முகப்பு | ![]() |
இயன் மொழி |
8 |
வையம் காவலர் வழிமொழிந்து ஒழுக, |
|
போகம் வேண்டி, பொதுச் சொல் பொறாஅது, |
|
இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப, |
|
ஒடுங்கா உள்ளத்து, ஓம்பா ஈகை, |
|
5 |
கடந்து அடு தானைச் சேரலாதனை |
யாங்கனம் ஒத்தியோ? வீங்கு செலல் மண்டிலம்! |
|
பொழுது என வரைதி; புறக்கொடுத்து இறத்தி; |
|
மாறி வருதி; மலை மறைந்து ஒளித்தி; |
|
அகல் இரு விசும்பினானும் |
|
10 |
பகல் விளங்குதியால், பல் கதிர் விரித்தே. |
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி; பூவை நிலையும் ஆம்.
| |
சேரமான் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடியது.
|
9 |
'ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும், |
|
பெண்டிரும், பிணியுடையீரும், பேணித் |
|
தென் புல வாழ்நர்க்கு அருங் கடன் இறுக்கும் |
|
பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும், |
|
5 |
எம் அம்பு கடி விடுதும், நும் அரண் சேர்மின்' என, |
அறத்து ஆறு நுவலும் பூட்கை, மறத்தின் |
|
கொல் களிற்று மீமிசைக் கொடி விசும்பு நிழற்றும் |
|
எம் கோ, வாழிய, குடுமி தம் கோச் |
|
செந் நீர்ப் பசும் பொன் வயிரியர்க்கு ஈத்த, |
|
10 |
முந்நீர் விழவின், நெடியோன் |
நல் நீர்ப் பஃறுளி மணலினும் பலவே! |
|
திணையும் துறையும் அவை.
| |
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.
|
10 |
வழிபடுவோரை வல் அறிதீயே; |
|
பிறர் பழி கூறுவோர் மொழி தேறலையே; |
|
நீ மெய் கண்ட தீமை காணின்; |
|
ஒப்ப நாடி, அத் தக ஒறுத்தி; |
|
5 |
வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின், |
தண்டமும் தணிதி, நீ பண்டையின் பெரிதே |
|
அமிழ்து அட்டு ஆனாக் கமழ் குய் அடிசில் |
|
வருநர்க்கு வரையா வசை இல் வாழ்க்கை |
|
மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர் |
|
10 |
மலைத்தல் போகிய, சிலைத் தார் மார்ப! |
செய்து இரங்கா வினை, சேண் விளங்கும் புகழ், |
|
நெய்தலங்கானல் நெடியோய்! |
|
எய்த வந்தனம் யாம்; ஏத்துகம் பலவே! |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.
|
12 |
பாணர் தாமரை மலையவும், புலவர் |
|
பூ நுதல் யானையொடு புனை தேர் பண்ணவும், |
|
அறனோ மற்று இது விறல் மாண் குடுமி! |
|
இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு, |
|
5 |
இனிய செய்தி, நின் ஆர்வலர் முகத்தே? |
திணை அது; துறை இயன்மொழி.
| |
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.
|
14 |
கடுங் கண்ண கொல் களிற்றால் |
|
காப்பு உடைய எழு முருக்கி, |
|
பொன் இயல் புனை தோட்டியால் |
|
முன்பு துரந்து, சமம் தாங்கவும்; |
|
5 |
பார் உடைத்த குண்டு அகழி |
நீர் அழுவ நிவப்புக் குறித்து, |
|
நிமிர் பரிய மா தாங்கவும்; |
|
ஆவம் சேர்ந்த புறத்தை தேர் மிசைச் |
|
சாப நோன் ஞாண் வடுக் கொள வழங்கவும்; |
|
10 |
பரிசிலர்க்கு அருங் கலம் நல்கவும்; குரிசில்! |
வலிய ஆகும், நின் தாள் தோய் தடக் கை. |
|
புலவு நாற்றத்த பைந் தடி |
|
பூ நாற்றத்த புகை கொளீஇ, ஊன் துவை |
|
கறி சோறு உண்டு வருந்து தொழில் அல்லது, |
|
15 |
பிறிது தொழில் அறியா ஆகலின், நன்றும் |
மெல்லிய பெரும! தாமே. நல்லவர்க்கு |
|
ஆர் அணங்கு ஆகிய மார்பின், பொருநர்க்கு |
|
இரு நிலத்து அன்ன நோன்மை, |
|
செரு மிகு சேஎய்! நிற் பாடுநர் கையே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் கபிலர் கைப் பற்றி, 'மெல்லியவாமால் நூம்கை' என, கபிலர் பாடியது.
|
15 |
கடுந் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண், |
|
வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி, |
|
பாழ் செய்தனை, அவர் நனந் தலை நல் எயில்; |
|
புள்ளினம் இமிழும் புகழ்சால் விளை வயல், |
|
5 |
வெள் உளைக் கலி மான் கவி குளம்பு உகளத் |
தேர் வழங்கினை, நின் தெவ்வர் தேஎத்து; |
|
துளங்கு இயலான், பணை எருத்தின், |
|
பாவு அடியான், செறல் நோக்கின், |
|
ஒளிறு மருப்பின் களிறு அவர |
|
10 |
காப்பு உடைய கயம் படியினை; |
அன்ன சீற்றத்து அனையை; ஆகலின், |
|
விளங்கு பொன் எறிந்த நலம் கிளர் பலகையொடு |
|
நிழல் படு நெடு வேல் ஏந்தி, ஒன்னார் |
|
ஒண் படைக் கடுந் தார் முன்பு தலைக் கொண்மார், |
|
15 |
நசை தர வந்தோர் நசை பிறக்கு ஒழிய, |
வசை பட வாழ்ந்தோர் பலர்கொல்? புரை இல் |
|
நல் பனுவல், நால் வேதத்து, |
|
அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை |
|
நெய்ம் மலி ஆவுதி பொங்க, பல் மாண் |
|
20 |
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி, |
யூபம் நட்ட வியன் களம் பலகொல்? |
|
யா பலகொல்லோ? பெரும! வார் உற்று |
|
விசி பிணிக்கொண்ட மண் கனை முழவின் |
|
பாடினி பாடும் வஞ்சிக்கு |
|
25 |
நாடல் சான்ற மைந்தினோய்! நினக்கே. |
திணையும் துறையும் அவை.
| |
பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.
|
17 |
தென் குமரி, வட பெருங்கல், |
|
குண குட கடலா எல்லை, |
|
குன்று, மலை, காடு, நாடு, |
|
ஒன்று பட்டு வழிமொழிய, |
|
5 |
கொடிது கடிந்து, கோல் திருத்தி, |
படுவது உண்டு, பகல் ஆற்றி, |
|
இனிது உருண்ட சுடர் நேமி |
|
முழுது ஆண்டோர் வழி காவல! |
|
குலை இறைஞ்சிய கோள் தாழை |
|
10 |
அகல் வயல், மலை வேலி, |
நிலவு மணல் வியன் கானல், |
|
தெண் கழிமிசைத் தீப் பூவின், |
|
தண் தொண்டியோர் அடு பொருந! |
|
மாப் பயம்பின் பொறை போற்றாது, |
|
15 |
நீடு குழி அகப்பட்ட |
பீடு உடைய எறுழ் முன்பின், |
|
கோடு முற்றிய கொல் களிறு |
|
நிலை கலங்கக் குழி கொன்று, |
|
கிளை புகலத் தலைக்கூடியாங்கு |
|
20 |
நீ பட்ட அரு முன்பின் |
பெருந் தளர்ச்சி, பலர் உவப்ப, |
|
பிறிது சென்று, மலர் தாயத்துப் |
|
பலர் நாப்பண் மீக்கூறலின், |
|
'உண்டாகிய உயர் மண்ணும், |
|
25 |
சென்று பட்ட விழுக் கலனும், |
பெறல் கூடும், இவன் நெஞ்சு உறப் பெறின்' எனவும், |
|
'ஏந்து கொடி இறைப்புரிசை, |
|
வீங்கு சிறை, வியல்அருப்பம், |
|
இழந்து வைகுதும், இனி நாம் இவன் |
|
30 |
உடன்று நோக்கினன், பெரிது' எனவும், |
வேற்று அரசு பணி தொடங்கு நின் |
|
ஆற்றலொடு புகழ் ஏத்தி, |
|
காண்கு வந்திசின், பெரும! ஈண்டிய |
|
மழை என மருளும் பல் தோல், மலை எனத் |
|
35 |
தேன் இறை கொள்ளும் இரும் பல் யானை, |
உடலுநர் உட்க வீங்கி, கடல் என |
|
வான் நீர்க்கு ஊக்கும் தானை, ஆனாது |
|
கடு ஒடுங்கு எயிற்ற அரவுத் தலை பனிப்ப, |
|
இடி என முழங்கும் முரசின், |
|
40 |
வரையா ஈகைக் குடவர் கோவே! |
திணை வாகை; துறை அரச வாகை; இயன்மொழியும் ஆம்.
