முகப்பு | ![]() |
கையறு நிலை |
65 |
மண் முழா மறப்ப, பண் யாழ் மறப்ப, |
|
இருங் கண் குழிசி கவிழ்ந்து இழுது மறப்ப, |
|
சுரும்பு ஆர் தேறல் சுற்றம் மறப்ப, |
|
உழவர் ஓதை மறப்ப, விழவும் |
|
5 |
அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப, |
உவவுத் தலைவந்த பெரு நாள் அமையத்து, |
|
இரு சுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர் |
|
புன்கண் மாலை மலை மறைந்தாங்கு, |
|
தன் போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த |
|
10 |
புறப் புண் நாணி, மறத் தகை மன்னன் |
வாள் வடக்கிருந்தனன்; ஈங்கு, |
|
நாள் போல் கழியல, ஞாயிற்றுப் பகலே. |
|
திணை பொதுவியல்; துறை கையறு நிலை.
| |
சேரமான் பெருஞ் சேரலாதன் சோழன் கரிகாற் பெருவளத்தானோடு பொருது, புறப் புண் நாணி, வடக்கிருந்தானைக் கழாத்தலையார் பாடியது.
|
112 |
அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவின், |
|
எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்; |
|
இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவின், |
|
வென்று எறி முரசின் வேந்தர் எம் |
|
5 |
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே! |
திணை பொதுவியல்; துறை கையறுநிலை.
| |
பாரி மகளிர் பாடியது.
|
113 |
மட்டு வாய் திறப்பவும், மை விடை வீழ்ப்பவும், |
|
அட்டு ஆன்று ஆனாக் கொழுந் துவை ஊன் சோறும் |
|
பெட்டாங்கு ஈயும் பெரு வளம் பழுனி, |
|
நட்டனை மன்னோ, முன்னே; இனியே, |
|
5 |
பாரி மாய்ந்தென, கலங்கிக் கையற்று, |
நீர் வார் கண்ணேம் தொழுது நிற் பழிச்சிச் |
|
சேறும் வாழியோ பெரும் பெயர்ப் பறம்பே! |
|
கோல் திரள் முன் கைக் குறுந் தொடி மகளிர் |
|
நாறு இருங் கூந்தல் கிழவரைப் படர்ந்தே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவன் மகளிரைப் பார்ப்பார்ப் படுக்கக் கொண்டுபோவான் பறம்பு விடுத்த கபிலர் பாடியது.
|
114 |
ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும்; சிறு வரை |
|
சென்று நின்றோர்க்கும் தோன்றும், மன்ற |
|
களிறு மென்று இட்ட கவளம் போல, |
|
நறவுப் பிழிந்து இட்ட கோதுடைச் சிதறல் |
|
5 |
வார் அசும்பு ஒழுகும் முன்றில், |
தேர் வீசு இருக்கை, நெடியோன் குன்றே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவன் மகளிரைக் கொண்டுபோம் கபிலர் பறம்பு நோக்கி நின்று சொல்லியது.
|
115 |
ஒரு சார் அருவி ஆர்ப்ப, ஒரு சார் |
|
பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார், |
|
வாக்க உக்க தேக் கள் தேறல் |
|
கல் அலைத்து ஒழுகும்மன்னே! பல் வேல், |
|
5 |
அண்ணல் யானை, வேந்தர்க்கு |
இன்னான் ஆகிய இனியோன் குன்றே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
116 |
தீம் நீர்ப் பெருங் குண்டு சுனைப் பூத்த குவளைக் |
|
கூம்பு அவிழ் முழுநெறி புரள்வரும் அல்குல், |
|
ஏந்து எழில் மழைக் கண், இன் நகை, மகளிர் |
|
புல் மூசு கவலைய முள் மிடை வேலி, |
|
5 |
பஞ்சி முன்றில், சிற்றில் ஆங்கண், |
பீரை நாறிய சுரை இவர் மருங்கின், |
|
ஈத்து இலைக் குப்பை ஏறி, உமணர் |
|
உப்பு ஒய் ஒழுகை எண்ணுப மாதோ; |
|
நோகோ யானே; தேய்கமா, காலை! |
|
10 |
பயில் பூஞ் சோலை மயில் எழுந்து ஆலவும், |
பயில் இருஞ் சிலம்பில் கலை பாய்ந்து உகளவும், |
|
கலையும் கொள்ளாவாக, பலவும் |
|
காலம் அன்றியும் மரம் பயம் பகரும் |
|
யாணர் அறாஅ வியல் மலை அற்றே |
|
15 |
அண்ணல் நெடு வரை ஏறி, தந்தை |
பெரிய நறவின், கூர் வேல் பாரியது |
|
அருமை அறியார், போர் எதிர்ந்து வந்த |
|
வலம் படு தானை வேந்தர் |
|
பொலம் படைக் கலி மா எண்ணுவோரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
