| முகப்பு | தொடக்கம் | 
| 
சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி | 
| 
 10 | 
| 
வழிபடுவோரை வல் அறிதீயே; | |
| 
பிறர் பழி கூறுவோர் மொழி தேறலையே; | |
| 
நீ மெய் கண்ட தீமை காணின்; | |
| 
ஒப்ப நாடி, அத் தக ஒறுத்தி; | |
| 
5 | 
வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின், | 
| 
தண்டமும் தணிதி, நீ பண்டையின் பெரிதே | |
| 
அமிழ்து அட்டு ஆனாக் கமழ் குய் அடிசில் | |
| 
வருநர்க்கு வரையா வசை இல் வாழ்க்கை | |
| 
மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர் | |
| 
10 | 
மலைத்தல் போகிய, சிலைத் தார் மார்ப! | 
| 
செய்து இரங்கா வினை, சேண் விளங்கும் புகழ், | |
| 
நெய்தலங்கானல் நெடியோய்! | |
| 
எய்த வந்தனம் யாம்; ஏத்துகம் பலவே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.
 |