| |
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் பிணியிருந்த யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை வலிதின் போய்க் கட்டில் எய்தினானைக் குறுங்கோழியூர் கிழார் பாடியது.
|
22 |
தூங்கு கையான் ஓங்கு நடைய, |
|
உறழ் மணியான் உயர் மருப்பின, |
|
பிறை நுதலான் செறல் நோக்கின, |
|
பா அடியான் பணை எருத்தின, |
|
5 |
தேன் சிதைந்த வரை போல, |
மிஞிறு ஆர்க்கும் கமழ் கடாத்து, |
|
அயறு சோரும் இருஞ் சென்னிய, |
|
மைந்து மலிந்த மழ களிறு |
|
கந்து சேர்பு நிலைஇ வழங்க; |
|
10 |
பாஅல் நின்று கதிர் சோரும் |
வான் உறையும் மதி போலும் |
|
மாலை வெண் குடை நீழலான், |
|
வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க; |
|
அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த |
|
15 |
ஆய் கரும்பின் கொடிக் கூரை, |
சாறு கொண்ட களம் போல, |
|
வேறு வேறு பொலிவு தோன்ற; |
|
குற்று ஆனா உலக்கையான் |
|
கலிச் சும்மை வியல் ஆங்கண், |
|
20 |
பொலந் தோட்டுப் பைந் தும்பை |
மிசை அலங்கு உளைய பனைப் போழ் செரீஇ, |
|
சின மாந்தர் வெறிக் குரவை |
|
ஓத நீரின் பெயர்பு பொங்க; |
|
வாய் காவாது பரந்து பட்ட |
|
25 |
வியன் பாசறைக் காப்பாள! |
வேந்து தந்த பணி திறையான் |
|
சேர்ந்தவர்தம் கடும்பு ஆர்த்தும், |
|
ஓங்கு கொல்லியோர், அடு பொருந! |
|
வேழ நோக்கின் விறல் வெஞ் சேஎய்! |
|
30 |
வாழிய, பெரும! நின் வரம்பு இல் படைப்பே, |
நிற் பாடிய வயங்கு செந் நாப் |
|
பின் பிறர் இசை நுவலாமை, |
|
ஓம்பாது ஈயும் ஆற்றல் எம் கோ! |
|
'மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே |
|
35 |
புத்தேள் உலகத்து அற்று' எனக் கேட்டு வந்து, |
இனிது கண்டிசின்; பெரும! முனிவு இலை, |
|
வேறு புலத்து இறுக்கும் தானையொடு, |
|
சோறு பட நடத்தி நீ துஞ்சாய்மாறே! |
|
திணையும் துறையும் அவை; துறை இயன்மொழியும் ஆம்.
| |
சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைக் குறுங் கோழியூர் கிழார் பாடியது.
|
30 |
செஞ் ஞாயிற்றுச் செலவும், |
|
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும், |
|
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும், |
|
வளி திரிதரு திசையும், |
|
5 |
வறிது நிலைஇய காயமும், என்று இவை |
சென்று அளந்து அறிந்தோர் போல, என்றும் |
|
இனைத்து என்போரும் உளரே; அனைத்தும் |
|
அறி அறிவு ஆகாச் செறிவினை ஆகி, |
|
களிறு கவுள் அடுத்த எறிகல் போல |
|
10 |
ஒளித்த துப்பினைஆதலின், வெளிப்பட |
யாங்ஙனம் பாடுவர், புலவர்? கூம்பொடு |
|
மீப் பாய் களையாது மிசைப் பரம் தோண்டாது |
|
புகாஅர்ப் புகுந்த பெருங் கலம் தகாஅர் |
|
இடைப் புலப் பெரு வழிச் சொரியும் |
|
15 |
கடல் பல் தாரத்த நாடு கிழவோயே! |
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி
| |
அவனை அவர் பாடியது.
|
32 |
கடும்பின் அடுகலம் நிறையாக, நெடுங் கொடிப் |
|
பூவா வஞ்சியும் தருகுவன்; ஒன்றோ? |
|
'வண்ணம் நீவிய வணங்கு இறைப் பணைத் தோள், |
|
ஒள் நுதல், விறலியர் பூவிலை பெறுக!' என, |
|
5 |
மாட மதுரையும் தருகுவன்; எல்லாம் |
பாடுகம் வம்மினோ, பரிசில் மாக்கள்! |
|
தொல் நிலக் கிழமை சுட்டின், நல் மதி |
|
வேட்கோச் சிறாஅர் தேர்க் கால் வைத்த |
|
பசு மண் குரூஉத் திரள் போல, அவன் |
|
10 |
கொண்ட குடுமித்து, இத் தண் பணை நாடே. |
திணை பாடாண்திணை; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|
34 |
'ஆன் முலை அறுத்த அறனிலோர்க்கும், |
|
மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும், |
|
பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும், |
|
வழுவாய் மருங்கில் கழுவாயும் உள' என, |
|
5 |
'நிலம் புடைபெயர்வது ஆயினும், ஒருவன் |
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்' என, |
|
அறம் பாடின்றே ஆயிழை கணவ! |
|
'காலை அந்தியும், மாலை அந்தியும், |
|
புறவுக் கரு அன்ன புன் புல வரகின் |
|
10 |
பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி, |
குறு முயல் கொழுஞ் சூடு கிழித்த ஒக்கலொடு, |
|
இரத்தி நீடிய அகன் தலை மன்றத்து, |
|
கரப்பு இல் உள்ளமொடு வேண்டு மொழி பயிற்றி, |
|
அமலைக் கொழுஞ் சோறு ஆர்ந்த பாணர்க்கு |
|
15 |
அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன், |
எம் கோன், வளவன் வாழ்க!' என்று, நின் |
|
பீடு கெழு நோன் தாள் பாடேன் ஆயின், |
|
படுபு அறியலனே, பல் கதிர்ச் செல்வன்; |
|
யானோ தஞ்சம்; பெரும! இவ் உலகத்து, |
|
20 |
சான்றோர் செய்த நன்று உண்டாயின், |
இமயத்து ஈண்டி, இன் குரல் பயிற்றி, |
|
கொண்டல் மா மழை பொழிந்த |
|
நுண் பல் துளியினும் வாழிய, பலவே! |
|
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
| |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.