117 |
மைம்மீன் புகையினும், தூமம் தோன்றினும், |
|
தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும், |
|
வயலகம் நிறைய, புதல் பூ மலர, |
|
மனைத்தலை மகவை ஈன்ற அமர்க் கண் |
|
5 |
ஆமா நெடு நிரை நன் புல் ஆர, |
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கி, |
|
பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத்ததுவே |
|
பிள்ளை வெருகின் முள் எயிறு புரையப் |
|
பாசிலை முல்லை முகைக்கும் |
|
10 |
ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே. |
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
118 |
அறையும் பொறையும் மணந்த தலைய, |
|
எண் நாள் திங்கள் அனைய கொடுங் கரைத் |
|
தெள் நீர்ச் சிறு குளம் கீள்வது மாதோ |
|
கூர் வேல் குவைஇய மொய்ம்பின் |
|
5 |
தேர் வண் பாரி தண் பறம்பு நாடே! |
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
119 |
கார்ப் பெயல் தலைஇய காண்பு இன் காலை, |
|
களிற்று முக வரியின் தெறுழ் வீ பூப்ப, |
|
செம் புற்று ஈயலின் இன் அளைப் புளித்து; |
|
மென் தினை யாணர்த்து; நந்தும் கொல்லோ |
|
5 |
நிழல் இல் நீள் இடைத் தனி மரம் போல, |
பணை கெழு வேந்தரை இறந்தும் |
|
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
120 |
வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ் சுவல் |
|
கார்ப் பெயல் கலித்த பெரும் பாட்டு ஈரத்து, |
|
பூழி மயங்கப் பல உழுது, வித்தி, |
|
பல்லி ஆடிய பல் கிளைச் செவ்விக் |
|
5 |
களை கால் கழாலின், தோடு ஒலிபு நந்தி, |
மென் மயில் புனிற்றுப் பெடை கடுப்ப நீடி, |
|
கருந் தாள் போகி, ஒருங்கு பீள் விரிந்து, |
|
கீழும் மேலும் எஞ்சாமைப் பல காய்த்து, |
|
வாலிதின் விளைந்த புது வரகு அரிய, |
|
10 |
தினை கொய்ய, கவ்வை கறுப்ப, அவரைக் |
கொழுங் கொடி விளர்க் காய் கோட் பதம் ஆக, |
|
நிலம் புதைப் பழுனிய மட்டின் தேறல் |
|
புல் வேய்க் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து, |
|
நறு நெய்க் கடலை விசைப்ப, சோறு அட்டு, |
|
15 |
பெருந்தோள் தாலம் பூசல் மேவர, |
வருந்தா யாணர்த்து; நந்தும்கொல்லோ |
|
இரும் பல் கூந்தல் மடந்தையர் தந்தை |
|
ஆடு கழை நரலும் சேட் சிமை, புலவர் |
|
பாடி ஆனாப் பண்பின் பகைவர் |
|
20 |
ஓடு கழல் கம்பலை கண்ட |
செரு வெஞ் சேஎய் பெரு விறல் நாடே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
217 |
நினைக்கும் காலை மருட்கை உடைத்தே, |
|
எனைப் பெருஞ் சிறப்பினோடு ஈங்கு இது துணிதல்; |
|
அதனினும் மருட்கை உடைத்தே, பிறன் நாட்டுத் |
|
தோற்றம் சான்ற சான்றோன் போற்றி, |
|
5 |
இசை மரபு ஆக, நட்புக் கந்து ஆக, |
இனையது ஓர் காலை ஈங்கு வருதல்; |
|
'வருவன்' என்ற கோனது பெருமையும், |
|
அது பழுது இன்றி வந்தவன் அறிவும், |
|
வியத்தொறும் வியத்தொறும் வியப்பு இறந்தன்றே; |
|
10 |
அதனால், தன் கோல் இயங்காத் தேயத்து உறையும் |
சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்று இசை |
|
அன்னோனை இழந்த இவ் உலகம் |
|
என் ஆவதுகொல்? அளியது தானே! |
|
திணை பொதுவியல்; துறை கையறுநிலை.
| |
அவன் வடக்கிருந்தானுழைச் சென்ற பிசிராந்தையாரைக் கண்டு பொத்தியார் பாடியது.
|
218 |
பொன்னும், துகிரும், முத்தும், மன்னிய |
|
மா மலை பயந்த காமரு மணியும், |
|
இடைபடச் சேய ஆயினும், தொடை புணர்ந்து, |
|
அரு விலை நன் கலம் அமைக்கும்காலை, |
|
5 |
ஒரு வழித் தோன்றியாங்கு என்றும் சான்றோர் |
சான்றோர் பாலர் ஆப; |
|
சாலார் சாலார் பாலர் ஆகுபவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பிசிராந்தையார் வடக்கிருந்தாரைக் கண்ட கண்ணகனார் பாடியது.
