| முகப்பு | தொடக்கம் | 
| 
பாண்டியன் அறிவுடைநம்பி | 
| 
 184 | 
| 
காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே, | |
| 
மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்; | |
| 
நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே, | |
| 
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்; | |
| 
5 | 
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே, | 
| 
கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்; | |
| 
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும் | |
| 
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு, | |
| 
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின், | |
| 
10 | 
யானை புக்க புலம் போல, | 
| 
தானும் உண்ணான், உலகமும் கெடுமே. | |
| 
திணை பாடாண் திணை; துறை செவியறிவுறூஉ.
 | |
| 
பாண்டியன் அறிவுடை நம்பியுழைச் சென்ற பிசிராந்தையார் பாடியது.
 |