| முகப்பு | தொடக்கம் | 
| 
விச்சிக்கோன் | 
| 
 200 | 
| 
பனி வரை நிவந்த பாசிலைப் பலவின் | |
| 
கனி கவர்ந்து உண்ட கரு விரல் கடுவன் | |
| 
செம் முக மந்தியொடு சிறந்து, சேண் விளங்கி, | |
| 
மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்து, | |
| 
5 | 
கழை மிசைத் துஞ்சும் கல்லக வெற்ப! | 
| 
நிணம் தின்று செருக்கிய நெருப்புத் தலை நெடு வேல், | |
| 
களம் கொண்டு கனலும் கடுங்கண் யானை, | |
| 
விளங்கு மணிக் கொடும் பூண், விச்சிக்கோவே! | |
| 
இவரே, பூத் தலை அறாஅப் புனை கொடி முல்லை | |
| 
10 | 
நாத் தழும்பு இருப்பப் பாடாதுஆயினும், | 
| 
'கறங்கு மணி நெடுந் தேர் கொள்க!' எனக் கொடுத்த | |
| 
பரந்து ஓங்கு சிறப்பின் பாரி மகளிர்; | |
| 
யானே, பரிசிலன், மன்னும் அந்தணன்; நீயே, | |
| 
வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன்; | |
| 
15 | 
நினக்கு யான் கொடுப்பக் கொண்மதி சினப் போர் | 
| 
அடங்கா மன்னரை அடக்கும் | |
| 
மடங்கா விளையுள் நாடு கிழவோயே! | |
| 
திணை அது; துறை பரிசில் துறை.
 | |
| 
பாரி மகளிரை விச்சிக் கோனுழைக் கொண்டு சென்ற கபிலர் பாடியது.
 |