முகப்பு | ![]() |
பரிசில் கடாநிலை |
11 |
அரி மயிர்த் திரள் முன்கை, |
|
வால் இழை, மட மங்கையர் |
|
வரி மணல் புனை பாவைக்குக் |
|
குலவுச் சினைப் பூக் கொய்து, |
|
5 |
தண் பொருநைப் புனல் பாயும், |
விண் பொரு புகழ், விறல் வஞ்சி, |
|
பாடல் சான்ற விறல் வேந்தனும்மே, |
|
வெப்பு உடைய அரண் கடந்து, |
|
துப்பு உறுவர் புறம் பெற்றிசினே; |
|
10 |
புறம் பெற்ற வய வேந்தன் |
மறம் பாடிய பாடினியும்மே, |
|
ஏர் உடைய விழுக் கழஞ்சின், |
|
சீர் உடைய இழை பெற்றிசினே; |
|
இழை பெற்ற பாடினிக்குக் |
|
15 |
குரல் புணர் சீர்க் கொளை வல் பாண் மகனும்மே, |
என ஆங்கு, |
|
ஒள் அழல் புரிந்த தாமரை |
|
வெள்ளி நாரால் பூ பெற்றிசினே. |
|
திணை பாடாண் திணை; துறை பரிசில் கடா நிலை.
| |
சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோவைப் பேய்மகள் இளவெயினி பாடியது.
|
101 |
ஒரு நாள் செல்லலம்; இரு நாள் செல்லலம்; |
|
பல நாள் பயின்று, பலரொடு செல்லினும், |
|
தலை நாள் போன்ற விருப்பினன்மாதோ |
|
இழை அணி யானை இயல் தேர் அஞ்சி |
|
5 |
அதியமான்; பரிசில் பெறூஉம் காலம் |
நீட்டினும், நீட்டாதுஆயினும், களிறு தன் |
|
கோட்டு இடை வைத்த கவளம் போலக் |
|
கையகத்தது; அது பொய் ஆகாதே; |
|
அருந்த ஏமாந்த நெஞ்சம்! |
|
10 |
வருந்த வேண்டா; வாழ்க, அவன் தாளே! |
திணை பாடாண் திணை; துறை பரிசில் கடாநிலை.
| |
அவனை அவர் பாடியது.
|
136 |
யாழ்ப் பத்தர்ப் புறம் கடுப்ப |
|
இழை வலந்த பல் துன்னத்து |
|
இடைப் புரை பற்றி, பிணி விடாஅ |
|
ஈர்க் குழாத்தோடு இறை கூர்ந்த |
|
5 |
பேஎன் பகை என ஒன்று என்கோ? |
உண்ணாமையின் ஊன் வாடி, |
|
தெண் நீரின் கண் மல்கி, |
|
கசிவுற்ற என் பல் கிளையொடு |
|
பசி அலைக்கும் பகை ஒன்று என்கோ? |
|
10 |
அன்ன தன்மையும் அறிந்து ஈயார், |
'நின்னது தா' என, நிலை தளர, |
|
மரம் பிறங்கிய நளிச் சிலம்பில், |
|
குரங்கு அன்ன புன் குறுங் கூளியர் |
|
பரந்து அலைக்கும் பகை ஒன்று என்கோ? |
|
15 |
'ஆஅங்கு, எனைப் பகையும் அறியுநன் ஆய்' |
எனக் கருதி, பெயர் ஏத்தி, |
|
வாய் ஆர நின் இசை நம்பி, |
|
சுடர் சுட்ட சுரத்து ஏறி, |
|
இவண் வந்த பெரு நசையேம்; |
|
20 |
'எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர்; |
பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப' என, |
|
அனைத்து உரைத்தனன் யான் ஆக, |
|
நினக்கு ஒத்தது நீ நாடி, |
|
நல்கினை விடுமதி, பரிசில்! அல்கலும், |
|
25 |
தண் புனல் வாயில் துறையூர் முன்துறை |
நுண் பல மணலினும் ஏத்தி, |
|
உண்குவம், பெரும! நீ நல்கிய வளனே. |
|
திணை அது; துறை பரிசில் கடாநிலை.
| |
அவனைத் துறையூர் ஓடைகிழார் பாடியது.