|
38 |
வரை புரையும் மழ களிற்றின் மிசை, |
|
வான் துடைக்கும் வகைய போல, |
|
விரவு உருவின கொடி நுடங்கும் |
|
வியன் தானை விறல் வேந்தே! |
|
5 |
நீ, உடன்று நோக்கும்வாய் எரி தவழ, |
நீ, நயந்து நோக்கும்வாய் பொன் பூப்ப, |
|
செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும், |
|
வெண் திங்களுள் வெயில் வேண்டினும், |
|
வேண்டியது விளைக்கும் ஆற்றலைஆகலின், |
|
10 |
நின் நிழல் பிறந்து, நின் நிழல் வளர்ந்த, |
எம் அளவு எவனோ மற்றே? 'இன் நிலைப் |
|
பொலம் பூங் காவின் நல் நாட்டோரும் |
|
செய் வினை மருங்கின் எய்தல் அல்லதை, |
|
உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும் |
|
15 |
கடவது அன்மையின், கையறவு உடைத்து' என, |
ஆண்டுச் செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின், |
|
நின் நாடு உள்ளுவர், பரிசிலர் |
|
ஒன்னார் தேஎத்தும், நின்னுடைத்து எனவே. |
|
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
| |
அவன், 'எம் உள்ளீர்? எம் நாட்டீர்?' என்றாற்கு ஆவூர் மூலங்கிழார் பாடியது.
|
39 |
புறவின் அல்லல் சொல்லிய, கறை அடி |
|
யானை வால் மருப்பு எறிந்த வெண் கடைக் |
|
கோல் நிறை துலாஅம் புக்கோன் மருக! |
|
ஈதல் நின் புகழும் அன்றே; சார்தல் |
|
5 |
ஒன்னார் உட்கும் துன் அருங் கடுந் திறல் |
தூங்கு எயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின், |
|
அடுதல் நின் புகழும் அன்றே; கெடு இன்று, |
|
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து, |
|
அறம் நின்று நிலையிற்று ஆகலின், அதனால் |
|
10 |
முறைமை நின் புகழும் அன்றே; மறம் மிக்கு |
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள், |
|
கண் ஆர் கண்ணி, கலி மான், வளவ! |
|
யாங்கனம் மொழிகோ யானே ஓங்கிய |
|
வரை அளந்து அறியாப் பொன் படு நெடுங் கோட்டு |
|
15 |
இமயம் சூட்டிய ஏம விற்பொறி, |
மாண் வினை நெடுந் தேர், வானவன் தொலைய, |
|
வாடா வஞ்சி வாட்டும் நின் |
|
பீடு கெழு நோன் தாள் பாடுங்காலே? |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
|
49 |
நாடன் என்கோ? ஊரன் என்கோ? |
|
பாடு இமிழ் பனிக் கடல் சேர்ப்பன் என்கோ? |
|
யாங்கனம் மொழிகோ, ஓங்கு வாள் கோதையை? |
|
புனவர் தட்டை புடைப்பின், அயலது |
|
5 |
இறங்கு கதிர் அலமரு கழனியும், |
பிறங்கு நீர்ச் சேர்ப்பினும், புள் ஒருங்கு எழுமே! |
|
திணையும் துறையும் அவை; துறை இயன்மொழியும் ஆம்.
| |
அவனை அவர் பாடியது.
|
50 |
மாசு அற விசித்த வார்புறு வள்பின் |
|
மை படு மருங்குல் பொலிய, மஞ்ஞை |
|
ஒலி நெடும் பீலி ஒண் பொறி மணித் தார், |
|
பொலங் குழை உழிஞையொடு, பொலியச் சூட்டி, |
|
5 |
குருதி வேட்கை உரு கெழு முரசம் |
மண்ணி வாரா அளவை, எண்ணெய் |
|
நுரை முகந்தன்ன மென் பூஞ் சேக்கை |
|
அறியாது ஏறிய என்னைத் தெறுவர, |
|
இரு பாற்படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததை |
|
10 |
அதூஉம் சாலும், நல் தமிழ் முழுது அறிதல்; |
அதனொடும் அமையாது, அணுக வந்து, நின் |
|
மதனுடை முழவுத்தோள் ஓச்சி, தண்ணென |
|
வீசியோயே; வியலிடம் கமழ, |
|
இவண் இசை உடையோர்க்கு அல்லது, அவணது |
|
15 |
உயர் நிலை உலகத்து உறையுள் இன்மை |
விளங்கக் கேட்ட மாறுகொல் |
|
வலம் படு குருசில்! நீ ஈங்கு இது செயலே? |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
சேரமான் தகடூர் எறிந்த பெருஞ் சேரல் இரும்பொறை முரசுகட்டில் அறியாது ஏறிய மோசிகீரனைத் தவறு செய்யாது, அவன் துயில் எழுந்துணையும் கவரி கொண்டு வீசியானை மோசிகீரனார் பாடியது.
|
67 |
அன்னச் சேவல்! அன்னச் சேவல்! |
|
ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல் |
|
நாடு தலை அளிக்கும் ஒள் முகம் போல, |
|
கோடு கூடு மதியம் முகிழ் நிலா விளங்கும் |
|
5 |
மையல் மாலை, யாம் கையறுபு இனைய, |
குமரிஅம் பெருந் துறை அயிரை மாந்தி, |
|
வடமலைப் பெயர்குவைஆயின், இடையது |
|
சோழ நல் நாட்டுப் படினே, கோழி |
|
உயர் நிலை மாடத்து, குறும்பறை அசைஇ, |
|
10 |
வாயில் விடாது கோயில் புக்கு, எம் |
பெருங் கோக் கிள்ளி கேட்க, 'இரும் பிசிர் |
ஆந்தை அடியுறை' எனினே, மாண்ட நின் |
இன்புறு பேடை அணிய, தன் |
|
அன்புறு நன் கலம் நல்குவன் நினக்கே. |
|
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
| |
கோப்பெருஞ் சோழனைப் பிசிராந்தையார் பாடியது.
|
92 |
யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா; |
|
பொருள் அறிவாரா; ஆயினும், தந்தையர்க்கு |
|
அருள் வந்தனவால், புதல்வர்தம் மழலை; |
|
என் வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார் |
|
5 |
கடி மதில் அரண் பல கடந்த |
நெடுமான் அஞ்சி! நீ அருளல்மாறே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|
96 |
அலர் பூந் தும்பை அம் பகட்டு மார்பின், |
|
திரண்டு நீடு தடக்கை, என்னை இளையோற்கு |
|
இரண்டு எழுந்தனவால், பகையே: ஒன்றே, |
|
பூப் போல் உண்கண் பசந்து, தோள் நுணுகி, |
|
5 |
நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று; ஒன்றே, |
'விழவின்றுஆயினும், படு பதம் பிழையாது, |
|
மை ஊன் மொசித்த ஒக்கலொடு, துறை நீர்க் |
|
கைமான் கொள்ளுமோ?' என, |
|
உறையுள் முனியும், அவன் செல்லும் ஊரே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவன் மகன் பொகுட்டெழினியை அவர் பாடியது.
|
97 |
போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள், |
|
உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின், |
|
ஊன் உற மூழ்கி, உரு இழந்தனவே; |
|
வேலே, குறும்பு அடைந்த அரண் கடந்து, அவர் |
|
5 |
நறுங் கள்ளின் நாடு நைத்தலின், |
சுரை தழீஇய இருங் காழொடு |
|
மடை கலங்கி நிலை திரிந்தனவே; |
|
களிறே, எழூஉத் தாங்கிய கதவம் மலைத்து, அவர் |
|
குழூஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின், |
|
10 |
பரூஉப் பிணிய தொடி கழிந்தனவே; |
மாவே, பரந்து ஒருங்கு மலைந்த மறவர் |
|
பொலம் பைந் தார் கெடப் பரிதலின், |
|
களன் உழந்து அசைஇய மறுக் குளம்பினவே; |
|
அவன் தானும், நிலம் திரைக்கும் கடல் தானைப் |
|
15 |
பொலந் தும்பைக் கழல் பாண்டில் |
கணை பொருத துளைத் தோலன்னே. |
|
ஆயிடை, உடன்றோர் உய்தல் யாவது? 'தடந் தாள், |
|
பிணிக் கதிர், நெல்லின் செம்மல் மூதூர் |
|
நுமக்கு உரித்தாகல் வேண்டின், சென்று அவற்கு |
|
20 |
இறுக்கல் வேண்டும், திறையே; மறுப்பின், |
ஒல்வான் அல்லன், வெல்போரான்' எனச் |
|
சொல்லவும் தேறீராயின், மெல் இயல், |
|
கழல் கனி வகுத்த துணைச் சில் ஓதி, |
|
குறுந் தொடி மகளிர் தோள் விடல் |
|
25 |
இறும்பூது அன்று; அஃது அறிந்து ஆடுமினே. |
திணையும் துறையும் அவை.