|
219 |
உள் ஆற்றுக் கவலைப் புள்ளி நீழல், |
|
முழூஉ வள்ளூரம் உணக்கும் மள்ள! |
|
புலவுதி மாதோ நீயே |
|
பலரால் அத்தை, நின் குறி இருந்தோரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவன் வடக்கிருந்தானைக் கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதநாதனார் பாடியது.
|
220 |
பெருஞ் சோறு பயந்து, பல் யாண்டு புரந்த |
|
பெருங் களிறு இழந்த பைதல் பாகன் |
|
அது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை, |
|
வெளில் பாழாகக் கண்டு கலுழ்ந்தாங்கு, |
|
5 |
கலங்கினென் அல்லனோ, யானே பொலந் தார்த் |
தேர் வண் கிள்ளி போகிய |
|
பேர் இசை மூதூர் மன்றம் கண்டே? |
|
திணையும் துறையும் அவை.
| |
அவன் வடக்கிருந்தானுழைச் சென்று மீண்டு வந்து உறையூர் கண்ட பொத்தியார் அழுது பாடியது.
|
221 |
பாடுநர்க்கு ஈத்த பல் புகழன்னே; |
|
ஆடுநர்க்கு ஈத்த பேர் அன்பினனே; |
|
அறவோர் புகழ்ந்த ஆய் கோலன்னே; |
|
திறவோர் புகழ்ந்த திண் அன்பினனே; |
|
5 |
மகளிர் சாயல்; மைந்தர்க்கு மைந்து; |
துகள் அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்; |
|
அனையன் என்னாது, அத் தக்கோனை, |
|
நினையாக் கூற்றம் இன் உயிர் உய்த்தன்று; |
|
பைதல் ஒக்கல் தழீஇ, அதனை |
|
10 |
வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்! |
'நனந் தலை உலகம் அரந்தை தூங்க, |
|
கெடு இல் நல் இசை சூடி, |
|
நடுகல் ஆயினன் புரவலன்' எனவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவன் நடுகல் கண்டு அவர் பாடியது.
|
222 |
'அழல் அவிர் வயங்கு இழைப் பொலிந்த மேனி, |
|
நிழலினும் போகா, நின் வெய்யோள் பயந்த |
|
புகழ்சால் புதல்வன் பிறந்த பின் வா' என, |
|
என் இவண் ஒழித்த அன்பிலாள! |
|
5 |
எண்ணாது இருக்குவை அல்லை; |
என் இடம் யாது? மற்று இசை வெய்யோயே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை, தன் மகன் பிறந்த பின் பெயர்த்துச் சென்று, பொத்தியார், 'எனக்கு இடம் தா' என்று சொற்றது.
|
223 |
பலர்க்கு நிழல் ஆகி, உலகம் மீக்கூறி, |
|
தலைப்போகன்மையின் சிறு வழி மடங்கி, |
|
நிலை பெறு நடுகல் ஆகியக் கண்ணும், |
|
இடம் கொடுத்து அளிப்ப, மன்ற உடம்போடு |
|
5 |
இன் உயிர் விரும்பும் கிழமைத் |
தொல் நட்புடையார் தம் உழைச் செலினே. |
|
திணையும் துறையும் அவை.
| |
கல்லாகியும் இடம் கொடுத்த கோப்பெருஞ்சோழனை வடக்கிருந்த பொத்தியார் பாடியது.
|
224 |
அருப்பம் பேணாது அமர் கடந்ததூஉம்; |
|
துணை புணர் ஆயமொடு தசும்பு உடன் தொலைச்சி, |
|
இரு பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்; |
|
அறம் அறக் கண்ட நெறி மாண் அவையத்து, |
|
5 |
முறை நற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த |
தூ இயல் கொள்கைத் துகள் அறு மகளிரொடு, |
|
பருதி உருவின் பல் படைப் புரிசை, |
|
எருவை நுகர்ச்சி, யூப நெடுந் தூண், |
|
வேத வேள்வித் தொழில் முடித்ததூஉம்; |
|
10 |
அறிந்தோன் மன்ற அறிவுடையாளன்: |
இறந்தோன் தானே; அளித்து இவ் உலகம்! |
|
அருவி மாறி, அஞ்சு வரக் கருகி, |
|
பெரு வறங் கூர்ந்த வேனில் காலை, |
|
பசித்த ஆயத்துப் பயன் நிரை தருமார், |
|
15 |
பூ வாள் கோவலர் பூவுடன் உதிரக் |
கொய்து கட்டு அழித்த வேங்கையின், |
|
மெல் இயல் மகளிரும் இழை களைந்தனரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கருங்குழலாதனார் பாடியது.