|
139 |
சுவல் அழுந்தப் பல காய |
|
சில் ஓதிப் பல் இளைஞருமே, |
|
அடி வருந்த நெடிது ஏறிய |
|
கொடி மருங்குல் விறலியருமே, |
|
5 |
வாழ்தல் வேண்டிப் |
பொய் கூறேன்; மெய் கூறுவல்; |
|
ஓடாப் பூட்கை உரவோர் மருக! |
|
உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந! |
|
மாயா உள்ளமொடு பரிசில் துன்னி, |
|
10 |
கனி பதம் பார்க்கும் காலை அன்றே; |
ஈதல் ஆனான், வேந்தே; வேந்தற்குச் |
|
சாதல் அஞ்சாய், நீயே; ஆயிடை, |
|
இரு நிலம் மிளிர்ந்திசினாஅங்கு, ஒரு நாள், |
|
அருஞ் சமம் வருகுவதுஆயின், |
|
15 |
வருந்தலும் உண்டு, என் பைதல் அம் கடும்பே. |
திணை அது; துறை பரிசில் கடாநிலை.
| |
அவனை அவர் பாடியது.
|
158 |
முரசு கடிப்பு இகுப்பவும், வால் வளை துவைப்பவும், |
|
அரசுடன் பொருத அண்ணல் நெடு வரை, |
|
கறங்கு வெள் அருவி கல் அலைத்து ஒழுகும் |
|
பறம்பின் கோமான் பாரியும்; பிறங்கு மிசைக் |
|
5 |
கொல்லி ஆண்ட வல் வில் ஓரியும்; |
காரி ஊர்ந்து பேர் அமர்க் கடந்த, |
|
மாரி ஈகை, மறப் போர் மலையனும்; |
|
ஊராது ஏந்திய குதிரை, கூர் வேல், |
|
கூவிளங் கண்ணி, கொடும் பூண், எழினியும்; |
|
10 |
ஈர்ந் தண் சிலம்பின் இருள் தூங்கு நளி முழை, |
அருந் திறல் கடவுள் காக்கும் உயர் சிமை, |
|
பெருங் கல் நாடன் பேகனும்; திருந்து மொழி |
|
மோசி பாடிய ஆயும்; ஆர்வம் உற்று |
|
உள்ளி வருநர் உலைவு நனி தீர, |
|
15 |
தள்ளாது ஈயும் தகைசால் வண்மை, |
கொள்ளார் ஓட்டிய, நள்ளியும் என ஆங்கு |
|
எழுவர் மாய்ந்த பின்றை, 'அழிவரப் |
|
பாடி வருநரும் பிறரும் கூடி |
|
இரந்தோர் அற்றம் தீர்க்கு' என, விரைந்து, இவண் |
|
20 |
உள்ளி வந்தனென், யானே; விசும்புறக் |
கழை வளர் சிலம்பின் வழையொடு நீடி, |
|
ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று, |
|
முள் புற முது கனி பெற்ற கடுவன் |
|
துய்த் தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும், |
|
25 |
அதிரா யாணர், முதிரத்துக் கிழவ! |
இவண் விளங்கு சிறப்பின், இயல் தேர்க் குமண! |
|
இசை மேந்தோன்றிய வண்மையொடு, |
|
பகை மேம்படுக, நீ ஏந்திய வேலே! |
|
திணை அது; துறை வாழ்த்தியல்; பரிசில் கடா நிலையும் ஆம்.
| |
குமணனைப் பெருஞ்சித்திரனார் பாடியது.
