| முகப்பு | தொடக்கம் | 
| 
சோழன் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி | 
| 
 80 | 
| 
இன் கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண், | |
| 
மைந்துடை மல்லன் மத வலி முருக்கி, | |
| 
ஒரு கால் மார்பு ஒதுங்கின்றே; ஒரு கால் | |
| 
வரு தார் தாங்கிப் பின் ஒதுங்கின்றே | |
| 
5 | 
நல்கினும் நல்கான் ஆயினும், வெல் போர்ப் | 
| 
பொரல் அருந் தித்தன் காண்கதில் அம்ம | |
| 
பசித்துப் பணை முயலும் யானை போல, | |
| 
இரு தலை ஒசிய எற்றி, | |
| 
களம் புகு மல்லற் கடந்து அடு நிலையே. | |
| 
திணை தும்பை; துறை எருமை மறம்.
 | |
| 
சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி முக்காவனாட்டு ஆமூர் மல்லனைப் பொருது அட்டு நின்றானைச் சாத்தந்தையார் பாடியது.
 | 
| 
 81 | 
| 
ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறே | |
| 
கார்ப் பெயல் உருமின் முழங்கல் ஆனாவே; | |
| 
யார்கொல் அளியர்தாமே ஆர் நார்ச் | |
| 
செறியத் தொடுத்த கண்ணிக் | |
| 
5 | 
கவி கை மள்ளன் கைப்பட்டோரே? | 
| 
திணை வாகை; துறை அரச வாகை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 82 | 
| 
சாறு தலைக்கொண்டென, பெண் ஈற்று உற்றென, | |
| 
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்று, | |
| 
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது | |
| 
போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ | |
| 
5 | 
ஊர் கொள வந்த பொருநனொடு, | 
| 
ஆர் புனை தெரியல் நெடுந்தகை போரே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 83 | 
| 
அடி புனை தொடுகழல், மை அணல் காளைக்கு என் | |
| 
தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே; | |
| 
அடு தோள் முயங்கல் அவை நாணுவலே; | |
| 
என் போல் பெரு விதுப்புறுக என்றும் | |
| 
5 | 
ஒரு பாற் படாஅதாகி, | 
| 
இரு பாற் பட்ட இம் மையல் ஊரே! | |
| 
திணை கைக்கிளை; துறை பழிச்சுதல்.
 | |
| 
அவனைப் பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார் பாடியது.
 | 
| 
 84 | 
| 
என்னை, புற்கை உண்டும் பெருந் தோளன்னே; | |
| 
யாமே, புறஞ் சிறை இருந்தும் பொன் அன்னம்மே; | |
| 
போர் எதிர்ந்து என்னை போர்க் களம் புகினே, | |
| 
கல்லென் பேர் ஊர் விழவுடை ஆங்கண், | |
| 
5 | 
ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு | 
| 
உமணர் வெரூஉம் துறையன்னன்னே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 85 | 
| 
என்னைக்கு ஊர் இஃது அன்மையானும், | |
| 
என்னைக்கு நாடு இஃது அன்மையானும், | |
| 
'ஆடு ஆடு' என்ப, ஒரு சாரோரே; | |
| 
'ஆடு அன்று' என்ப, ஒரு சாரோரே; | |
| 
5 | 
நல்ல, பல்லோர் இரு நன் மொழியே; | 
| 
அம் சிலம்பு ஒலிப்ப ஓடி, எம் இல், | |
| 
முழாஅரைப் போந்தை பொருந்தி நின்று, | |
| 
யான் கண்டனன், அவன் ஆடு ஆகுதலே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 |