| |
அதியமான் நெடுமான் அஞ்சியை அவர் பாடியது.
|
102 |
'எருதே இளைய; நுகம் உணராவே; |
|
சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே; |
|
அவல் இழியினும், மிசை ஏறினும், |
|
அவணது அறியுநர் யார்?' என, உமணர் |
|
5 |
கீழ் மரத்து யாத்த சேம அச்சு அன்ன, |
இசை விளங்கு கவி கை நெடியோய்! திங்கள் |
|
நாள் நிறை மதியத்து அனையை; இருள் |
|
யாவணதோ, நின் நிழல் வாழ்வோர்க்கே? |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவன் மகன் பொகுட்டெழினியை அவர் பாடியது.
|
106 |
நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப் |
|
புல் இலை எருக்கம் ஆயினும், உடையவை |
|
கடவுள் பேணேம் என்னா; ஆங்கு, |
|
மடவர் மெல்லியர் செல்லினும், |
|
5 |
கடவன், பாரி கை வண்மையே. |
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|
107 |
'பாரி பாரி' என்று பல ஏத்தி, |
|
ஒருவற் புகழ்வர், செந் நாப் புலவர்; |
|
பாரி ஒருவனும் அல்லன்; |
|
மாரியும் உண்டு, ஈண்டு உலகு புரப்பதுவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
108 |
குறத்தி மாட்டிய வறல் கடைக் கொள்ளி |
|
ஆரம் ஆதலின், அம் புகை அயலது |
|
சாரல் வேங்கைப் பூஞ் சினைத் தவழும் |
|
பறம்பு பாடினரதுவே; அறம் பூண்டு, |
|
5 |
பாரியும், பரிசிலர் இரப்பின், |
'வாரேன்' என்னான், அவர் வரையன்னே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
122 |
கடல் கொளப்படாஅது, உடலுநர் ஊக்கார், |
|
கழல் புனை திருந்து அடிக் காரி! நின் நாடே; |
|
அழல் புறந்தரூஉம் அந்தணரதுவே; |
|
வீயாத் திருவின் விறல் கெழு தானை |
|
5 |
மூவருள் ஒருவன், 'துப்பு ஆகியர்' என, |
ஏத்தினர் தரூஉம் கூழே, நும் குடி |
|
வாழ்த்தினர் வரூஉம் இரவலரதுவே; |
|
வடமீன் புரையும் கற்பின், மட மொழி, |
|
அரிவை தோள் அளவு அல்லதை, |
|
10 |
நினது என இலை நீ பெருமிதத்தையே. |
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|
123 |
நாள் கள் உண்டு, நாள் மகிழ் மகிழின், |
|
யார்க்கும் எளிதே, தேர் ஈதல்லே; |
|
தொலையா நல் இசை விளங்கு மலையன் |
|
மகிழாது ஈத்த இழை அணி நெடுந் தேர் |
|
5 |
பயன் கெழு முள்ளூர் மீமிசைப் |
பட்ட மாரி உறையினும் பலவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
124 |
நாள் அன்று போகி, புள் இடை தட்ப, |
|
பதன் அன்று புக்கு, திறன் அன்று மொழியினும், |
|
வறிது பெயர்குநர்அல்லர் நெறி கொளப் |
|
பாடு ஆன்று, இரங்கும் அருவிப் |
|
5 |
பீடு கெழு மலையன் பாடியோரே. |
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
128 |
மன்றப் பலவின் மாச் சினை மந்தி |
|
இரவலர் நாற்றிய விசி கூடு முழவின் |
|
பாடு இன் தெண் கண், கனி செத்து, அடிப்பின், |
|
அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும், |
|
5 |
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் |
ஆடுமகள் குறுகின் அல்லது, |
|
பீடு கெழு மன்னர் குறுகலோ அரிதே. |
|
திணை அது; துறை வாழ்த்து; இயன்மொழியும் ஆம்.
| |
அவனை அவர் பாடியது.
|
129 |
குறி இறைக் குரம்பைக் குறவர் மாக்கள் |
|
வாங்கு அமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து, |
|
வேங்கை முன்றில் குரவை அயரும், |
|
தீம் சுளைப் பலவின், மா மலைக் கிழவன் |
|
5 |
ஆஅய் அண்டிரன், அடு போர் அண்ணல் |
இரவலர்க்கு ஈத்த யானையின், கரவு இன்று, |
|
வானம் மீன் பல பூப்பின், ஆனாது |
|
ஒரு வழிக் கரு வழி இன்றிப் |
|
பெரு வெள்ளென்னின், பிழையாது மன்னே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|
130 |
விளங்கு மணிக் கொடும் பூண் ஆஅய்! நின் நாட்டு |
|
இளம் பிடி ஒரு சூல் பத்து ஈனும்மோ? |
|
நின்னும் நின்மலையும் பாடி வருநர்க்கு, |
|
இன் முகம் கரவாது, உவந்து நீ அளித்த |
|
5 |
அண்ணல் யானை எண்ணின், கொங்கர்க் |
குட கடல் ஓட்டிய ஞான்றைத் |
|
தலைப்பெயர்த்திட்ட வேலினும் பலவே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
131 |
மழைக் கணம் சேக்கும் மா மலைக் கிழவன், |
|
வழைப் பூங் கண்ணி வாய் வாள் அண்டிரன், |
|
குன்றம் பாடினகொல்லோ |
|
களிறு மிக உடைய இக் கவின் பெறு காடே? |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
132 |
முன் உள்ளுவோனைப் பின் உள்ளினேனே! |
|
ஆழ்க, என் உள்ளம்! போழ்க, என் நாவே! |
|
பாழ் ஊர்க் கிணற்றின் தூர்க, என் செவியே! |
|
நரந்தை நறும் புல் மேய்ந்த கவரி |
|
5 |
குவளைப் பைஞ் சுனை பருகி, அயல |
தகரத் தண் நிழல் பிணையொடு வதியும் |
|
வட திசையதுவே வான் தோய் இமயம். |
|
தென் திசை ஆஅய் குடி இன்றாயின், |
|
பிறழ்வது மன்னோ, இம் மலர் தலை உலகே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
134 |
அற விலை வணிகன் ஆஅய் அல்லன்; |
|
பிறரும் சான்றோர் சென்ற நெறி என, |
|
ஆங்குப் பட்டன்று, அவன் கைவண்மையே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|
137 |
இரங்கு முரசின், இனம்சால் யானை, |
|
முந்நீர் ஏணி விறல் கெழு மூவரை |
|
இன்னும் ஓர் யான் அவா அறியேனே; |
|
நீயே, முன் யான் அறியுமோனே துவன்றிய |
|
5 |
கயத்து இட்ட வித்து வறத்தின் சாவாது, |
கழைக் கரும்பின் ஒலிக்குந்து, |
|
கொண்டல் கொண்ட நீர் கோடை காயினும், |
|
கண் அன்ன மலர் பூக்குந்து, |
|
கருங் கால் வேங்கை மலரின், நாளும் |
|
10 |
பொன் அன்ன வீ சுமந்து, |
மணி அன்ன நீர் கடல் படரும்; |
|
செவ் வரைப் படப்பை நாஞ்சில் பொருந! |
|
சிறு வெள் அருவிப் பெருங் கல் நாடனை! |
|
நீ வாழியர்! நின் தந்தை |
|
15 |
தாய் வாழியர், நிற் பயந்திசினோரே! |
திணை அது; துறை இயன்மொழி; பரிசில் துறையும் ஆம்.