|
159 |
'வாழும் நாளோடு யாண்டு பல உண்மையின், |
|
தீர்தல் செல்லாது, என் உயிர்' எனப் பல புலந்து, |
|
கோல் காலாகக் குறும் பல ஒதுங்கி, |
|
நூல் விரித்தன்ன கதுப்பினள், கண் துயின்று, |
|
5 |
முன்றில் போகா முதிர்வினள் யாயும்; |
பசந்த மேனியொடு படர் அட வருந்தி, |
|
மருங்கில் கொண்ட பல் குறுமாக்கள் |
|
பிசைந்து தின, வாடிய முலையள், பெரிது அழிந்து, |
|
குப்பைக் கீரை கொய்கண் அகைத்த |
|
10 |
முற்றா இளந் தளிர் கொய்துகொண்டு, உப்பு இன்று, |
நீர் உலைஆக ஏற்றி, மோர் இன்று, |
|
அவிழ்ப் பதம் மறந்து, பாசடகு மிசைந்து, |
|
மாசொடு குறைந்த உடுக்கையள், அறம் பழியா, |
|
துவ்வாளாகிய என் வெய்யோளும்; |
|
15 |
என்றாங்கு, இருவர் நெஞ்சமும் உவப்ப கானவர் |
கரி புனம் மயக்கிய அகன்கண் கொல்லை, |
|
ஐவனம் வித்தி, மையுறக் கவினி, |
|
ஈனல்செல்லா ஏனற்கு இழுமெனக் |
|
கருவி வானம் தலைஇ யாங்கும், |
|
20 |
ஈத்த நின் புகழ் ஏத்தி, தொக்க என், |
பசி தினத் திரங்கிய, ஒக்கலும் உவப்ப |
|
உயர்ந்து ஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும், |
|
தவிர்ந்து விடு பரிசில் கொள்ளலென்; உவந்து, நீ |
|
இன்புற விடுதிஆயின், சிறிது |
|
25 |
குன்றியும் கொள்வல், கூர் வேல் குமண! |
அதற்பட அருளல் வேண்டுவல் விறல் புகழ் |
|
வசை இல் விழுத் திணைப் பிறந்த |
|
இசை மேந் தோன்றல்! நிற் பாடிய யானே. |
|
திணை அது; துறை பரிசில் கடா நிலை.
| |
அவனை அவர் பாடியது.
|
160 |
'உரு கெழு ஞாயிற்று ஒண் கதிர் மிசைந்த |
|
முளி புல் கானம் குழைப்ப, கல்லென |
|
அதிர் குரல் ஏறொடு துளி சொரிந்தாங்கு, |
|
பசி தினத் திரங்கிய கசிவுடை யாக்கை |
|
5 |
அவிழ் புகுவு அறியாதுஆகலின், வாடிய |
நெறி கொள் வரிக் குடர் குளிப்பத் தண்ணென, |
|
குய் கொள் கொழுந் துவை நெய்யுடை அடிசில், |
|
மதி சேர் நாள்மீன் போல, நவின்ற |
|
சிறு பொன் நன் கலம் சுற்ற இரீஇ, |
|
10 |
"கேடு இன்றாக, பாடுநர் கடும்பு" என, |
அரிது பெறு பொலங் கலம் எளிதினின் வீசி, |
|
நட்டோர் நட்ட நல் இசைக் குமணன், |
|
மட்டு ஆர் மறுகின், முதிரத்தோனே; |
|
செல்குவைஆயின், நல்குவன், பெரிது' என, |
|
15 |
பல் புகழ் நுவலுநர் கூற, வல் விரைந்து, |
உள்ளம் துரப்ப வந்தனென்; எள்ளுற்று, |
|
இல் உணாத் துறத்தலின், இல் மறந்து உறையும் |
|
புல் உளைக் குடுமிப் புதல்வன் பல் மாண் |
|
பால் இல் வறு முலை சுவைத்தனன் பெறாஅன், |
|
20 |
கூழும் சோறும் கடைஇ, ஊழின் |
உள் இல் வறுங் கலம் திறந்து, அழக் கண்டு, |
|
மறப் புலி உரைத்தும், மதியம் காட்டியும், |
|
நொந்தனளாகி, 'நுந்தையை உள்ளி, |
|
பொடிந்த நின் செவ்வி காட்டு' எனப் பலவும் |
|
25 |
வினவல் ஆனாளாகி, நனவின் |
அல்லல் உழப்போள் மல்லல் சிறப்ப, |
|
செல்லாச் செல்வம் மிகுத்தனை, வல்லே |
|
விடுதல் வேண்டுவல் அத்தை; படு திரை |
|
நீர் சூழ் நிலவரை உயர, நின் |
|
30 |
சீர் கெழு விழுப் புகழ் ஏத்துகம் பலவே. |
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
164 |
ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பின் |
|
ஆம்பி பூப்ப, தேம்பு பசி உழவா, |
|
பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி, |
|
இல்லி தூர்ந்த பொல்லா வறு முலை |
|
5 |
சுவைத்தொறு அழூஉம் தன் மகத்து முகம் நோக்கி, |
நீரொடு நிறைந்த ஈர் இதழ் மழைக்கண் என் |
|
மனையோள் எவ்வம் நோக்கி, நினைஇ, |
|
நிற் படர்ந்திசினே நல் போர்க் குமண! |
|
என் நிலை அறிந்தனைஆயின், இந் நிலைத் |
|
10 |
தொடுத்தும் கொள்ளாது அமையலென் அடுக்கிய |
பண் அமை நரம்பின் பச்சை நல் யாழ், |
|
மண் அமை முழவின், வயிரியர் |
|
இன்மை தீர்க்கும் குடிப் பிறந்தோயே. |
|
திணை அது; துறை பரிசில் கடாநிலை.