|
225 |
தலையோர் நுங்கின் தீம் சேறு மிசைய, |
|
இடையோர் பழத்தின் பைங் கனி மாந்த, |
|
கடையோர் விடு வாய்ப் பிசிரொடு சுடு கிழங்கு நுகர, |
|
நில மலர் வையத்து வல முறை வளைஇ, |
|
5 |
வேந்து பீடு அழித்த ஏந்து வேல் தானையொடு, |
'ஆற்றல்' என்பதன் தோற்றம் கேள், இனி: |
|
கள்ளி போகிய களரிஅம் பறந்தலை, |
|
முள்ளுடை வியன் காட்டதுவே 'நன்றும் |
|
சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன்கொல்?' என, |
|
10 |
இன் இசைப் பறையொடு வென்றி நுவல, |
தூக்கணங் குரீஇத் தூங்கு கூடு ஏய்ப்ப |
|
ஒரு சிறைக் கொளீஇய திரி வாய் வலம்புரி, |
|
ஞாலங் காவலர் கடைத்தலை, |
|
காலைத் தோன்றினும் நோகோ யானே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் நலங்கிள்ளியை ஆலத்தூர் கிழார் பாடியது.
|
226 |
செற்றன்று ஆயினும், செயிர்த்தன்று ஆயினும், |
|
உற்றன்று ஆயினும், உய்வு இன்று மாதோ; |
|
பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி, |
|
இரந்தன்றாகல் வேண்டும் பொலந் தார் |
|
5 |
மண்டு அமர் கடக்கும் தானைத் |
திண் தேர் வளவற் கொண்ட கூற்றே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
|
227 |
நனி பேதையே, நயன் இல் கூற்றம்! |
|
விரகு இன்மையின் வித்து அட்டு உண்டனை; |
|
இன்னும் காண்குவை, நன் வாய் ஆகுதல்; |
|
ஒளிறு வாள் மறவரும், களிறும், மாவும், |
|
5 |
குருதி அம் குரூஉப் புனல் பொரு களத்து ஒழிய, |
நாளும் ஆனான் கடந்து அட்டு, என்றும் நின் |
|
வாடு பசி அருத்திய வசை தீர் ஆற்றல் |
|
நின் ஓர் அன்ன பொன் இயல் பெரும் பூண் |
|
வளவன் என்னும் வண்டு மூசு கண்ணி |
|
10 |
இனையோற் கொண்டனைஆயின், |
இனி யார், மற்று நின் பசி தீர்ப்போரே? |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை ஆடுதுறை மாசாத்தனார் பாடியது.
|
230 |
கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும், |
|
வெங் கால் வம்பலர் வேண்டு புலத்து உறையவும், |
|
களம் மலி குப்பை காப்பு இல வைகவும், |
|
விலங்கு பகை கடிந்த கலங்காச் செங்கோல், |
|
5 |
வையகம் புகழ்ந்த வயங்கு வினை ஒள் வாள், |
பொய்யா எழினி பொருது களம் சேர |
|
ஈன்றோள் நீத்த குழவி போல, |
|
தன் அமர் சுற்றம் தலைத்தலை இனைய, |
|
கடும் பசி கலக்கிய இடும்பை கூர் நெஞ்சமொடு |
|
10 |
நோய் உழந்து வைகிய உலகினும், மிக நனி |
நீ இழந்தனையே, அறன் இல் கூற்றம்! |
|
வாழ்தலின் வரூஉம் வயல் வளன் அறியான், |
|
வீழ் குடி உழவன் வித்து உண்டாஅங்கு |
|
ஒருவன் ஆர் உயிர் உண்ணாய் ஆயின், |
|
15 |
நேரார் பல் உயிர் பருகி, |
ஆர்குவை மன்னோ, அவன் அமர் அடு களத்தே. |
|
திணை அது; துறை கையறு நிலை.
| |
அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினியை அரிசில் கிழார் பாடியது.