| |
நாஞ்சில் வள்ளுவனை ஒரு சிறைப் பெரியனார் பாடியது.
|
142 |
அறு குளத்து உகுத்தும், அகல் வயல் பொழிந்தும், |
|
உறும் இடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும், |
|
வரையா மரபின் மாரிபோல, |
|
கடாஅ யானைக் கழல் கால் பேகன் |
|
5 |
கொடைமடம் படுதல் அல்லது, |
படைமடம் படான், பிறர் படை மயக்குறினே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|
149 |
நள்ளி! வாழியோ; நள்ளி! நள்ளென் |
|
மாலை மருதம் பண்ணி, காலை |
|
கைவழி மருங்கின் செவ்வழி பண்ணி, |
|
வரவு எமர் மறந்தனர் அது நீ |
|
5 |
புரவுக் கடன் பூண்ட வண்மையானே. |
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|
150 |
கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு அன்ன |
|
பாறிய சிதாரேன், பலவு முதல் பொருந்தி, |
|
தன்னும் உள்ளேன், பிறிது புலம் படர்ந்த என் |
|
உயங்கு படர் வருத்தமும் உலைவும் நோக்கி, |
|
5 |
மான் கணம் தொலைச்சிய குருதி அம் கழல் கால், |
வான் கதிர்த் திரு மணி விளங்கும் சென்னி, |
|
செல்வத் தோன்றல், ஓர் வல் வில் வேட்டுவன், |
|
தொழுதனென் எழுவேற் கை கவித்து இரீஇ, |
|
இழுதின் அன்ன வால் நிணக் கொழுங் குறை, |
|
10 |
கான் அதர் மயங்கிய இளையர் வல்லே |
தாம் வந்து எய்தாஅளவை, ஒய்யெனத் |
|
தான் ஞெலி தீயின் விரைவனன் சுட்டு, 'நின் |
|
இரும் பேர் ஒக்கலொடு தின்ம்' எனத் தருதலின், |
|
அமிழ்தின் மிசைந்து, காய்பசி நீங்கி, |
|
15 |
நல் மரன் நளிய நறுந் தண் சாரல், |
கல் மிசை அருவி தண்ணெனப் பருகி, |
|
விடுத்தல் தொடங்கினேனாக, வல்லே, |
|
'பெறுதற்கு அரிய வீறுசால் நன் கலம் |
|
பிறிது ஒன்று இல்லை; காட்டு நாட்டேம்' என, |
|
20 |
மார்பில் பூண்ட வயங்கு காழ் ஆரம் |
மடை செறி முன்கைக் கடகமொடு ஈத்தனன்; |
|
'எந் நாடோ?' என, நாடும் சொல்லான்; |
|
'யாரீரோ?' என, பேரும் சொல்லான்; |
|
பிறர் பிறர் கூற வழிக் கேட்டிசினே |
|
25 |
'இரும்பு புனைந்து இயற்றாப் பெரும் பெயர்த் தோட்டி |
அம் மலை காக்கும் அணி நெடுங் குன்றின், |
|
பளிங்கு வகுத்தன்ன தீம் நீர், |
|
நளி மலை நாடன் நள்ளி அவன்' எனவே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|
151 |
பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப, |
|
விண் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன், |
|
கிழவன் சேட் புலம் படரின், இழை அணிந்து, |
|
புன் தலை மடப் பிடி பரிசிலாக, |
|
5 |
பெண்டிரும் தம் பதம் கொடுக்கும் வண் புகழ்க் |
கண்டீரக்கோன்ஆகலின், நன்றும் |
|
முயங்கல் ஆன்றிசின், யானே; பொலந் தேர் |
|
நன்னன் மருகன் அன்றியும், நீயும் |
|
முயங்கற்கு ஒத்தனை மன்னே; வயங்கு மொழிப் |
|
10 |
பாடுநர்க்கு அடைத்த கதவின், ஆடு மழை |
அணங்கு சால் அடுக்கம் பொழியும் நும் |
|
மணம் கமழ் மால் வரை வரைந்தனர், எமரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
இளங் கண்டீரக்கோவும் இள விச்சிக்கோவும் ஒருங்கு இருந்தவழி, சென்ற பெருந்தலைச் சாத்தனார் இளங் கண்டீரக்கோவைப் புல்லி, இள விச்சிக்கோவைப் புல்லாராக 'என்னை என் செயப் புல்லீராயினீர்?' என, அவர் பாடியது.
|
153 |
மழை அணி குன்றத்துக் கிழவன், நாளும், |
|
இழை அணி யானை இரப்போர்க்கு ஈயும், |
|
சுடர் விடு பசும் பூண், சூர்ப்பு அமை முன் கை, |
|
அடு போர் ஆனா, ஆதன் ஓரி |
|
5 |
மாரி வண் கொடை காணிய, நன்றும் |
சென்றதுமன், எம் கண்ணுளங் கடும்பே; |
|
பனி நீர்ப் பூவா மணி மிடை குவளை |
|
வால் நார்த் தொடுத்த கண்ணியும், கலனும், |
|
யானை இனத்தொடு பெற்றனர், நீங்கி, |
|
10 |
பசியாராகல் மாறுகொல் விசி பிணிக் |
கூடு கொள் இன் இயம் கறங்க, |
|
ஆடலும் ஒல்லார், தம் பாடலும் மறந்தே? |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|
156 |
ஒன்று நன்கு உடைய பிறர் குன்றம்; என்றும் |
|
இரண்டு நன்கு உடைத்தே கொண் பெருங் கானம்; |
|
நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டித் |
|
தொடுத்து உணக் கிடப்பினும் கிடக்கும்; அஃதான்று |
|
5 |
நிறை அருந் தானை வேந்தரைத் |
திறை கொண்டு பெயர்க்கும் செம்மலும் உடைத்தே. |
|
திணை அது; துறை இயன் மொழி.
| |
அவனை அவர் பாடியது.
|
157 |
தமர் தற் தப்பின் அது நோன்றல்லும், |
|
பிறர் கையறவு தான் நாணுதலும், |
|
படைப் பழி தாரா மைந்தினன் ஆகலும், |
|
வேந்துடை அவையத்து ஓங்குபு நடத்தலும், |
|
5 |
நும்மோர்க்குத் தகுவன அல்ல; எம்மோன், |
சிலை செல மலர்ந்த மார்பின், கொலை வேல், |
|
கோடல் கண்ணி, குறவர் பெருமகன் |
|
ஆடு மழை தவிர்க்கும் பயம் கெழு மீமிசை, |
|
எல் படு பொழுதின், இனம் தலைமயங்கி, |
|
10 |
கட்சி காணாக் கடமான் நல் ஏறு |
மட மான் நாகு பிணை பயிரின், விடர் முழை |
|
இரும் புலிப் புகர்ப் போத்து ஓர்க்கும் |
|
பெருங் கல் நாடன் எம் ஏறைக்குத் தகுமே. |
|
திணையும் துறையும் அவை.
| |
ஏறைக் கோனைக் குறமகள் இளவெயினி பாடியது.
