கவும்; | |
| 
ஆவம் சேர்ந்த புறத்தை தேர் மிசைச் | |
| 
சாப நோன் ஞாண் வடுக் கொள வழங்கவும்; | |
| 
10 | 
பரிசிலர்க்கு அருங் கலம் நல்கவும்; குரிசில்! | 
| 
வலிய ஆகும், நின் தாள் தோய் தடக் கை. | |
| 
புலவு நாற்றத்த பைந் தடி | |
| 
பூ நாற்றத்த புகை கொளீஇ, ஊன் துவை | |
| 
கறி சோறு உண்டு வருந்து தொழில் அல்லது, | |
| 
15 | 
பிறிது தொழில் அறியா ஆகலின், நன்றும் | 
| 
மெல்லிய பெரும! தாமே. நல்லவர்க்கு | |
| 
ஆர் அணங்கு ஆகிய மார்பின், பொருநர்க்கு | |
| 
இரு நிலத்து அன்ன நோன்மை, | |
| 
செரு மிகு சேஎய்! நிற் பாடுநர் கையே. | |
| 
திணை அது; துறை இயன்மொழி.
 | |
| 
சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் கபிலர் கைப் பற்றி, 'மெல்லியவாமால் நூம்கை' என, கபிலர் பாடியது.
 |