| முகப்பு | தொடக்கம் | 
| 
தருமபுத்திரன் | 
| 
 366 | 
| 
விழுக் கடிப்பு அறைந்த முழுக் குரல் முரசம் | |
| 
ஒழுக்குடை மருங்கின் ஒரு மொழித்து ஆக, | |
| 
அரவு எறி உருமின் உரறுபு சிலைப்ப, | |
| 
ஒரு தாம் ஆகிய பெருமையோரும், | |
| 
5 | 
தம் புகழ் நிறீஇச் சென்று மாய்ந்தனரே; | 
| 
அதனால், அறவோன் மகனே! மறவோர் செம்மால்! | |
| 
.............................உரைப்பக் கேண்மதி: | |
| 
நின் ஊற்றம் பிறர் அறியாது, | |
| 
பிறர் கூறிய மொழி தெரியா, | |
| 
10 | 
ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி, | 
| 
இரவின் எல்லை வருவது நாடி, | |
| 
உரை..................................................... | |
| 
உழவு ஒழி பெரும் பகடு அழி தின்றாங்கு, | |
| 
செங் கண் மகளிரொடு சிறு துனி அளைஇ, | |
| 
15 | 
அம் கள் தேறல் ஆய் கலத்து உகுப்ப, | 
| 
கெடல் அருந் திருவ! | |
| 
மடை வேண்டுநர்க்கு இடை அருகாது, | |
| 
அவிழ் வேண்டுநர்க்கு இடை அருளி, | |
| 
விடை வீழ்த்துச் சூடு கிழிப்ப, | |
| 
20 | 
நீர் நிலை பெருத்த வார் மணல் அடை கரை, | 
| 
காவுதொறும் | |
| 
மடங்கல் உண்மை மாயமோ அன்றே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
தருமபுத்திரனைக் கோதமனார் பாடியது.
 |