| முகப்பு | தொடக்கம் | 
| 
தந்து மாறன் | 
| 
 360 | 
| 
பெரிது ஆராச் சிறு சினத்தர், | |
| 
சில சொல்லான் பல கேள்வியர், | |
| 
நுண் உணர்வினான் பெருங் கொடையர், | |
| 
கலுழ் நனையான் தண் தேறலர், | |
| 
5 | 
கனி குய்யான் கொழுந் துவையர், | 
| 
தாழ் உவந்து தழூஉ மொழியர், | |
| 
பயன் உறுப்பப் பலர்க்கு ஆற்றி, | |
| 
ஏமம் ஆக இந் நிலம் ஆண்டோர் | |
| 
சிலரே; பெரும! கேள், இனி: நாளும், | |
| 
10 | 
பலரே, தகையஃது அறியாதோரே; | 
| 
அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது; | |
| 
இன்னும் அற்று, அதன் பண்பே; அதனால், | |
| 
நிச்சமும் ஒழுக்கம் முட்டிலை; பரிசில் | |
| 
நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்புமதி; அச்சு வரப் | |
| 
15 | 
பாறு இறை கொண்ட பறந்தலை, மா கத | 
| 
கள்ளி போகிய களரி மருங்கின், | |
| 
வெள்ளில் நிறுத்த பின்றை, கள்ளொடு | |
| 
புல்லகத்து இட்ட சில் அவிழ் வல்சி, | |
| 
புலையன் ஏவ, புல் மேல் அமர்ந்து உண்டு, | |
| 
20 | 
அழல் வாய்ப் புக்க பின்னும், | 
| 
பலர் வாய்த்து இராஅர், பருத்து உண்டோரே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
தந்துமாறனைச் சங்கவருணர் என்னும் நாகரியர் பாடியது.
 | 
| 
 361 | 
| 
கார் எதிர் உருமின் உரறி, கல்லென, | |
| 
ஆர் உயிர்க்கு அலமரும் ஆராக் கூற்றம்! | |
| 
நின் வரவு அஞ்சலன் மாதோ; நன் பல | |
| 
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு, | |
| 
5 | 
அருங் கலம் நீரொடு சிதறி, பெருந்தகைத் | 
| 
தாயின் நன்று பலர்க்கு ஈத்து, | |
| 
தெருள் நடை மா களிறொடு தன் | |
| 
அருள் பாடுநர்க்கு நன்கு அருளியும், | |
| 
உருள் நடை ........................ான்றதன் | |
| 
10 | 
தாள் சேருநர்க்கு இனிது ஈத்தும், | 
| 
புரி மாலையர் பாடினிக்குப் | |
| 
பொலந் தாமரைப் பூம் பாணரொடு | |
| 
கலந்து அளைஇய நீள் இருக்கையால் | |
| 
பொறையொ............ மான் நோக்கின், | |
| 
15 | 
வில் என விலங்கிய புருவத்து, வல்லென | 
| 
நல்கின் நா அஞ்சும் முள் எயிற்று, மகளிர் | |
| 
அல்குல் தாங்கா அசைஇ, மெல்லென | |
| 
............................................பொலங்கலத்து ஏந்தி, | |
| 
அமிழ்து என மடுப்ப மாந்தி, இகழ்விலன், | |
| 
20 | 
நில்லா உலகத்து............... மை நீ | 
| 
சொல்ல வேண்டா................. முந்தறிந்த | |
| 
....................................................
 | |
| 
...............................................னார் பாடியது.