|
231 |
எறி புனக் குறவன் குறையல் அன்ன |
|
கரி புற விறகின் ஈம ஒள் அழல், |
|
குறுகினும் குறுகுக; குறுகாது சென்று, |
|
விசும்புற நீளினும் நீள்க பசுங் கதிர்த் |
|
5 |
திங்கள் அன்ன வெண்குடை |
ஒண் ஞாயிறு அன்னோன் புகழ் மாயலவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
|
232 |
இல்லாகியரோ, காலை மாலை! |
|
அல்லாகியர், யான் வாழும் நாளே! |
|
நடுகல் பீலி சூட்டி, நார் அரி |
|
சிறு கலத்து உகுப்பவும் கொள்வன்கொல்லோ |
|
5 |
கோடு உயர் பிறங்கு மலை கெழீஇய |
நாடு உடன் கொடுப்பவும் கொள்ளாதோனே? |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
233 |
பொய்யாகியரோ! பொய்யாகியரோ! |
|
பா அடி யானை பரிசிலர்க்கு அருகாச் |
|
சீர் கெழு நோன் தாள் அகுதைகண் தோன்றிய |
|
பொன் புனை திகிரியின் பொய்யாகியரோ! |
|
5 |
'இரும் பாண் ஒக்கல் தலைவன், பெரும் பூண், |
போர் அடு தானை, எவ்வி மார்பின் |
|
எஃகுறு விழுப்புண் பல' என |
|
வைகுறு விடியல், இயம்பிய குரலே. |
|
திணயும் துறையும் அவை.
| |
வேள் எவ்வியை வெள்ளெருக்கிலையார் பாடியது.
|
234 |
நோகோ யானே? தேய்கமா காலை! |
|
பிடி அடி அன்ன சிறு வழி மெழுகி, |
|
தன் அமர் காதலி புல் மேல் வைத்த |
|
இன் சிறு பிண்டம் யாங்கு உண்டனன்கொல் |
|
5 |
உலகு புகத் திறந்த வாயில் |
பலரோடு உண்டல் மரீஇயோனே? |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
235 |
சிறிய கள் பெறினே, எமக்கு ஈயும்; மன்னே! |
|
பெரிய கள் பெறினே, |
|
யாம் பாட, தான் மகிழ்ந்து உண்ணும்; மன்னே! |
|
சிறு சோற்றானும் நனி பல கலத்தன்; மன்னே! |
|
5 |
பெருஞ் சோற்றானும் நனி பல கலத்தன்; மன்னே! |
என்பொடு தடி படு வழி எல்லாம் எமக்கு ஈயும்; மன்னே! |
|
அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும்; மன்னே! |
|
நரந்தம் நாறும் தன் கையால், |
|
புலவு நாறும் என் தலை தைவரும்; மன்னே! |
|
10 |
அருந் தலை இரும் பாணர் அகல் மண்டைத் துளை உரீஇ, |
இரப்போர் கையுளும் போகி, |
|
புரப்போர் புன்கண் பாவை சோர, |
|
அம் சொல் நுண் தேர்ச்சிப் புலவர் நாவில் |
|
சென்று வீழ்ந்தன்று, அவன் |
|
15 |
அரு நிறத்து இயங்கிய வேலே! |
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ? |
|
இனி, பாடுநரும் இல்லை; பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை; |
|
பனித் துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர் |
|
சூடாது வைகியாங்கு, பிறர்க்கு ஒன்று |
|
20 |
ஈயாது வீயும் உயிர் தவப் பலவே! |
திணையும் துறையும் அவை.
| |
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
|
236 |
கலை உணக் கிழிந்த, முழவு மருள், பெரும் பழம் |
|
சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவு ஆகும் |
|
மலை கெழு நாட! மா வண் பாரி! |
|
கலந்த கேண்மைக்கு ஒவ்வாய், நீ; எற் |
|
5 |
புலந்தனை ஆகுவை புரந்த ஆண்டே |
பெருந் தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது, |
|
ஒருங்கு வரல் விடாது, 'ஒழிக' எனக் கூறி, |
|
இனையைஆதலின் நினக்கு மற்று யான் |
|
மேயினேன் அன்மையானே; ஆயினும், |
|
10 |
இம்மை போலக் காட்டி, உம்மை |
இடை இல் காட்சி நின்னோடு |
|
உடன் உறைவு ஆக்குக, உயர்ந்த பாலே! |
|
திணை அது; துறை கையறுநிலை.
| |
வேள் பாரி துஞ்சியவழி, அவன் மகளிரைப் பார்ப்பார்ப் படுத்து, வடக்கிருந்த கபிலர் பாடியது.