| |
தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு பற்றியிருந்த குமணனைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.
|
169 |
நும் படை செல்லும்காலை, அவர் படை |
|
எடுத்து எறி தானை முன்னரை எனாஅ, |
|
அவர் படை வரூஉம்காலை, நும் படைக் |
|
கூழை தாங்கிய, அகல் யாற்றுக் |
|
5 |
குன்று விலங்கு சிறையின் நின்றனை எனாஅ, |
அரிதால், பெரும! நின் செவ்வி என்றும்; |
|
பெரிதால் அத்தை, என் கடும்பினது இடும்பை; |
|
இன்னே விடுமதி பரிசில்! வென் வேல் |
|
இளம் பல் கோசர் விளங்கு படை கன்மார், |
|
10 |
இகலினர் எறிந்த அகல் இலை முருக்கின் |
பெரு மரக் கம்பம் போல, |
|
பொருநர்க்கு உலையா நின் வலன் வாழியவே! |
|
திணை அது; துறை பரிசில் கடா நிலை.
| |
அவனைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.
|
196 |
ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும் |
|
ஒல்லாது இல் என மறுத்தலும், இரண்டும், |
|
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே; |
|
ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது |
|
5 |
இல் என மறுத்தலும், இரண்டும், வல்லே |
இரப்போர் வாட்டல் அன்றியும், புரப்போர் |
|
புகழ் குறைபடூஉம் வாயில்அத்தை; |
|
அனைத்து ஆகியர், இனி; இதுவே எனைத்தும் |
|
சேய்த்துக் காணாது கண்டனம்; அதனால், |
|
10 |
நோய் இலராக நின் புதல்வர்; யானும், |
வெயில் என முனியேன், பனி என மடியேன், |
|
கல் குயின்றன்ன என் நல்கூர் வளி மறை, |
|
நாண் அலது இல்லாக் கற்பின் வாள் நுதல் |
|
மெல் இயல் குறு மகள் உள்ளிச் |
|
15 |
செல்வல் அத்தை; சிறக்க, நின் நாளே! |
திணை பாடாண் திணை; துறை பரிசில் கடா நிலை.
| |
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் பரிசில் நீட்டித்தானை ஆவூர் மூலங் கிழார் பாடியது.
|
197 |
வளி நடந்தன்ன வாச் செலல் இவுளியொடு |
|
கொடி நுடங்கு மிசைய தேரினர் எனாஅ, |
|
கடல் கண்டன்ன ஒண் படைத் தானையொடு |
|
மலை மாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ, |
|
5 |
உரும் உரற்றன்ன உட்குவரு முரசமொடு |
செரு மேம்படூஉம் வென்றியர் எனாஅ, |
|
மண் கெழு தானை, ஒண் பூண், வேந்தர் |
|
வெண் குடைச் செல்வம் வியத்தலோ இலமே; |
|
எம்மால் வியக்கப்படூஉமோரே, |
|
10 |
இடு முள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த |
குறு நறு முஞ்ஞைக் கொழுங் கண் குற்றடகு, |
|
புன் புல வரகின் சொன்றியொடு, பெறூஉம், |
|
சீறூர் மன்னர் ஆயினும், எம் வயின் |
|
பாடு அறிந்து ஒழுகும் பண்பினாரே; |
|
15 |
மிகப் பேர் எவ்வம் உறினும், எனைத்தும் |
உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம்; |
|
நல் அறிவு உடையோர் நல்குரவு |
|
உள்ளுதும், பெரும! யாம், உவந்து, நனி பெரிதே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் பரிசில் நீட்டித்தானைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
