முகப்பு | ![]() |
எருமை மறம் |
80 |
இன் கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண், |
|
மைந்துடை மல்லன் மத வலி முருக்கி, |
|
ஒரு கால் மார்பு ஒதுங்கின்றே; ஒரு கால் |
|
வரு தார் தாங்கிப் பின் ஒதுங்கின்றே |
|
5 |
நல்கினும் நல்கான் ஆயினும், வெல் போர்ப் |
பொரல் அருந் தித்தன் காண்கதில் அம்ம |
|
பசித்துப் பணை முயலும் யானை போல, |
|
இரு தலை ஒசிய எற்றி, |
|
களம் புகு மல்லற் கடந்து அடு நிலையே. |
|
திணை தும்பை; துறை எருமை மறம்.
| |
சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி முக்காவனாட்டு ஆமூர் மல்லனைப் பொருது அட்டு நின்றானைச் சாத்தந்தையார் பாடியது.
|
274 |
நீலக் கச்சை, பூ ஆர் ஆடை, |
|
பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன் |
|
மேல் வருங் களிற்றொடு வேல் துரந்து, இனியே, |
|
தன்னும் துரக்குவன் போலும் ஒன்னலர் |
|
5 |
எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தர, |
கையின் வாங்கி, தழீஇ, |
|
மொய்ம்பின் ஊக்கி, மெய்க் கொண்டனனே! |
|
திணை அது; துறை எருமை மறம்.
| |
உலோச்சனார் பாடியது.
|
275 |
கோட்டங் கண்ணியும், கொடுந்திரை ஆடையும், |
|
வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும், |
|
ஒத்தன்று மாதோ, இவற்கே; செற்றிய |
|
திணி நிலை அலறக் கூவை போழ்ந்து, தன் |
|
5 |
வடி மாண் எஃகம் கடிமுகத்து ஏந்தி, |
'ஓம்புமின், ஓம்புமின், இவண்!' என, ஓம்பாது, |
|
தொடர் கொள் யானையின் குடர் கால் தட்ப, |
|
கன்று அமர் கறவை மான, |
|
முன் சமத்து எதிர்ந்த தன் தோழற்கு வருமே. |
|
திணையும் துறையும் அவை.
| |
ஒரூஉத்தனார் பாடியது.
|