|
237 |
'நீடு வாழ்க?' என்று, யான் நெடுங் கடை குறுகி, |
|
பாடி நின்ற பசி நாட்கண்ணே, |
|
'கோடைக் காலத்துக் கொழு நிழல் ஆகி, |
|
பொய்த்தல் அறியா உரவோன் செவிமுதல் |
|
5 |
வித்திய பனுவல் விளைந்தன்று நன்று' என |
நச்சி இருந்த நசை பழுதாக, |
|
அட்ட குழிசி அழல் பயந்தாஅங்கு, |
|
'அளியர்தாமே ஆர்க' என்னா |
|
அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய, |
|
10 |
ஊழின் உருப்ப எருக்கிய மகளிர் |
வாழைப் பூவின் வளை முறி சிதற, |
|
முது வாய் ஒக்கல் பரிசிலர் இரங்க, |
|
கள்ளி போகிய களரிஅம் பறந்தலை, |
|
வெள் வேல் விடலை சென்று மாய்ந்தனனே: |
|
15 |
ஆங்கு அது நோய் இன்றாக; ஓங்கு வரைப் |
புலி பார்த்து ஒற்றிய களிற்று இரை பிழைப்பின், |
|
எலி பார்த்து ஒற்றாதாகும்; மலி திரைக் |
|
கடல் மண்டு புனலின் இழுமெனச் சென்று, |
|
நனியுடைப் பரிசில் தருகம், |
|
20 |
எழுமதி, நெஞ்சே! துணிபு முந்துறுத்தே. |
திணையும் துறையும் அவை.
| |
வெளிமானுழைச் சென்றார்க்கு, அவன் துஞ்ச, இள வெளிமான் சிறிது கொடுப்ப, கொள்ளாது, பெருஞ்சித்திரனார் பாடியது.
|
238 |
கவி செந் தாழிக் குவி புறத்து இருந்த |
|
செவி செஞ் சேவலும் பொகுவலும் வெருவா, |
|
வாய் வன் காக்கையும் கூகையும் கூடி, |
|
பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் |
|
5 |
காடு முன்னினனே, கள் காமுறுநன்; |
தொடி கழி மகளிரின் தொல் கவின் வாடி, |
|
பாடுநர் கடும்பும் பையென்றனவே; |
|
தோடு கொள் முரசும் கிழிந்தன, கண்ணே; |
|
ஆள் இல், வரை போல், யானையும் மருப்பு இழந்தனவே; |
|
10 |
வெந் திறல் கூற்றம் பெரும் பேதுறுப்ப, |
எந்தை ஆகுல அதற் படல் அறியேன்; |
|
அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற |
|
என் ஆகுவர்கொல், என் துன்னியோரே? |
|
மாரி இரவின், மரம் கவிழ் பொழுதின், |
|
15 |
ஆர் அஞர் உற்ற நெஞ்சமொடு, ஒராங்குக் |
கண் இல் ஊமன் கடல் பட்டாங்கு, |
|
வரை அளந்து அறியாத் திரை அரு நீத்தத்து, |
|
அவல மறு சுழி மறுகலின், |
|
தவலே நன்றுமன்; தகுதியும் அதுவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
வெளிமான் துஞ்சிய பின் அவர் பாடியது.
|
239 |
தொடியுடைய தோள் மணந்தனன்; |
|
கடி காவில் பூச் சூடினன்; |
|
தண் கமழும் சாந்து நீவினன்; |
|
செற்றோரை வழி தபுத்தனன்; |
|
5 |
நட்டோரை உயர்பு கூறினன்; |
'வலியர்' என, வழிமொழியலன்; |
|
'மெலியர்' என, மீக்கூறலன்; |
|
பிறரைத் தான் இரப்பு அறியலன்; |
|
இரந்தோர்க்கு மறுப்பு அறியலன்; |
|
10 |
வேந்துடை அவையத்து ஓங்கு புகழ் தோற்றினன்; |
வருபடை எதிர் தாங்கினன்; |
|
பெயர்படை புறங்கண்டனன்; |
|
கடும் பரிய மாக் கடவினன்; |
|
நெடுந் தெருவில் தேர் வழங்கினன்; |
|
15 |
ஓங்கு இயல களிறு ஊர்ந்தனன்; |
தீம் செறி தசும்பு தொலைச்சினன்; |
|
பாண் உவப்ப பசி தீர்த்தனன்; |
|
மயக்குடைய மொழி விடுத்தனன்; ஆங்குச் |
|
செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின் |
|
20 |
இடுக ஒன்றோ! சுடுக ஒன்றோ! |
படு வழிப் படுக, இப் புகழ் வெய்யோன் தலையே! |
|
திணையும் துறையும் அவை.
| |
நம்பி நெடுஞ்செழியனைப் பேரெயின் முறுவலார் பாடியது.
|
240 |
ஆடு நடைப் புரவியும், களிறும், தேரும், |
|
வாடா யாணர் நாடும் ஊரும், |
|
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன் |
|
கோடு ஏந்து அல்குல், குறுந் தொடி மகளிரொடு, |
|
5 |
காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப, |
மேலோர் உலகம் எய்தினன் எனாஅ, |
|
பொத்த அறையுள் போழ் வாய்க் கூகை, |
|
'சுட்டுக் குவி' எனச் செத்தோர்ப் பயிரும் |
|
கள்ளி அம் பறந்தலை ஒரு சிறை அல்கி, |
|
10 |
ஒள் எரி நைப்ப உடம்பு மாய்ந்தது; |
புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது, |
|
கல்லென் சுற்றமொடு கையழிந்து, புலவர் |
|
வாடிய பசியராகி, பிறர் |
|
நாடு படு செலவினர் ஆயினர், இனியே. |
|
திணையும் துறையும் அவை.