|
198 |
'அருவி தாழ்ந்த பெரு வரை போல |
|
ஆரமொடு பொலிந்த மார்பில் தண்டா, |
|
கடவுள் சான்ற கற்பின், சேயிழை |
|
மடவோள் பயந்த மணி மருள் அவ் வாய்க் |
|
5 |
கிண்கிணிப் புதல்வர் பொலிக!' என்று ஏத்தி, |
திண் தேர் அண்ணல் நிற் பாராட்டி, |
|
காதல் பெருமையின் கனவினும் அரற்றும் என் |
|
காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப, |
|
ஆல் அமர் கடவுள் அன்ன நின் செல்வம், |
|
10 |
வேல் கெழு குருசில்! கண்டேன்; ஆதலின், |
விடுத்தனென்; வாழ்க, நின் கண்ணி! தொடுத்த |
|
தண் தமிழ் வரைப்பகம் கொண்டி ஆக, |
|
பனித்துக் கூட்டு உண்ணும் தணிப்பு அருங் கடுந் திறல் |
|
நின் ஓரன்ன நின் புதல்வர், என்றும், |
|
15 |
ஒன்னார் வாட அருங் கலம் தந்து, நும் |
பொன்னுடை நெடு நகர் நிறைய வைத்த நின் |
|
முன்னோர் போல்க, இவர் பெருங் கண்ணோட்டம்! |
|
யாண்டும் நாளும் பெருகி, ஈண்டு திரைப் |
|
பெருங் கடல் நீரினும், அக் கடல் மணலினும், |
|
20 |
நீண்டு உயர் வானத்து உறையினும், நன்றும், |
இவர் பெறும் புதல்வர்க் காண்தொறும், நீயும், |
|
புகன்ற செல்வமொடு புகழ் இனிது விளங்கி, |
|
நீடு வாழிய! நெடுந்தகை! யானும் |
|
கேள் இல் சேஎய் நாட்டின், எந்நாளும், |
|
25 |
துளி நசைப் புள்ளின் நின் அளி நசைக்கு இரங்கி, நின் |
அடி நிழல் பழகிய அடியுறை; |
|
கடுமான் மாற! மறவாதீமே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் பாடியது.
|
199 |
கடவுள் ஆலத்துத் தடவுச் சினைப் பல் பழம் |
|
நெருநல் உண்டனம் என்னாது, பின்னும் |
|
செலவு ஆனாவே, கலி கொள் புள்ளினம்; |
|
அனையர் வாழியோ இரவலர்; அவரைப் |
|
5 |
புரவு எதிர்கொள்ளும் பெருஞ் செய் ஆடவர் |
உடைமை ஆகும், அவர் உடைமை; |
|
அவர் இன்மை ஆகும், அவர் இன்மையே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பெரும்பதுமனார் பாட்டு.
|
209 |
பொய்கை நாரை போர்வில் சேக்கும் |
|
நெய்தல் அம் கழனி, நெல் அரி தொழுவர் |
|
கூம்பு விடு மெண் பிணி அவிழ்ந்த ஆம்பல் |
|
அகல் அடை அரியல் மாந்தி, தெண் கடல் |
|
5 |
படு திரை இன் சீர்ப் பாணி தூங்கும் |
மென் புல வைப்பின் நல் நாட்டுப் பொருந! |
|
பல் கனி நசைஇ, அல்கு விசும்பு உகந்து, |
|
பெரு மலை விடரகம் சிலம்ப முன்னி, |
|
பழனுடைப் பெரு மரம் தீர்ந்தென, கையற்று, |
|
10 |
பெறாது பெயரும் புள்ளினம் போல, நின் |
நசை தர வந்து, நின் இசை நுவல் பரிசிலென் |
|
வறுவியேன் பெயர்கோ? வாள் மேம்படுந! |
|
ஈயாய் ஆயினும், இரங்குவென்அல்லேன்; |
|
நோய் இலை ஆகுமதி; பெரும! நம்முள் |
|
15 |
குறு நணி காண்குவதாக நாளும், |
நறும் பல் ஒலிவரும் கதுப்பின், தே மொழி, |
|
தெரிஇழை மகளிர் பாணி பார்க்கும் |
|
பெரு வரை அன்ன மார்பின், |
|
செரு வெஞ் சேஎய்! நின் மகிழ் இருக்கையே! |
|
திணை அது; துறை பரிசில் கடா நிலை.
