| முகப்பு | தொடக்கம் | 
| 
மாவளத்தான் | 
| 
 43 | 
| 
நிலமிசை வாழ்நர் அலமரல் தீர, | |
| 
தெறு கதிர்க் கனலி வெம்மை தாங்கி, | |
| 
கால் உணவு ஆக, சுடரொடு கொட்கும் | |
| 
அவிர்சடை முனிவரும் மருள, கொடுந்சிறைக் | |
| 
5 | 
கூர் உகிர்ப் பருந்தின் ஏறு குறித்து, ஒரீஇ, | 
| 
தன் அகம் புக்க குறு நடைப் புறவின் | |
| 
தபுதி அஞ்சிச் சீரை புக்க | |
| 
வரையா ஈகை உரவோன் மருக! | |
| 
நேரார்க் கடந்த முரண் மிகு திருவின் | |
| 
10 | 
தேர் வண் கிள்ளி தம்பி! வார் கோல், | 
| 
கொடுமர மறவர் பெரும! கடு மான் | |
| 
கை வண் தோன்றல்! ஐயம் உடையேன்: | |
| 
'ஆர் புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம் | |
| 
பார்ப்பார் நோவன செய்யலர்; மற்று இது | |
| 
15 | 
நீர்த்தோ நினக்கு?' என வெறுப்பக் கூறி, | 
| 
நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும், | |
| 
நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே; | |
| 
'தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல் | |
| 
இக் குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணும்' என, | |
| 
20 | 
காண்தகு மொய்ம்ப! காட்டினை; ஆகலின், | 
| 
யானே பிழைத்தனென்; சிறக்க நின் ஆயுள் | |
| 
மிக்கு வரும் இன் நீர்க் காவிரி | |
| 
எக்கர் இட்ட மணலினும் பலவே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானும் தாமப்பல் கண்ணணும் வட்டுப் பொருவுழி, கை கரப்ப, வெகுண்டு வட்டுக் கொண்டு எறிந்தானை, 'சோழன் மகன் அல்லை, என, நாணியிருந்தானைத் தாமப்பல் கண்ணனார் பாடியது.
 |