முகப்பு | ![]() |
நீண் மொழி |
287 |
துடி எறியும் புலைய! |
|
எறி கோல் கொள்ளும் இழிசின! |
|
காலம் மாரியின் அம்பு தைப்பினும், |
|
வயல் கெண்டையின் வேல் பிறழினும், |
|
5 |
பொலம் புனை ஓடை அண்ணல் யானை |
இலங்கு வால் மருப்பின் நுதி மடுத்து ஊன்றினும், |
|
ஓடல் செல்லாப் பீடுடையாளர் |
|
நெடு நீர்ப் பொய்கைப் பிறழிய வாளை |
|
நெல்லுடை நெடு நகர்க் கூட்டுமுதல் புரளும், |
|
10 |
தண்ணடை பெறுதல் யாவது? படினே, |
மாசு இல் மகளிர் மன்றல் நன்றும், |
|
உயர் நிலை உலகத்து, நுகர்ப; அதனால் |
|
வம்ப வேந்தன் தானை |
|
இம்பர் நின்றும் காண்டிரோ, வரவே! |
|
திணை கரந்தை; துறை நீண்மொழி.
| |
சாத்தந்தையார் பாடியது.
|
368 |
களிறு முகந்து பெயர்குவம் எனினே, |
|
ஒளிறு மழை தவிர்க்கும் குன்றம் போல, |
|
கைம்மா எல்லாம் கணை இடத் தொலைந்தன; |
|
கொடுஞ்சி நெடுந் தேர் முகக்குவம் எனினே; |
|
5 |
கடும் பரி நல் மான் வாங்குவயின் ஒல்கி, |
நெடும் பீடு அழிந்து, நிலம் சேர்ந்தனவே; |
|
கொய் சுவல் புரவி முகக்குவம் எனினே, |
|
மெய் நிறைந்த வழுவொடு பெரும்பிறிதாகி, |
|
வளி வழக்கு அறுத்த வங்கம் போல, |
|
10 |
குருதி அம் பெரும் புனல் கூர்ந்தனவே; ஆங்க |
முகவை இன்மையின் உகவை இன்றி, |
|
இரப்போர் இரங்கும் இன்னா வியன் களத்து, |
|
ஆள் அழிப்படுத்த வாள் ஏர் உழவ! |
|
கடாஅ யானைக் கால்வழி அன்ன என் |
|
15 |
தெடாரித் தெண் கண் தெளிர்ப்ப ஒற்றி, |
பாடி வந்தது எல்லாம், கோடியர் |
|
முழவு மருள் திரு மணி மிடைந்த நின் |
|
அரவு உறழ் ஆரம் முகக்குவம் எனவே. |
|
திணை வாகை; துறை மறக்களவழி.
| |
சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதன் சோழன் வேற் பல் தடக் கைப் பெரு நற்கிள்ளியொடு போர்ப் புறத்துப் பொருது வீழ்ந்து, ஆரம் கழுத்தன்னதாக உயிர் போகாது கிடந்தானைக் கழாத்தலையார் பாடியது.
|