|
168 |
அருவி ஆர்க்கும் கழை பயில் நனந் தலைக் |
|
கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள் |
|
கொழுங் கிழங்கு மிளிரக் கிண்டி, கிளையொடு, |
|
கடுங் கண் கேழல் உழுத பூழி, |
|
5 |
நல் நாள் வரு பதம் நோக்கி, குறவர் |
உழாஅது வித்திய பரூஉக் குரல் சிறு தினை |
|
முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார் |
|
மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால், |
|
மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி |
|
10 |
வான் கேழ் இரும் புடை கழாஅது, ஏற்றி, |
சாந்த விறகின் உவித்த புன்கம் |
|
கூதளம் கவினிய குளவி முன்றில், |
|
செழுங் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும் |
|
ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல், |
|
15 |
நறை நார்த் தொடுத்த வேங்கை அம் கண்ணி, |
வடி நவில் அம்பின் வில்லோர் பெரும! |
|
கை வள் ஈகைக் கடு மான் கொற்ற! |
|
வையக வரைப்பில் தமிழகம் கேட்ப, |
|
பொய்யாச் செந் நா நெளிய ஏத்திப் |
|
20 |
பாடுப என்ப பரிசிலர், நாளும் |
ஈயா மன்னர் நாண, |
|
வீயாது பரந்த நின் வசை இல் வான் புகழே. |
|
திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை; இயன்மொழியும், அரச வாகையும் ஆம்.
| |
பிட்டங் கொற்றனைக் கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் பாடியது.
|
171 |
இன்று செலினும் தருமே; சிறு வரை |
|
நின்று செலினும் தருமே; பின்னும், |
|
'முன்னே தந்தனென்' என்னாது, துன்னி |
|
வைகலும் செலினும், பொய்யலன் ஆகி, |
|
5 |
யாம் வேண்டியாங்கு எம் வறுங் கலம் நிறைப்போன்; |
தான் வேண்டியாங்குத் தன் இறை உவப்ப |
|
அருந் தொழில் முடியரோ, திருந்து வேல் கொற்றன்; |
|
இனம் மலி கதச் சேக் களனொடு வேண்டினும், |
|
களம் மலி நெல்லின் குப்பை வேண்டினும், |
|
10 |
அருங் கலம் களிற்றொடு வேண்டினும், பெருந்தகை |
பிறர்க்கும் அன்ன அறத் தகையன்னே. |
|
அன்னன் ஆகலின், எந்தை உள் அடி |
|
முள்ளும் நோவ உறாற்கதில்ல! |
|
ஈவோர் அரிய இவ் உலகத்து, |
|
15 |
வாழ்வோர் வாழ, அவன் தாள் வாழியவே! |
172 |
ஏற்றுக உலையே; ஆக்குக சோறே; |
|
கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள் இழைப் |
|
பாடு வல் விறலியர் கோதையும் புனைக; |
|
அன்னவை பிறவும் செய்க; என்னதூஉம் |
|
5 |
பரியல் வேண்டா; வரு பதம் நாடி, |
ஐவனம் காவலர் பெய் தீ நந்தின், |
|
ஒளி திகழ் திருந்து மணி நளிஇருள் அகற்றும் |
|
வன் புல நாடன், வய மான் பிட்டன்: |
|
ஆர் அமர் கடக்கும் வேலும், அவன் இறை |
|
10 |
மா வள் ஈகைக் கோதையும், |
மாறுகொள் மன்னரும், வாழியர் நெடிதே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை வடம வண்ணக்கன் தாமோதரனார் பாடியது.
|
173 |
யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய! |
|
பாணர்! காண்க, இவன் கடும்பினது இடும்பை; |
|
யாணர்ப் பழு மரம் புள் இமிழ்ந்தன்ன |
|
ஊண் ஒலி அரவம்தானும் கேட்கும்; |
|
5 |
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி, |
முட்டை கொண்டு வன் புலம் சேரும் |
|
சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்ப, |
|
சோறுடைக் கையர் வீறு வீறு இயங்கும் |
|
இருங் கிளைச் சிறாஅர்க் காண்டும்; கண்டும், |
|
10 |
மற்றும் மற்றும் வினவுதும், தெற்றென; |
பசிப்பிணி மருத்துவன் இல்லம் |
|
அணித்தோ? சேய்த்தோ? கூறுமின், எமக்கே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சிறுகுடி கிழான் பண்ணனைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் பாடியது.
|
175 |
எந்தை! வாழி; ஆதனுங்க! என் |
|
நெஞ்சம் திறப்போர் நிற் காண்குவரே; |
|
நின் யான் மறப்பின், மறக்கும் காலை, |
|
என் உயிர் யாக்கையின் பிரியும் பொழுதும், |
|
5 |
என்னியான் மறப்பின், மறக்குவென் வென் வேல் |
விண் பொரு நெடுங் குடைக் கொடித் தேர் மோரியர் |
|
திண் கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த |
|
உலக இடைகழி அறை வாய் நிலைஇய |
|
மலர் வாய் மண்டிலத்து அன்ன, நாளும் |
|
10 |
பலர் புரவு எதிர்ந்த அறத் துறை நின்னே. |
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
| |
ஆதனுங்கனைக் கள்ளில் ஆத்திரையனார் பாடியது.
|
176 |
ஓரை ஆயத்து ஒண் தொடி மகளிர் |
|
கேழல் உழுத இருஞ் சேறு கிளைப்பின், |
|
யாமை ஈன்ற புலவு நாறு முட்டையைத் |
|
தேன் நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம், |
|
5 |
இழுமென ஒலிக்கும் புனல் அம் புதவின், |
பெரு மாவிலங்கைத் தலைவன், சீறியாழ் |
|
இல்லோர் சொல் மலை நல்லியக்கோடனை |
|
உடையை வாழி, எற் புணர்ந்த பாலே! |
|
பாரி பறம்பின் பனிச் சுனைத் தெண் நீர் |
|
10 |
ஓர் ஊர் உண்மையின் இகழ்ந்தோர் போல, |
காணாது கழிந்த வைகல், காணா |
|
வழி நாட்கு இரங்கும், என் நெஞ்சம் அவன் |
|
கழி மென் சாயல் காண்தொறும் நினைந்தே. |
|
திணையும் துறையும் அவை.
| |
ஓய்மான் நல்லியக் கோடனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.
|
177 |
ஒளிறு வாள் மன்னர் ஒண் சுடர் நெடு நகர், |
|
வெளிறு கண் போகப் பல் நாள் திரங்கி, |
|
பாடிப் பெற்ற பொன் அணி யானை, |
|
தமர்எனின், யாவரும் புகுப; அமர் எனின், |
|
5 |
திங்களும் நுழையா எந்திரப் படு புழை, |
கள் மாறு நீட்ட நணி நணி இருந்த |
|
குறும் பல் குறும்பின் ததும்ப வைகி, |
|
புளிச் சுவை வேட்ட செங் கண் ஆடவர் |
|
தீம் புளிக் களாவொடு துடரி முனையின், |
|
10 |
மட்டு அறல் நல் யாற்று எக்கர் ஏறி, |
கருங் கனி நாவல் இருந்து கொய்து உண்ணும், |
|
பெரும் பெயர் ஆதி, பிணங்குஅரில் குட நாட்டு, |
|
எயினர் தந்த எய்ம் மான் எறி தசைப் |
|
பைஞ் ஞிணம் பெருத்த பசு வெள் அமலை, |
|
15 |
வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய, |
இரும் பனங் குடையின் மிசையும் |
|
பெரும் புலர் வைகறைச் சீர் சாலாதே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மல்லிகிழான் காரியாதியை ஆவூர் மூலங்கிழார் பாடியது.
|
212 |
'நும் கோ யார்?' என வினவின், எம் கோக் |
|
களமர்க்கு அரித்த விளையல் வெங் கள் |
|
யாமைப் புழுக்கின் காமம் வீட ஆரா, |
|
ஆரல் கொழுஞ் சூடு அம் கவுள் அடாஅ, |
|
5 |
வைகு தொழில் மடியும் மடியா விழவின் |
யாணர் நல் நாட்டுள்ளும், பாணர் |
|
பைதல் சுற்றத்துப் பசிப் பகை ஆகி, |
|
கோழியோனே, கோப்பெருஞ்சோழன் |
|
பொத்து இல் நண்பின் பொத்தியொடு கெழீஇ, |
|
10 |
வாய் ஆர் பெரு நகை வைகலும் நக்கே. |
திணை அது; துறை இயன்மொழி.