| |
ஆயைக் குட்டுவன் கீரனார் பாடியது.
|
241 |
'திண் தேர் இரவலர்க்கு, ஈத்த, தண் தார், |
|
அண்டிரன் வரூஉம்' என்ன, ஒண் தொடி |
|
வச்சிரத் தடக் கை நெடியோன் கோயிலுள், |
|
போர்ப்புறு முரசம் கறங்க, |
|
5 |
ஆர்ப்பு எழுந்தன்றால், விசும்பினானே. |
திணையும் துறையும் அவை.
| |
அவனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.
|
242 |
இளையோர் சூடார்; வளையோர் கொய்யார்; |
|
நல் யாழ் மருப்பின் மெல்ல வாங்கி, |
|
பாணன் சூடான்; பாடினி அணியாள்; |
|
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த |
|
5 |
வல் வேல் சாத்தன் மாய்ந்த பின்றை |
முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே? |
|
திணையும் துறையும் அவை.
| |
ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனைக் குடவாயிற் கீரத்தனார் பாடியது.
|
243 |
இனி நினைந்து இரக்கம் ஆகின்று: திணி மணல் |
|
செய்வுறு பாவைக்குக் கொய் பூத் தைஇ, |
|
தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து, |
|
தழுவுவழித் தழீஇ, தூங்குவழித் தூங்கி, |
|
5 |
மறை எனல் அறியா மாயம் இல் ஆயமொடு |
உயர் சினை மருதத் துறை உறத் தாழ்ந்து, |
|
நீர் நணிப் படி கோடு ஏறி, சீர் மிக, |
|
கரையவர் மருள, திரைஅகம் பிதிர, |
|
நெடு நீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து, |
|
10 |
குளித்து மணல் கொண்ட கல்லா இளமை |
அளிதோதானே! யாண்டு உண்டு கொல்லோ |
|
தொடித் தலை விழுத் தண்டு ஊன்றி, நடுக்குற்று, |
|
இரும் இடை மிடைந்த சில சொல் |
|
பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே? |
|
திணையும் துறைஉம் அவை.
| |
தொடித் தலை விழுத்தண்டினார் பாடியது.
|
260 |
வளரத் தொடினும், வௌவுபு திரிந்து, |
|
விளரி உறுதரும் தீம் தொடை நினையா, |
|
தளரும் நெஞ்சம் தலைஇ, மனையோள் |
|
உளரும் கூந்தல் நோக்கி, களர |
|
5 |
கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி, |
பசி படு மருங்குலை, கசிபு, கைதொழாஅ, |
|
'காணலென்கொல்?' என வினவினை வரூஉம் |
|
பாண! கேண்மதி, யாணரது நிலையே: |
|
புரவுத் தொடுத்து உண்குவைஆயினும், இரவு எழுந்து |
|
10 |
எவ்வம் கொள்குவைஆயினும், இரண்டும், |
கையுள் போலும்; கடிது அண்மையவே |
|
முன் ஊர்ப் பூசலின் தோன்றி, தன் ஊர் |
|
நெடு நிரை தழீஇய மீளியாளர் |
|
விடு கணை நீத்தம் துடி புணை ஆக, |
|
15 |
வென்றி தந்து, கொன்று கோள் விடுத்து, |
வையகம் புலம்ப வளைஇய பாம்பின் |
|
வை எயிற்று உய்ந்த மதியின், மறவர் |
|
கையகத்து உய்ந்த கன்றுடைப் பல் ஆன் |
|
நிரையொடு வந்த உரையன் ஆகி, |
|
20 |
உரி களை அரவம் மான, தானே |
அரிது செல் உலகில் சென்றனன்; உடம்பே, |
|
கானச் சிற்றியாற்று அருங் கரைக் கால் உற்று, |
|
கம்பமொடு துளங்கிய இலக்கம் போல, |
|
அம்பொடு துளங்கி ஆண்டு ஒழிந்தன்றே; |
|
25 |
உயர் இசை வெறுப்பத் தோன்றிய பெயரே, |
மடம்சால் மஞ்ஞை அணி மயிர் சூட்டி, |
|
இடம் பிறர் கொள்ளாச் சிறு வழி, |
|
படம் செய் பந்தர்க் கல் மிசையதுவே. |
|
திணை அது; துறை கையறு நிலை; பாண்பாட்டும் ஆம்.
| |
......................வடமோதங் கிழார் பாடியது.
