முகப்பு | ![]() |
ஆனந்தப் பையுள் |
228 |
கலம் செய் கோவே! கலம் செய் கோவே! |
|
இருள் திணிந்தன்ன குரூஉத் திரள் பரூஉப் புகை |
|
அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளை, |
|
நனந் தலை மூதூர்க் கலம் செய் கோவே! |
|
5 |
அளியை நீயே; யாங்கு ஆகுவைகொல்? |
நிலவரை சூட்டிய நீள் நெடுந் தானைப் |
|
புலவர் புகழ்ந்த பொய்யா நல் இசை, |
|
விரி கதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்தன்ன |
|
சேண் விளங்கு சிறப்பின், செம்பியர் மருகன் |
|
10 |
கொடி நுடங்கு யானை நெடுமா வளவன் |
தேவர் உலகம் எய்தினன்ஆதலின், |
|
அன்னோற் கவிக்கும் கண் அகன் தாழி |
|
வனைதல் வேட்டனைஆயின், எனையதூஉம் |
|
இரு நிலம் திகிரியா, பெரு மலை |
|
15 |
மண்ணா, வனைதல் ஒல்லுமோ, நினக்கே? |
திணை அது; துறை ஆனந்தப்பையுள்.
| |
அவனை ஐயூர் முடவனார் பாடியது.
|
229 |
ஆடு இயல் அழல் குட்டத்து |
|
ஆர் இருள் அரை இரவில், |
|
முடப் பனையத்து வேர் முதலாக் |
|
கடைக் குளத்துக் கயம் காய, |
|
5 |
பங்குனி உயர் அழுவத்து, |
தலை நாள்மீன் நிலை திரிய, |
|
நிலை நாள்மீன் அதன் எதிர் ஏர்தர, |
|
தொல் நாள்மீன் துறை படிய, |
|
பாசிச் செல்லாது, ஊசித் துன்னாது, |
|
10 |
அளக்கர்த் திணை விளக்காகக் |
கனை எரி பரப்ப, கால் எதிர்பு பொங்கி, |
|
ஒரு மீன் வீழ்ந்தன்றால், விசும்பினானே; |
|
அது கண்டு, யாமும் பிறரும் பல் வேறு இரவலர், |
|
'பறை இசை அருவி நல் நாட்டுப் பொருநன் |
|
15 |
நோய் இலனாயின் நன்றுமன் தில்' என |
அழிந்த நெஞ்சம் மடிஉளம் பரப்ப, |
|
அஞ்சினம்; எழு நாள் வந்தன்று, இன்றே; |
|
மைந்துடை யானை கை வைத்து உறங்கவும், |
|
திண் பிணி முரசம் கண் கிழிந்து உருளவும், |
|
20 |
காவல் வெண்குடை கால் பரிந்து உலறவும், |
கால் இயல் கலி மாக் கதி இல வைகவும், |
|
மேலோர் உலகம் எய்தினன்; ஆகலின், |
|
ஒண் தொடி மகளிர்க்கு உறு துணை ஆகி, |
|
தன் துணை ஆயம் மறந்தனன்கொல்லோ |
|
25 |
பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல், நசைவர்க்கு |
அளந்து கொடை அறியா ஈகை, |
|
மணி வரை அன்ன மாஅயோனே? |
|
திணையும் துறையும் அவை.
| |
கோச் சேரமான் யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இன்ன நாளில் துஞ்சும் என அஞ்சி, அவன் துஞ்சிய இடத்து, கூடலூர் கிழார் பாடியது.
|
246 |
பல் சான்றீரே! பல் சான்றீரே! |
|
'செல்க' எனச் சொல்லாது, 'ஒழிக' என விலக்கும், |
|
பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே! |
|
அணில் வரிக் கொடுங் காய் வாள் போழ்ந்திட்ட |
|
5 |
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது, |
அடை இடைக் கிடந்த கை பிழி பிண்டம், |
|
வெள் எள் சாந்தொடு, புளிப் பெய்து அட்ட |
|
வேளை வெந்தை, வல்சி ஆக, |
|
பரல் பெய் பள்ளிப் பாய் இன்று வதியும் |
|
10 |
உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ; |
பெருங் காட்டுப் பண்ணிய கருங் கோட்டு ஈமம் |
|
நுமக்கு அரிதாகுக தில்ல; எமக்கு எம் |
|
பெருந் தோள் கணவன் மாய்ந்தென, அரும்பு அற |
|
வள் இதழ் அவிழ்ந்த தாமரை |
|
15 |
நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே! |
திணை அது; துறை ஆனந்தப்பையுள்.
| |
பூத பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தீப் பாய்வாள் சொல்லியது.
|
247 |
யானை தந்த முளி மர விறகின் |
|
கானவர் பொத்திய ஞெலி தீ விளக்கத்து, |
|
மட மான் பெரு நிரை வைகு துயில் எடுப்பி, |
|
மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில், |
|
5 |
நீர் வார் கூந்தல் இரும் புறம் தாழ, |
பேர் அஞர்க் கண்ணள், பெருங் காடு நோக்கி, |
|
தெருமரும் அம்ம தானே தன் கொழுநன் |
|
முழவு கண் துயிலாக் கடியுடை வியல் நகர்ச் |
|
சிறு நனி தமியள் ஆயினும், |
|
10 |
இன் உயிர் நடுங்கும் தன் இளமை புறங்கொடுத்தே! |
திணையும் துறையும் அவை.
| |
அவள் தீப் பாய்வாளைக் கண்டு மதுரைப் பேராலவாயார் சொல்லியது.
|
280 |
என்னை மார்பில் புண்ணும் வெய்ய; |
|
நடு நாள் வந்து தும்பியும் துவைக்கும்; |
|
நெடு நகர் வரைப்பின் விளக்கும் நில்லா; |
|
துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்; |
|
5 |
அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும்; |
நெல் நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும் |
|
செம் முது பெண்டின் சொல்லும் நிரம்பா; |
|
துடிய! பாண! பாடு வல் விறலி! |
|
என் ஆகுவிர்கொல்? அளியிர்; நுமக்கும் |
|
10 |
இவண் உறை வாழ்க்கையோ, அரிதே! யானும் |
மண்ணுறு மழித் தலைத் தெண் நீர் வார, |
|
தொன்று தாம் உடுத்த அம் பகைத் தெரியல் |
|
சிறு வெள் ஆம்பல் அல்லி உண்ணும் |
|
கழி கல மகளிர் போல, |
|
15 |
வழி நினைந்திருத்தல், அதனினும் அரிதே! |
திணை பொதுவியல்; துறை ஆனந்தப்பையுள்.
| |
மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
|