| |
கோப்பெருஞ்சோழனைப் பிசிராந்தையார் பாடியது.
|
215 |
கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல் |
|
தாது எரு மறுகின் போதொடு பொதுளிய |
|
வேளை வெண் பூ வெண் தயிர்க் கொளீஇ, |
|
ஆய்மகள் அட்ட அம் புளி மிதவை |
|
5 |
அவரை கொய்யுநர் ஆர மாந்தும் |
தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும் |
|
பிசிரோன் என்ப, என் உயிர் ஓம்புநனே; |
|
செல்வக் காலை நிற்பினும், |
|
அல்லற் காலை நில்லலன்மன்னே. |
|
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
| |
கோப்பெருஞ்சோழன், 'பிசிராந்தையார் வாரார்' என்ற சான்றோர்க்கு, 'அவர் வருவார்' என்று சொல்லியது.
|
216 |
'கேட்டல் மாத்திரை அல்லது, யாவதும் |
|
காண்டல் இல்லாது யாண்டு பல கழிய, |
|
வழு இன்று பழகிய கிழமையர் ஆயினும், |
|
அரிதே, தோன்றல்! அதற்பட ஒழுகல்' என்று, |
|
5 |
ஐயம் கொள்ளன்மின், ஆர் அறிவாளீர்! |
இகழ்விலன்; இனியன்; யாத்த நண்பினன்; |
|
புகழ் கெட வரூஉம் பொய் வேண்டலனே; |
|
தன் பெயர் கிளக்கும்காலை, 'என் பெயர் |
|
பேதைச் சோழன்' என்னும், சிறந்த |
|
10 |
காதற் கிழமையும் உடையன்; அதன்தலை, |
இன்னது ஓர் காலை நில்லலன்; |
|
இன்னே வருகுவன்; ஒழிக்க, அவற்கு இடமே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவன் வடக்கிருந்தான், 'பிசிராந்தையார்க்கு இடன் ஒழிக்க!' என்றது.
|
376 |
விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப் |
|
பசுங் கதிர் மழுகிய சிவந்து வாங்கு அந்தி |
|
சிறு நனி பிறந்த பின்றை, செறி பிணிச் |
|
சிதாஅர் வள்பின் என் தெடாரி தழீஇ, |
|
5 |
பாணர் ஆரும்அளவை, யான் தன் |
யாணர் நல் மனைக் கூட்டுமுதல் நின்றனென்; |
|
இமைத்தோர் விழித்த மாத்திரை, ஞெரேரென, |
|
குணக்கு எழு திங்கள் கனை இருள் அகற்ற, |
|
பண்டு அறிவாரா உருவோடு, என் அரைத் |
|
10 |
தொன்று படு துளையொடு பரு இழை போகி, |
நைந்து கரை பறைந்த என் உடையும், நோக்கி, |
|
'விருந்தினன் அளியன், இவன்' என, பெருந்தகை |
|
நின்ற முரற்கை நீக்கி, நன்றும் |
|
அரவு வெகுண்டன்ன தேறலொடு, சூடு தருபு, |
|
15 |
நிரயத்து அன்ன என் வறன் களைந்து, அன்றே, |
இரவினானே, ஈத்தோன் எந்தை; |
|
அன்றை ஞான்றினொடு இன்றின் ஊங்கும், |
|
இரப்பச் சிந்தியேன், நிரப்பு அடு புணையின்; |
|
உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன்; |
|
20 |
நிறைக் குளப் புதவின் மகிழ்ந்தனென் ஆகி, |
ஒரு நாள், இரவலர் வரையா வள்ளியோர் கடைத்தலை, |
|
ஞாங்கர் நெடுமொழி பயிற்றி, |
|
தோன்றல் செல்லாது, என் சிறு கிணைக் குரலே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
ஒய்மான் நல்லியாதனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.
|
378 |
தென் பரதவர் மிடல் சாய, |
|
வட வடுகர் வாள் ஓட்டிய, |
|
தொடை அமை கண்ணி, திருந்து வேல் தடக் கை, |
|
கடு மா கடைஇய விடு பரி வடிம்பின், |
|
5 |
நல் தார், கள்ளின், சோழன் கோயில், |
புதுப் பிறை அன்ன சுதை சேய் மாடத்து, |
|
பனிக் கயத்து அன்ன நீள் நகர் நின்று, என் |
|
அரிக் கூடு மாக் கிணை இரிய ஒற்றி, |
|
எஞ்சா மரபின் வஞ்சி பாட, |
|
10 |
எமக்கு என வகுத்த அல்ல, மிகப் பல, |
மேம்படு சிறப்பின் அருங் கல வெறுக்கை |
|
தாங்காது பொழிதந்தோனே; அது கண்டு, |
|
இலம்பாடு உழந்த என் இரும் பேர் ஒக்கல், |
|
விரல் செறி மரபின செவித் தொடக்குநரும், |
|
15 |
செவித் தொடர் மரபின விரல் செறிக்குநரும், |
அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும், |
|
மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநரும், |
|
கடுந் தெறல் இராமனுடன் புணர் சீதையை |
|
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை, |
|
20 |
நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின் |
செம் முகப் பெருங் கிளை இழைப் பொலிந்தாஅங்கு, |
|
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே |
|
இருங் கிளைத் தலைமை எய்தி, |
|
அரும்படர் எவ்வம் உழந்ததன்தலையே. |
திணை அது; துறை இயன்மொழி.
| |
சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங் குடையார் பாடியது.
|
380 |
தென் பவ்வத்து முத்துப் பூண்டு, |
|
வட குன்றத்துச் சாந்தம் உரீஇ, |
|
........................................ங் கடல் தானை, |
|
இன் இசைய விறல் வென்றி, |
|
5 |
தென்னவர் வய மறவன்; |
மிசைப் பெய்த நீர் கடல் பரந்து முத்து ஆகுந்து, |
|
நாறு இதழ்க் குளவியொடு கூதளம் குழைய, |
|
வேறுபெ.....................................................................த்துந்து, |
|
தீம் சுளைப் பலவின் நாஞ்சில் பொருநன்; |
|
10 |
துப்பு எதிர்ந்தோர்க்கே உள்ளாச் சேய்மையன்; |
நட்பு எதிர்ந்தோர்க்கே அங்கை நண்மையன்; |
|
வல் வேல் கந்தன் நல் இசை அல்ல, |
|
.....................த்தார்ப் பிள்ளை அம் சிறாஅர்; |
|
அன்னன் ஆகன்மாறே, இந் நிலம் |
|
15 |
இலம்படு காலை ஆயினும், |
புலம்பல் போயின்று, பூத்த என் கடும்பே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
நாஞ்சில் வள்ளுவனைக் கருவூர்க் கதப்பிள்ளை பாடியது.
