முகப்பு | ![]() |
தானை மறம் |
87 |
களம் புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து, |
|
எம்முளும் உளன் ஒரு பொருநன்; வைகல் |
|
எண் தேர் செய்யும் தச்சன் |
|
திங்கள் வலித்த கால் அன்னோனே. |
|
திணை தும்பை; துறை தானை மறம்.
| |
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
|
88 |
யாவிர் ஆயினும், 'கூழை தார் கொண்டு |
|
யாம் பொருதும்' என்றல் ஓம்புமின் ஓங்கு திறல் |
|
ஒளிறு இலங்கு நெடு வேல் மழவர் பெருமகன், |
|
கதிர் விடு நுண் பூண் அம் பகட்டு மார்பின் |
|
5 |
விழவு மேம்பட்ட நல் போர் |
முழவுத் தோள் என்னையைக் காணா ஊங்கே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
89 |
'இழை அணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல், |
|
மடவரல், உண்கண், வாள் நுதல், விறலி! |
|
பொருநரும் உளரோ, நும் அகன் தலை நாட்டு?' என, |
|
வினவல் ஆனாப் பொருபடை வேந்தே! |
|
5 |
எறி கோல் அஞ்சா அரவின் அன்ன |
சிறு வல் மள்ளரும் உளரே; அதாஅன்று, |
|
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை |
|
வளி பொரு தெண் கண் கேட்பின், |
|
'அது போர்' என்னும் என்னையும் உளனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
90 |
உடை வளை கடுப்ப மலர்ந்த காந்தள் |
|
அடை மல்கு குளவியொடு கமழும் சாரல், |
|
மறப் புலி உடலின், மான் கணம் உளவோ? |
|
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய |
|
5 |
இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்? |
அச்சொடு தாக்கிப் பார் உற்று இங்கிய |
|
பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய, |
|
வரி மணல் ஞெமர, கல் பக, நடக்கும் |
|
பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ? |
|
10 |
எழுமரம் கடுக்கும் தாள் தோய் தடக் கை |
வழு இல் வன் கை, மழவர் பெரும! |
|
இரு நிலம் மண் கொண்டு சிலைக்கும் |
|
பொருநரும் உளரோ, நீ களம் புகினே? |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
170 |
மரை பிரித்து உண்ட நெல்லி வேலி, |
|
பரலுடை முன்றில், அம் குடிச் சீறூர், |
|
எல் அடிப்படுத்த கல்லாக் காட்சி |
|
வில் உழுது உண்மார் நாப்பண், ஒல்லென, |
|
5 |
இழி பிறப்பாளன் கருங் கை சிவப்ப, |
வலி துரந்து சிலைக்கும் வன் கண் கடுந் துடி |
|
புலி துஞ்சு நெடு வரைக் குடிஞையோடு இரட்டும் |
|
மலை கெழு நாடன், கூர்வேல் பிட்டன், |
|
குறுகல் ஓம்புமின், தெவ்விர்! அவனே |
|
10 |
சிறு கண் யானை வெண் கோடு பயந்த |
ஒளி திகழ் முத்தம் விறலியர்க்கு ஈத்து, |
|
நார் பிழிக் கொண்ட வெங் கள் தேறல் |
|
பண் அமை நல் யாழ்ப் பாண் கடும்பு அருத்தி, |
|
நசைவர்க்கு மென்மை அல்லது, பகைவர்க்கு |
|
15 |
இரும்பு பயன் படுக்கும் கருங் கைக் கொல்லன் |
விசைத்து எறி கூடமொடு பொரூஉம் |
|
உலைக் கல் அன்ன, வல்லாளன்னே. |
|
திணை வாகை; துறை வல்லாண் முல்லை; தானைமறமும் ஆம்.
| |
அவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.
|
294 |
'வெண்குடை மதியம் மேல் நிலாத் திகழ்தர, |
|
கண்கூடு இறுத்த கடல் மருள் பாசறை, |
|
குமரிப் படை தழீஇய கூற்று வினை ஆடவர் |
|
தமர் பிறர் அறியா அமர் மயங்கு அழுவத்து, |
|
5 |
இறையும் பெயரும் தோற்றி, நுமருள் |
நாள் முறை தபுத்தீர் வம்மின், ஈங்கு' என, |
|
போர் மலைந்து ஒரு சிறை நிற்ப, யாவரும் |
|
அரவு உமிழ் மணியின் குறுகார் |
|
நிரை தார் மார்பின் நின் கேள்வனை, பிறரே. |
|
திணை தும்பை; துறை தானைமறம்.
| |
பெருந்தலைச் சாத்தனார் பாடியது.
|
300 |
'தோல் தா; தோல் தா' என்றி; தோலொடு |
|
துறுகல் மறையினும் உய்குவை போலாய்; |
|
நெருநல் எல்லை நீ எறிந்தோன் தம்பி, |
|
அகல் பெய் குன்றியின் சுழலும் கண்ணன், |
|
5 |
பேர் ஊர் அட்ட கள்ளிற்கு |
ஓர் இல் கோயில் தேருமால் நின்னே. |
|
திணை தும்பை; துறை தானை மறம்.
| |
அரிசில் கிழார் பாடியது.
|
301 |
பல் சான்றீரே! பல் சான்றீரே! |
|
குமரி மகளிர் கூந்தல் புரைய, |
|
அமரின் இட்ட அரு முள் வேலிக் |
|
கல்லென் பாசறைப் பல் சான்றீரே! |
|
5 |
முரசு முழங்கு தானை நும் அரசும் ஓம்புமின்; |
ஒளிறு ஏந்து மருப்பின் நும் களிறும் போற்றுமின்; |
|
எனை நாள் தங்கும் நும் போரே, அனை நாள் |
|
எறியார் எறிதல் யாவணது? எறிந்தோர் |
|
எதிர் சென்று எறிதலும்செல்லான்; அதனால் |
|
10 |
அறிந்தோர் யார், அவன் கண்ணிய பொருளே? |
'பலம்' என்று இகழ்தல் ஓம்புமின்; உதுக் காண் |
|
நிலன் அளப்பன்ன நில்லாக் குறு நெறி, |
|
வண் பரிப் புரவிப் பண்பு பாராட்டி, |
|
எல்லிடைப் படர்தந்தோனே; கல்லென |
|
15 |
வேந்து ஊர் யானைக்கு அல்லது, |
ஏந்துவன் போலான், தன் இலங்கு இலை வேலே. |
|
திணையும் துறையும் அவை.
| |
ஆவூர் மூலங் கிழார் பாடியது.
|