|
261 |
அந்தோ! எந்தை அடையாப் பேர் இல்! |
|
வண்டு படு நறவின் தண்டா மண்டையொடு |
|
வரையாப் பெருஞ் சோற்று முரி வாய் முற்றம், |
|
வெற்று யாற்று அம்பியின் எற்று? அற்று ஆகக் |
|
5 |
கண்டனென், மன்ற; சோர்க, என் கண்ணே; |
வையம் காவலர் வளம் கெழு திரு நகர், |
|
மையல் யானை அயாவுயிர்த்தன்ன |
|
நெய் உலை சொரிந்த மை ஊன் ஓசை |
|
புதுக்கண் மாக்கள் செதுக்கண் ஆரப் |
|
10 |
பயந்தனை, மன்னால், முன்னே! இனியே |
பல் ஆ தழீஇய கல்லா வல் வில் |
|
உழைக் குரல் கூகை அழைப்ப ஆட்டி, |
|
நாகு முலை அன்ன நறும் பூங் கரந்தை |
|
விரகு அறியாளர் மரபின் சூட்ட, |
|
15 |
நிரை இவண் தந்து, நடுகல் ஆகிய |
வென் வேல் விடலை இன்மையின் புலம்பி, |
|
கொய்ம் மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய |
|
கழி கல மகடூஉப் போலப் |
|
புல்லென்றனையால், பல் அணி இழந்தே. |
|
திணையும் துறையும் அவை.
| |
.....................ஆவூர் மூலங் கிழார் பாடியது.
|
263 |
பெருங் களிற்று அடியின் தோன்றும் ஒரு கண் |
|
இரும் பறை இரவல! சேறிஆயின், |
|
தொழாதனை கழிதல் ஓம்புமதி; வழாது, |
|
வண்டு மேம்படூஉம், இவ் வறநிலை ஆறே |
|
5 |
பல் ஆத் திரள் நிரை பெயர்தரப் பெயர்தந்து, |
கல்லா இளையர் நீங்க நீங்கான், |
|
வில் உமிழ் கடுங் கணை மூழ்க, |
|
கொல் புனல் சிறையின் விலங்கியோன் கல்லே. |
|
திணை கரந்தை; துறை கையறுநிலை.
| |
......................................................................
|
264 |
பரலுடை மருங்கின் பதுக்கை சேர்த்தி, |
|
மரல் வகுந்து தொடுத்த செம் பூங் கண்ணியொடு, |
|
அணி மயில் பீலி சூட்டி, பெயர் பொறித்து, |
|
இனி நட்டனரே, கல்லும்; கன்றொடு |
|
5 |
கறவை தந்து பகைவர் ஓட்டிய |
நெடுந்தகை கழிந்தமை அறியாது, |
|
இன்றும் வரும்கொல், பாணரது கடும்பே? |
|
திணையும் துறையும் அவை.
| |
....................உறையூர் இளம்பொன் வாணிகனார் பாடியது.
|
265 |
ஊர் நனி இறந்த பார் முதிர் பறந்தலை, |
|
ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீப் |
|
போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்து, |
|
பல் ஆன் கோவலர் படலை சூட்ட, |
|
5 |
கல் ஆயினையே கடு மான் தோன்றல்! |
வான் ஏறு புரையும் நின் தாள் நிழல் வாழ்க்கைப் |
|
பரிசிலர் செல்வம் அன்றியும், விரி தார்க் |
|
கடும் பகட்டு யானை வேந்தர் |
|
ஒடுங்கா வென்றியும், நின்னொடு செலவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
......................சோணாட்டு முகையலூர்ச் சிறு கருந் தும்பியார் பாடியது.
|
270 |
பல் மீன் இமைக்கும் மாக விசும்பின் |
|
இரங்கு முரசின், இனம்சால் யானை, |
|
நிலம் தவ உருட்டிய நேமியோரும் |
|
சமங்கண் கூடித் தாம் வேட்பவ்வே |
|
5 |
நறு விரை துறந்த நாறா நரைத் தலைச் |
சிறுவர் தாயே! பேரில் பெண்டே! |
|
நோகோ யானே; நோக்குமதி நீயே; |
|
மறப் படை நுவலும் அரிக் குரல் தண்ணுமை |
|
இன் இசை கேட்ட துன் அரு மறவர் |
|
10 |
வென்றி தரு வேட்கையர், மன்றம் கொண்மார், |
பேர் அமர் உழந்த வெருவரு பறந்தலை, |
|
விழு நவி பாய்ந்த மரத்தின், |
|
வாள் மிசைக் கிடந்த ஆண்மையோன் திறத்தே. |
|
திணை கரந்தை; துறை கையறு நிலை. |
|
(கண்டார் தாய்க்குச் சொல்லியது)
| |
கழாத்தலையார் பாடியது.
|