| முகப்பு | தொடக்கம் | 
| 
பொறையாற்று கிழான் | 
| 
 391 | 
| 
தண் துளி பல பொழிந்து எழிலி இசைக்கும் | |
| 
விண்டு அனைய விண் தோய் பிறங்கல் | |
| 
முகடுற உயர்ந்த நெல்லின் மகிழ் வரப் | |
| 
பகடு தரு பெரு வளம் வாழ்த்தி, பெற்ற | |
| 
5 | 
திருந்தா மூரி பரந்து படக் கெண்டி, | 
| 
அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும் | |
| 
வேங்கட வரைப்பின் வட புலம் பசித்தென, | |
| 
ஈங்கு வந்து இறுத்த என் இரும் பேர் ஒக்கல் | |
| 
தீர்கை விடுக்கும் பண்பு இல முதுகுடி | |
| 
10 | 
நன...............................................வினவலின், | 
| 
'முன்னும் வந்தோன் மருங்கிலன், இன்னும் | |
| 
அளியன் ஆகலின், பொருநன் இவன்' என, | |
| 
நின் உணர்ந்து அறியுநர் என் உணர்ந்து கூற, | |
| 
காண்கு வந்திசின், பெரும!........................... | |
| 
15 | 
..........பெருங் கழி நுழைமீன் அருந்தும் | 
| 
துதைந்த தூவி அம் புதாஅம் சேக்கும் | |
| 
ததைந்த புனல் நின் செழு நகர் வரைப்பின், | |
| 
நெஞ்சு அமர் காதல் நின் வெய்யோளொடு, | |
| 
இன் துயி........................... ஞ்சால் | |
| 
20 | 
துளி பதன் அறிந்து பொழிய, | 
| 
வேலி ஆயிரம் விளைக, நின் வயலே! | |
| 
திணை அது; துறை கடைநிலை.
 | |
| 
பொறையாற்று கிழானைக் கல்லாடனார் பாடியது.
 |