| முகப்பு | தொடக்கம் | 
| 
பிட்டங்கொற்றன் | 
| 
 168 | 
| 
அருவி ஆர்க்கும் கழை பயில் நனந் தலைக் | |
| 
கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள் | |
| 
கொழுங் கிழங்கு மிளிரக் கிண்டி, கிளையொடு, | |
| 
கடுங் கண் கேழல் உழுத பூழி, | |
| 
5 | 
நல் நாள் வரு பதம் நோக்கி, குறவர் | 
| 
உழாஅது வித்திய பரூஉக் குரல் சிறு தினை | |
| 
முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார் | |
| 
மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால், | |
| 
மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி | |
| 
10 | 
வான் கேழ் இரும் புடை கழாஅது, ஏற்றி, | 
| 
சாந்த விறகின் உவித்த புன்கம் | |
| 
கூதளம் கவினிய குளவி முன்றில், | |
| 
செழுங் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும் | |
| 
ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல், | |
| 
15 | 
நறை நார்த் தொடுத்த வேங்கை அம் கண்ணி, | 
| 
வடி நவில் அம்பின் வில்லோர் பெரும! | |
| 
கை வள் ஈகைக் கடு மான் கொற்ற! | |
| 
வையக வரைப்பில் தமிழகம் கேட்ப, | |
| 
பொய்யாச் செந் நா நெளிய ஏத்திப் | |
| 
20 | 
பாடுப என்ப பரிசிலர், நாளும் | 
| 
ஈயா மன்னர் நாண, | |
| 
வீயாது பரந்த நின் வசை இல் வான் புகழே. | |
| 
திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை; இயன்மொழியும், அரச வாகையும் ஆம்.
 | |
| 
பிட்டங் கொற்றனைக் கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் பாடியது.
 | 
| 
 169 | 
| 
நும் படை செல்லும்காலை, அவர் படை | |
| 
எடுத்து எறி தானை முன்னரை எனாஅ, | |
| 
அவர் படை வரூஉம்காலை, நும் படைக் | |
| 
கூழை தாங்கிய, அகல் யாற்றுக் | |
| 
5 | 
குன்று விலங்கு சிறையின் நின்றனை எனாஅ, | 
| 
அரிதால், பெரும! நின் செவ்வி என்றும்; | |
| 
பெரிதால் அத்தை, என் கடும்பினது இடும்பை; | |
| 
இன்னே விடுமதி பரிசில்! வென் வேல் | |
| 
இளம் பல் கோசர் விளங்கு படை கன்மார், | |
| 
10 | 
இகலினர் எறிந்த அகல் இலை முருக்கின் | 
| 
பெரு மரக் கம்பம் போல, | |
| 
பொருநர்க்கு உலையா நின் வலன் வாழியவே! | |
| 
திணை அது; துறை பரிசில் கடா நிலை.
 | |
| 
அவனைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.
 | 
| 
 170 | 
| 
மரை பிரித்து உண்ட நெல்லி வேலி, | |
| 
பரலுடை முன்றில், அம் குடிச் சீறூர், | |
| 
எல் அடிப்படுத்த கல்லாக் காட்சி | |
| 
வில் உழுது உண்மார் நாப்பண், ஒல்லென, | |
| 
5 | 
இழி பிறப்பாளன் கருங் கை சிவப்ப, | 
| 
வலி துரந்து சிலைக்கும் வன் கண் கடுந் துடி | |
| 
புலி துஞ்சு நெடு வரைக் குடிஞையோடு இரட்டும் | |
| 
மலை கெழு நாடன், கூர்வேல் பிட்டன், | |
| 
குறுகல் ஓம்புமின், தெவ்விர்! அவனே | |
| 
10 | 
சிறு கண் யானை வெண் கோடு பயந்த | 
| 
ஒளி திகழ் முத்தம் விறலியர்க்கு ஈத்து, | |
| 
நார் பிழிக் கொண்ட வெங் கள் தேறல் | |
| 
பண் அமை நல் யாழ்ப் பாண் கடும்பு அருத்தி, | |
| 
நசைவர்க்கு மென்மை அல்லது, பகைவர்க்கு | |
| 
15 | 
இரும்பு பயன் படுக்கும் கருங் கைக் கொல்லன் | 
| 
விசைத்து எறி கூடமொடு பொரூஉம் | |
| 
உலைக் கல் அன்ன, வல்லாளன்னே. | |
| 
திணை வாகை; துறை வல்லாண் முல்லை; தானைமறமும் ஆம்.
 | |
| 
அவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.
 | 
| 
 171 | 
| 
இன்று செலினும் தருமே; சிறு வரை | |
| 
நின்று செலினும் தருமே; பின்னும், | |
| 
'முன்னே தந்தனென்' என்னாது, துன்னி | |
| 
வைகலும் செலினும், பொய்யலன் ஆகி, | |
| 
5 | 
யாம் வேண்டியாங்கு எம் வறுங் கலம் நிறைப்போன்; | 
| 
தான் வேண்டியாங்குத் தன் இறை உவப்ப | |
| 
அருந் தொழில் முடியரோ, திருந்து வேல் கொற்றன்; | |
| 
இனம் மலி கதச் சேக் களனொடு வேண்டினும், | |
| 
களம் மலி நெல்லின் குப்பை வேண்டினும், | |
| 
10 | 
அருங் கலம் களிற்றொடு வேண்டினும், பெருந்தகை | 
| 
பிறர்க்கும் அன்ன அறத் தகையன்னே. | |
| 
அன்னன் ஆகலின், எந்தை உள் அடி | |
| 
முள்ளும் நோவ உறாற்கதில்ல! | |
| 
ஈவோர் அரிய இவ் உலகத்து, | |
| 
15 | 
வாழ்வோர் வாழ, அவன் தாள் வாழியவே! | 
| 
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
 | |
| 
அவனைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார் பாடியது.
 | 
| 
 172 | 
| 
ஏற்றுக உலையே; ஆக்குக சோறே; | |
| 
கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள் இழைப் | |
| 
பாடு வல் விறலியர் கோதையும் புனைக; | |
| 
அன்னவை பிறவும் செய்க; என்னதூஉம் | |
| 
5 | 
பரியல் வேண்டா; வரு பதம் நாடி, | 
| 
ஐவனம் காவலர் பெய் தீ நந்தின், | |
| 
ஒளி திகழ் திருந்து மணி நளிஇருள் அகற்றும் | |
| 
வன் புல நாடன், வய மான் பிட்டன்: | |
| 
ஆர் அமர் கடக்கும் வேலும், அவன் இறை | |
| 
10 | 
மா வள் ஈகைக் கோதையும், | 
| 
மாறுகொள் மன்னரும், வாழியர் நெடிதே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை வடம வண்ணக்கன் தாமோதரனார் பாடியது.
 |