முகப்பு | ![]() |
நெடுமொழி |
54 |
எம் கோன் இருந்த கம்பலை மூதூர், |
|
உடையோர் போல இடையின்று குறுகி, |
|
செம்மல் நாள் அவை அண்ணாந்து புகுதல் |
|
எம் அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே; |
|
5 |
இரவலர்க்கு எண்மை அல்லது புரவு எதிர்ந்து, |
வானம் நாண, வரையாது, சென்றோர்க்கு |
|
ஆனாது ஈயும் கவி கை வண்மைக் |
|
கடு மான் கோதை துப்பு எதிர்ந்து எழுந்த |
|
நெடுமொழி மன்னர் நினைக்கும் காலை, |
|
10 |
பாசிலைத் தொடுத்த, உவலைக் கண்ணி, |
மாசு உண் உடுக்கை, மடி வாய், இடையன் |
|
சிறு தலை ஆயமொடு குறுகல்செல்லாப் |
|
புலி துஞ்சு வியன் புலத்தற்றே |
|
வலி துஞ்சு தடக் கை அவனுடை நாடே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சேரமான் குட்டுவன் கோதையைக் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரன் பாடியது.
|
298 |
எமக்கே கலங்கல் தருமே; தானே |
|
தேறல் உண்ணும் மன்னே; நன்றும் |
|
இன்னான் மன்ற வேந்தே, இனியே |
|
நேரார் ஆர் எயில் முற்றி, |
|
5 |
வாய் மடித்து உரறி, 'நீ முந்து' என்னானே. |
திணை கரந்தை; துறை நெடுமொழி.
| |
ஆலியார் பாடியது.
|
376 |
விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப் |
|
பசுங் கதிர் மழுகிய சிவந்து வாங்கு அந்தி |
|
சிறு நனி பிறந்த பின்றை, செறி பிணிச் |
|
சிதாஅர் வள்பின் என் தெடாரி தழீஇ, |
|
5 |
பாணர் ஆரும்அளவை, யான் தன் |
யாணர் நல் மனைக் கூட்டுமுதல் நின்றனென்; |
|
இமைத்தோர் விழித்த மாத்திரை, ஞெரேரென, |
|
குணக்கு எழு திங்கள் கனை இருள் அகற்ற, |
|
பண்டு அறிவாரா உருவோடு, என் அரைத் |
|
10 |
தொன்று படு துளையொடு பரு இழை போகி, |
நைந்து கரை பறைந்த என் உடையும், நோக்கி, |
|
'விருந்தினன் அளியன், இவன்' என, பெருந்தகை |
|
நின்ற முரற்கை நீக்கி, நன்றும் |
|
அரவு வெகுண்டன்ன தேறலொடு, சூடு தருபு, |
|
15 |
நிரயத்து அன்ன என் வறன் களைந்து, அன்றே, |
இரவினானே, ஈத்தோன் எந்தை; |
|
அன்றை ஞான்றினொடு இன்றின் ஊங்கும், |
|
இரப்பச் சிந்தியேன், நிரப்பு அடு புணையின்; |
|
உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன்; |
|
20 |
நிறைக் குளப் புதவின் மகிழ்ந்தனென் ஆகி, |
ஒரு நாள், இரவலர் வரையா வள்ளியோர் கடைத்தலை, |
|
ஞாங்கர் நெடுமொழி பயிற்றி, |
|
தோன்றல் செல்லாது, என் சிறு கிணைக் குரலே. |
|
திணை அது; துறை இயன்மொழி.
| |
ஒய்மான் நல்லியாதனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.
|