|
381 |
ஊனும் ஊணும் முனையின், இனிது என, |
|
பாலின் பெய்தவும், பாகின் கொண்டவும், |
|
அளவுபு கலந்து, மெல்லிது பருகி, |
|
விருந்துறுத்து, ஆற்றி இருந்தனெமாக, |
|
5 |
'சென்மோ, பெரும! எம் விழவுடை நாட்டு?' என, |
யாம் தன் அறியுநமாக, தான் பெரிது |
|
அன்பு உடைமையின், எம் பிரிவு அஞ்சி, |
|
துணரியது கொளாஅவாகி, பழம் ஊழ்த்து, |
|
பயம் பகர்வு அறியா மயங்கு அரில் முது பாழ், |
|
10 |
பெயல் பெய்தன்ன, செல்வத்து ஆங்கண், |
ஈயா மன்னர் புறங்கடைத் தோன்றி, |
|
சிதாஅர் வள்பின் சிதர்ப் புறத் தடாரி |
|
ஊன் சுகிர் வலந்த தெண் கண் ஒற்றி, |
|
விரல் விசை தவிர்க்கும் அரலை இல் பாணியின், |
|
15 |
இலம்பாடு அகற்றல் யாவது? புலம்பொடு |
தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம்; அதனால், |
|
இரு நிலம் கூலம் பாற, கோடை |
|
வரு மழை முழக்கு இசைக்கு ஓடிய பின்றை, |
|
சேயைஆயினும், இவணைஆயினும், |
|
20 |
இதற்கொண்டு அறிநை; வாழியோ, கிணைவ! |
சிறு நனி, ஒரு வழிப் படர்க என்றோனே எந்தை, |
|
ஒலி வெள் அருவி வேங்கட நாடன், |
|
உறுவரும் சிறுவரும் ஊழ் மாறு உய்க்கும் |
|
அறத்துறை அம்பியின் மான, மறப்பு இன்று, |
|
25 |
இருங் கோள் ஈராப் பூட்கை, |
கரும்பனூரன் காதல் மகனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
கரும்பனூர் கிழானை நன்னாகனார் பாடியது.
|
388 |
வெள்ளி தென் புலத்து உறைய, விளை வயல், |
|
பள்ளம், வாடிய பயன் இல் காலை, |
|
இரும் பறைக் கிணைமகன் சென்றவன், பெரும் பெயர் |
|
................................................................................பொருந்தி, |
|
5 |
தன் நிலை அறியுநனாக, அந் நிலை, |
இடுக்கண் இரியல் போக, உடைய |
|
கொடுத்தோன் எந்தை, கொடை மேந் தோன்றல், |
|
.......................................................................னாமருப்பாக, |
|
வெல்லும் வாய்மொழிப் புல்லுடை வி |
|
10 |
பெயர்க்கும் பண்ணற் கேட்டிரோ, மககிரென, |
வினைப் பகடு ஏற்ற மேழி கிணைத் தொடா, |
|
நாள்தொறும் பாடேன்ஆயின், ஆனா |
|
மணி கிளர் முன்றில் தென்னவன் மருகன், |
|
பிணி முரசு இரங்கும் பீடு கெழு தானை |
|
15 |
அண்ணல் யானை வழுதி, |
கண்மாறிலியர் என் பெருங் கிளைப் புரவே! |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
சிறுகுடி கிழான் பண்ணனை மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் பாடியது.
|
389 |
'நீர் நுங்கின் கண் வலிப்ப, |
|
கான வேம்பின் காய் திரங்க, |
|
கயம் களியும் கோடை ஆயினும், |
|
ஏலா வெண்பொன் போருறு காலை, |
|
5 |
எம்மும் உள்ளுமோ பிள்ளைஅம் பொருநன்!' |
என்று ஈத்தனனே, இசைசால் நெடுந்தகை; |
|
இன்று சென்று எய்தும் வழியனும் அல்லன்; |
|
செலினே, காணா வழியனும் அல்லன்; |
|
புன் தலை மடப் பிடி இனைய, கன்று தந்து, |
|
10 |
குன்றக நல் ஊர் மன்றத்துப் பிணிக்கும் |
கல் இழி அருவி வேங்கடம் கிழவோன், |
|
செல்வுழி எழாஅ நல் ஏர் முதியன்! |
|
ஆதனுங்கன் போல, நீயும் |
|
பசித்த ஒக்கல் பழங்கண் வீட, |
|
15 |
வீறுசால் நன் கலம் நல்குமதி, பெரும! |
ஐது அகல் அல்குல் மகளிர் |
|
நெய்தல் கேளன்மார், நெடுங் கடையானே! |
|
திணையும் துறையும் அவை.
| |
ஆதனுங்கனைக் கள்ளில் ஆத்திரையனார் பாடியது.
|
390 |
அறவை நெஞ்சத்து ஆயர், வளரும் |
|
மறவை நெஞ்சத்து ஆயிவாளர், |
|
அரும்பு அலர் செருந்தி நெடுங் கால் மலர் கமழ், |
|
.........................................................மன்ன முற்றத்து, |
|
5 |
ஆர்வலர் குறுகின் அல்லது, காவலர் |
கனவினும் குறுகாக் கடியுடை வியல் நகர், |
|
மலைக் கணத்து அன்ன மாடம் சிலம்ப, என் |
|
அரிக் குரல் தடாரி இரிய ஒற்றிப் |
|
பாடி நின்ற பல் நாள் அன்றியும், |
|
10 |
சென்ற ஞான்றைச் சென்று படர் இரவின் |
வந்ததற் கொண்டு, 'நெடுங் கடை நின்ற |
|
புன் தலைப் பொருநன் அளியன்தான்' என, |
|
தன்னுழைக் குறுகல் வேண்டி, என் அரை |
|
முது நீர்ப் பாசி அன்ன உடை களைந்து, |
|
15 |
திரு மலர் அன்ன புது மடிக் கொளீஇ, |
மகிழ் தரல் மரபின் மட்டே அன்றியும், |
|
அமிழ்து அன மரபின் ஊன் துவை அடிசில் |
|
வெள்ளி வெண் கலத்து ஊட்டல் அன்றி, |
|
முன் ஊர்ப் பொதியில் சேர்ந்த மென் நடை |
|
20 |
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்பு அகற்ற, |
அகடு நனை வேங்கை வீ கண்டன்ன |
|
பகடு தரு செந்நெல் போரொடு நல்கி, |
|
'கொண்டி பெறுக!' என்றோனே உண் துறை |
|
மலை அலர் அணியும் தலை நீர் நாடன்; |
|
25 |
கண்டாற் கொண்டும் அவன் திருந்து அடி வாழ்த்தி, |
............................................................................................................................. |
|
வான் அறியல என் பாடு பசி போக்கல்; |
|
அண்ணல் யானை வேந்தர் |
|
உண்மையோ, அறியல்? காண்பு அறியலரே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
|
400 |
மாக விசும்பின் வெண் திங்கள் |
|
மூ ஐந்தான் முறை முற்ற, |
|
கடல் நடுவண் கண்டன்ன என் |
|
இயம் இசையா, மரபு ஏத்தி, |
|
5 |
கடைத் தோன்றிய கடைக் கங்குலான் |
பலர் துஞ்சவும் தான் துஞ்சான், |
|
உலகு காக்கும் உயர் ெ..........க் |
|
கேட்டோன், எந்தை, என் தெண் கிணைக் குரலே; |
|
கேட்டதற்கொண்டும், வேட்கை தண்டாது, |
|
10 |
தொன்று படு சிதாஅர் மருங்கு நீக்கி, |
மிகப் பெருஞ் சிறப்பின் வீறு....... |
|
...........................................................லவான |
|
கலிங்கம் அளித்திட்டு என் அரை நோக்கி, |
|
நார் அரி நறவின் நாள் மகிழ் தூங்குந்து; |
|
15 |
போது அறியேன், பதிப் பழகவும், |
தன் பகை கடிதல் அன்றியும், சேர்ந்தோர் |
|
பசிப் பகை கடிதலும் வல்லன் மாதோ; |
|
மறவர் மலிந்த த............................................. |
|
கேள்வி மலிந்த வேள்வித் தூணத்து, |
|
20 |
இருங் கழி இழிதரு........ கலி வங்கம் |
தேறு நீர்ப் பரப்பின் யாறு சீத்து உய்த்து, |
|
துறைதொறும் பிணிக்கும் நல் ஊர், |
|
உறைவு இன் யாணர்,........ கிழவோனே! |
|
திணை அது; துறை இயன்மொழி. |
|