முகப்பு | ![]() |
தொகைநிலை |
62 |
வரு தார் தாங்கி, அமர் மிகல் யாவது? |
|
பொருது ஆண்டு ஒழிந்த மைந்தர் புண் தொட்டு, |
|
குருதி செங் கைக் கூந்தல் தீட்டி, |
|
நிறம் கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர் |
|
5 |
எடுத்து எறி அனந்தல் பறைச் சீர் தூங்க, |
பருந்து அருந்துற்ற தானையொடு, செரு முனிந்து, |
|
அறத்தின் மண்டிய மறப் போர் வேந்தர் |
|
தாம் மாய்ந்தனரே; குடை துளங்கினவே; |
|
உரைசால் சிறப்பின் முரைசு ஒழிந்தனவே; |
|
10 |
பல் நூறு அடுக்கிய வேறு படு பைஞ் ஞிலம் |
இடம் கெட ஈண்டிய வியன் கண் பாசறை, |
|
களம் கொளற்கு உரியோர் இன்றி, தெறுவர, |
|
உடன் வீழ்ந்தன்றால், அமரே; பெண்டிரும் |
|
பாசடகு மிசையார், பனி நீர் மூழ்கார், |
|
15 |
மார்பகம் பொருந்தி ஆங்கு அமைந்தனரே; |
வாடாப் பூவின், இமையா நாட்டத்து, |
|
நாற்ற உணவினோரும் ஆற்ற |
|
அரும் பெறல் உலகம் நிறைய |
|
விருந்து பெற்றனரால்; பொலிக, நும் புகழே! |
|
திணை தும்பை; துறை தொகை நிலை.
| |
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும், சோழன் வேற் பல் தடக்கைப் பெருவிறற்கிள்ளியும், போர்ப்புறத்துப் பொருது வீழ்ந்தாரைக் கழாத்தலையார் பாடியது.
|
63 |
எனைப் பல் யானையும் அம்பொடு துளங்கி, |
|
விளைக்கும் வினை இன்றிப் படை ஒழிந்தனவே; |
|
விறல் புகழ் மாண்ட புரவி எல்லாம் |
|
மறத் தகை மைந்தரொடு ஆண்டுப் பட்டனவே; |
|
5 |
தேர் தர வந்த சான்றோர் எல்லாம், |
தோல் கண் மறைப்ப, ஒருங்கு மாய்ந்தனரே; |
|
விசித்து வினை மாண்ட மயிர்க் கண் முரசம், |
|
பொறுக்குநர் இன்மையின், இருந்து விளிந்தனவே; |
|
சாந்து அமை மார்பில் நெடு வேல் பாய்ந்தென, |
|
10 |
வேந்தரும் பொருது, களத்து ஒழிந்தனர்; இனியே, |
என் ஆவதுகொல்தானே கழனி |
|
ஆம்பல் வள்ளித் தொடிக் கை மகளிர் |
|
பாசவல் முக்கி, தண் புனல் பாயும், |
|
யாணர் அறாஅ வைப்பின் |
|
15 |
காமர் கிடக்கை அவர் அகன் தலை நாடே? |
திணையும் துறையும் அவை.
| |
அவரை அக் களத்தில் பரணர் பாடியது.
|