முகப்பு | ![]() |
தாபத நிலை |
143 |
'மலை வான் கொள்க!' என, உயர் பலி தூஉய், |
|
'மாரி ஆன்று, மழை மேக்கு உயர்க!' எனக் |
|
கடவுள் பேணிய குறவர் மாக்கள், |
|
பெயல் கண்மாறிய உவகையர், சாரல் |
|
5 |
புனத் தினை அயிலும் நாட! சினப் போர்க் |
கை வள் ஈகைக் கடு மான் பேக! |
|
யார்கொல் அளியள்தானே நெருநல், |
|
சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்தென, |
|
குணில் பாய் முரசின் இரங்கும் அருவி |
|
10 |
நளி இருஞ் சிலம்பின் சீறூர் ஆங்கண், |
வாயில் தோன்றி, வாழ்த்தி நின்று, |
|
நின்னும் நின் மலையும் பாட, இன்னாது |
|
இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள், |
|
முலையகம் நனைப்ப, விம்மி, |
|
15 |
குழல் இனைவதுபோல் அழுதனள், பெரிதே? |
திணை பெருந்திணை; துறை குறுங்கலி; தாபதநிலையும் ஆம்.
| |
அவனால் துறக்கப்பட்ட கண்ணகி காரணமாக அவனைக் கபிலர் பாடியது.
|
248 |
அளியதாமே, சிறு வெள் ஆம்பல்! |
|
இளையமாகத் தழை ஆயினவே; |
|
இனியே, பெரு வளக் கொழுநன் மாய்ந்தென, பொழுது மறுத்து, |
|
இன்னா வைகல் உண்ணும் |
|
5 |
அல்லிப் படூஉம் புல் ஆயினவே. |
திணை அது; துறை தாபத நிலை.
| |
.......................... ஒக்கூர் மாசாத்தனார் பாடியது.
|
249 |
கதிர் மூக்கு ஆரல் கீழ் சேற்று ஒளிப்ப, |
|
கணைக் கோட்டு வாளை மீநீர்ப் பிறழ, |
|
எரிப் பூம் பழனம் நெரித்து உடன் வலைஞர் |
|
அரிக் குரல் தடாரியின் யாமை மிளிர, |
|
5 |
பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு, |
உறழ் வேல் அன்ன ஒண் கயல் முகக்கும், |
|
அகல் நாட்டு அண்ணல் புகாவே, நெருநைப் |
|
பகல் இடம் கண்ணிப் பலரொடும் கூடி, |
|
ஒருவழிப்பட்டன்று; மன்னே! இன்றே, |
|
10 |
அடங்கிய கற்பின், ஆய் நுதல் மடந்தை, |
உயர் நிலை உலகம் அவன் புக,.... வரி |
|
நீறு ஆடு சுளகின் சீறிடம் நீக்கி, |
|
அழுதல் ஆனாக் கண்ணள், |
|
மெழுகும், ஆப்பி கண் கலுழ் நீரானே. |
|
திணையும் துறையும் அவை.
| |
....................தும்பி சேர் கீரனார் பாடியது.
|
250 |
குய் குரல் மலிந்த கொழுந் துவை அடிசில் |
|
இரவலர்த் தடுத்த வாயில், புரவலர் |
|
கண்ணீர்த் தடுத்த தண் நறும் பந்தர், |
|
கூந்தல் கொய்து, குறுந் தொடி நீக்கி, |
|
5 |
அல்லி உணவின் மனைவியொடு, இனியே |
புல்லென்றனையால் வளம் கெழு திரு நகர்! |
|
வான் சோறு கொண்டு தீம் பால் வேண்டும் |
|
முனித்தலைப் புதல்வர் தந்தை |
|
தனித் தலைப் பெருங் காடு முன்னிய பின்னே. |
|
திணையும் துறையும் அவை.
| |
...................தாயங்கண்ணியார் பாடியது.
|