 | 
| 
 362 | 
| 
ஞாயிற்று அன்ன ஆய் மணி மிடைந்த | |
| 
மதி உறழ் ஆரம் மார்பில் புரள, | |
| 
பலி பெறு முரசம் பாசறைச் சிலைப்ப, | |
| 
பொழிலகம் பரந்த பெ................. | |
| 
5 | 
.......................கும விசய வெண் கொடி | 
| 
அணங்கு உருத்தன்ன கணம் கொள் தானை, | |
| 
கூற்றத்து அன்ன மாற்று அரு முன்பின், | |
| 
ஆக் குரல் காண்பின் அந்தணாளர் | |
| 
நான்மறைக் குறி .......................... யின் | |
| 
10 | 
அறம் குறித்தன்று; பொருள் ஆகுதலின் | 
| 
மருள் தீர்ந்து, மயக்கு ஒரீஇ, | |
| 
கை பெய்த நீர் கடற் பரப்ப, | |
| 
ஆம் இருந்த அடை நல்கி, | |
| 
சோறு கொடுத்து, மிகப் பெரிதும் | |
| 
15 | 
வீறு சான......................... நன்றும் | 
| 
சிறு வெள் என்பின் நெடு வெண் களரின், | |
| 
வாய் வன் காக்கை கூகையொடு கூடிப் | |
| 
பகலும் கூவும் அகலுள் ஆங்கண், | |
| 
காடு கண் மறைத்த கல்லென் சுற்றமொடு, | |
| 
20 | 
இல் என்று இல்வயின் பெயர, மெல்ல | 
| 
இடம் சிறிது ஒதுங்கல் அஞ்சி, | |
| 
உடம்பொடும் சென்மார், உயர்ந்தோர் நாட்டே. | |
| 
திணை பொதுவியல்; துறை பெருங்காஞ்சி.
 | |
| 
அவனைச் சிறுவெண்டேரையார் பாடியது.
 | 
| 
 363 | 
| 
இருங் கடல் உடுத்த இப் பெருங் கண் மா நிலம் | |
| 
உடையிலை நடுவணது இடை பிறர்க்கு இன்றி, | |
| 
தாமே ஆண்ட ஏமம் காவலர் | |
| 
இடு திரை மணலினும் பலரே; சுடு பிணக் | |
| 
5 | 
காடு பதி ஆகப் போகி, தம்தம் | 
| 
நாடு பிறர் கொளச் சென்று மாய்ந்தனரே; | |
| 
அதனால், நீயும் கேண்மதி அத்தை! வீயாது | |
| 
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை; | |
| 
மடங்கல் உண்மை மாயமோ அன்றே; | |
| 
10 | 
கள்ளி வேய்ந்த முள்ளிஅம் புறங்காட்டு, | 
| 
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண், | |
| 
உப்பு இலாஅ அவிப் புழுக்கல் | |
| 
கைக்கொண்டு, பிறக்கு நோக்காது, | |
| 
இழி பிறப்பினோன் ஈயப் பெற்று, | |
| 
15 | 
நிலம் கலனாக, இலங்கு பலி மிசையும் | 
| 
இன்னா வைகல் வாராமுன்னே, | |
| 
செய் நீ முன்னிய வினையே, | |
| 
முந்நீர் வரைப்பகம் முழுது உடன் துறந்தே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
...................... ஐயாதிச் சிறுவெண்டேரையார் பாடியது.
 | 
| 
 364 | 
| 
வாடா மாலை பாடினி அணிய, | |
| 
பாணன் சென்னிக் கேணி பூவா | |
| 
எரி மருள் தாமரைப் பெரு மலர் தயங்க, | |
| 
மை விடை இரும் போத்துச் செந் தீச் சேர்த்தி, | |
| 
5 | 
காயம் கனிந்த கண் அகன் கொழுங் குறை | 
| 
நறவு உண் செவ் வாய் நாத் திறம் பெயர்ப்ப, | |
| 
உண்டும், தின்றும், இரப்போர்க்கு ஈய்ந்தும், | |
| 
மகிழ்கம் வம்மோ, மறப் போரோயே! | |
| 
அரியஆகலும் உரிய, பெரும! | |
| 
10 | 
நிலம் பக வீழ்ந்த அலங்கல் பல் வேர் | 
| 
முது மரப் பொத்தின் கதுமென இயம்பும் | |
| 
கூகைக் கோழி ஆனாத் | |
| 
தாழிய பெருங் காடு எய்திய ஞான்றே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனைக் கூகைக் கோழியார் பாடியது.
 |