முகப்பு | ![]() |
குதிரை மறம் |
273 |
மா வாராதே; மா வாராதே; |
|
எல்லார் மாவும் வந்தன; எம் இல், |
|
புல் உளைக் குடுமிப் புதல்வற் தந்த |
|
செல்வன் ஊரும் மா வாராதே |
|
5 |
இரு பேர் யாற்ற ஒரு பெருங் கூடல் |
விலங்கிடு பெரு மரம் போல, |
|
உலந்தன்றுகொல், அவன் மலைந்த மாவே? |
|
திணை தும்பை; துறை குதிரை மறம்.
| |
எருமை வெளியனார் பாடியது.
|
299 |
பருத்தி வேலிச் சீறூர் மன்னன் |
|
உழுத்து அதர் உண்ட ஓய் நடைப் புரவி, |
|
கடல் மண்டு தோணியின், படை முகம் போழ |
|
நெய்மிதி அருந்திய, கொய் சுவல் எருத்தின், |
|
5 |
தண்ணடை மன்னர், தாருடைப் புரவி, |
அணங்குடை முருகன் கோட்டத்துக் |
|
கலம் தொடா மகளிரின், இகந்து நின்றவ்வே. |
|
திணை நொச்சி; துறை குதிரை மறம்.
| |
பொன்முடியார் பாடியது.
|
302 |
வெடி வேய் கொள்வது போல ஓடி, |
|
தாவுபு உகளும், மாவே; பூவே, |
|
விளங்குஇழை மகளிர் கூந்தல் கொண்ட; |
|
நரந்தப் பல் காழ்க் கோதை சுற்றிய |
|
5 |
ஐது அமை பாணி வணர் கோட்டுச் சீறியாழ்க் |
கை வார் நரம்பின் பாணர்க்கு ஓக்கிய, |
|
நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர்; |
|
நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி, |
|
வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின், |
|
10 |
விண் இவர் விசும்பின் மீனும், |
தண் பெயல் உறையும், உறை ஆற்றாவே. |
|
திணை அது; துறை குதிரை மறம்.
| |
வெறி பாடிய காமக்கண்ணியார் பாடியது.
|
303 |
நிலம் பிறக்கிடுவது போலக் குளம்பு குடையூஉ, |
|
உள்ளம் அழிக்கும் கொட்பின் மான்மேல் |
|
எள்ளுநர்ச் செகுக்கும் காளை கூர்த்த |
|
வெந் திறல் எஃகம் நெஞ்சு வடு விளைப்ப |
|
5 |
ஆட்டிக் காணிய வருமே நெருநை, |
உரைசால் சிறப்பின் வேந்தர் முன்னர், |
|
கரை பொரு முந்நீர்த் திமிலின் போழ்ந்து, அவர் |
|
கயந்தலை மடப் பிடி புலம்ப, |
|
இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கே. |
|
திணையும் துறையும் அவை.
| |
எருமை வெளியனார் பாடியது.
|
304 |
கொடுங் குழை மகளிர் கோதை சூட்டி, |
|
நடுங்கு பனிக் களைஇயர் நார் அரி பருகி, |
|
வளி தொழில் ஒழிக்கும் வண் பரிப் புரவி |
|
பண்ணற்கு விரைதி, நீயே; 'நெருநை, |
|
5 |
எம்முன் தப்பியோன் தம்பியொடு, ஒராங்கு |
நாளைச் செய்குவென் அமர்' எனக் கூறி, |
|
புன் வயிறு அருத்தலும் செல்லான், வன் மான் |
|
கடவும் என்ப, பெரிதே; அது கேட்டு, |
|
வலம் படு முரசின் வெல் போர் வேந்தன் |
|
10 |
இலங்கு இரும் பாசறை நடுங்கின்று |
'இரண்டு ஆகாது அவன் கூறியது' எனவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அரிசில் கிழார் பாடியது.
|