| முகப்பு | தொடக்கம் | 
| 
புலன் அழுக்கு அற்ற அந்தணாளன் | 
| 
 126 | 
| 
ஒன்னார் யானை ஓடைப் பொன் கொண்டு, | |
| 
பாணர் சென்னி பொலியத் தைஇ, | |
| 
வாடாத் தாமரை சூட்டிய விழுச் சீர் | |
| 
ஓடாப் பூட்கை உரவோன் மருக! | |
| 
5 | 
வல்லேம் அல்லேம் ஆயினும், வல்லே | 
| 
நின்வயின் கிளக்குவமாயின், கங்குல் | |
| 
துயில் மடிந்தன்ன தூங்கு இருள் இறும்பின், | |
| 
பறை இசை அருவி, முள்ளூர்ப் பொருந! | |
| 
தெறல் அரு மரபின் நின் கிளையொடும் பொலிய, | |
| 
10 | 
நிலமிசைப் பரந்த மக்கட்கு எல்லாம் | 
| 
புலன் அழுக்கு அற்ற அந்தணாளன், | |
| 
இரந்து செல் மாக்கட்கு இனி இடன் இன்றி, | |
| 
பரந்து இசை நிற்கப் பாடினன்; அதற்கொண்டு | |
| 
சினம் மிகு தானை வானவன் குட கடல், | |
| 
15 | 
பொலம் தரு நாவாய் ஓட்டிய அவ் வழி, | 
| 
பிற கலம் செல்கலாது அனையேம் அத்தை, | |
| 
இன்மை துரப்ப, இசை தர வந்து, நின் | |
| 
வண்மையின் தொடுத்தனம், யாமே முள் எயிற்று | |
| 
அரவு எறி உருமின் முரசு எழுந்து இயம்ப, | |
| 
20 | 
அண்ணல் யானையொடு வேந்து களத்து ஒழிய, | 
| 
அருஞ் சமம் ததையத் தாக்கி, நன்றும் | |
| 
நண்ணாத் தெவ்வர்த் தாங்கும் | |
| 
பெண்ணை அம் படப்பை நாடு கிழவோயே! | |
| 
திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை.
 | |
| 
மலையமான் திருமுடிக் காரியை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
 |