| |
மூவன் பரிசில் நீட்டித்தானைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.
|
210 |
மன்பதை காக்கும் நின் புரைமை நோக்காது, |
|
அன்பு கண் மாறிய அறன் இல் காட்சியொடு, |
|
நும்மனோரும் மற்று இனையர் ஆயின், |
|
எம்மனோர் இவண் பிறவலர் மாதோ; |
|
5 |
செயிர் தீர் கொள்கை எம் வெங் காதலி |
உயிர் சிறிது உடையள்ஆயின், எம்வயின் |
|
உள்ளாது இருத்தலோ அரிதே; அதனால், |
|
'அறன் இல் கூற்றம் திறன் இன்று துணியப் |
|
பிறன் ஆயினன்கொல்? இறீஇயர், என் உயிர்!' என |
|
10 |
நுவல்வுறு சிறுமையள் பல புலந்து உறையும் |
இடுக்கண் மனையோள் தீரிய, இந் நிலை |
|
விடுத்தேன்; வாழியர், குருசில்! உதுக் காண்: |
|
அவல நெஞ்சமொடு செல்வல் நிற் கறுத்தோர் |
|
அருங் கடி முனை அரண் போலப் |
15 |
பெருங் கையற்ற என் புலம்பு முந்துறுத்தே. |
திணையும் துறையும் அவை.
| |
சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை பரிசில் நீட்டித்தானைப் பெருங் குன்றூர் கிழார் பாடியது.
|
211 |
அஞ்சுவரு மரபின் வெஞ் சினப் புயலேறு |
|
அணங்குடை அரவின் அருந் தலை துமிய, |
|
நின்று காண்பன்ன நீள் மலை மிளிர, |
|
குன்று தூவ எறியும் அரவம் போல, |
|
5 |
முரசு எழுந்து இரங்கும் தானையொடு தலைச்சென்று, |
அரைசு படக் கடக்கும் உரைசால் தோன்றல்! நின் |
|
உள்ளி வந்த ஓங்கு நிலைப் பரிசிலென், |
|
'வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன்' என, |
|
கொள்ளா மாந்தர் கொடுமை கூற, நின் |
|
10 |
உள்ளியது முடித்தோய் மன்ற; முன் நாள் |
கை உள்ளது போல் காட்டி, வழி நாள் |
|
பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம் |
|
நாணாய் ஆயினும், நாணக் கூறி, என் |
|
நுணங்கு செந் நா அணங்க ஏத்தி, |
|
15 |
பாடப் பாடப் பாடுபுகழ் கொண்ட நின் |
ஆடு கொள் வியன் மார்பு தொழுதனென் பழிச்சிச் |
|
செல்வல் அத்தை, யானே வைகலும், |
|
வல்சி இன்மையின் வயின்வயின் மாறி, |
|
இல் எலி மடிந்த தொல் சுவர் வரைப்பின், |
|
20 |
பாஅல் இன்மையின் பல் பாடு சுவைத்து, |
முலைக்கோள் மறந்த புதல்வனொடு, |
|
மனைத் தொலைந்திருந்த என் வாள்நுதல் படர்ந்தே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
266 |
பயம் கெழு மா மழை பெய்யாது மாறி, |
|
கயம் களி முளியும் கோடைஆயினும், |
|
புழல்கால் ஆம்பல் அகல் அடை நீழல், |
|
கதிர்க் கோட்டு நந்தின் சுரி முக ஏற்றை |
|
5 |
நாகு இள வளையொடு பகல் மணம் புகூஉம் |
நீர் திகழ் கழனி நாடு கெழு பெரு விறல்! |
|
வான் தோய் நீள் குடை, வய மான் சென்னி! |
|
சான்றோர் இருந்த அவையத்து உற்றோன், |
|
'ஆசு ஆகு' என்னும் பூசல் போல, |
|
10 |
வல்லே களைமதிஅத்தை உள்ளிய |
விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை, |
|
பொறிப் புணர் உடம்பில் தோன்றி என் |
|
அறிவு கெட நின்ற நல்கூர்மையே! |
|
திணை பாடாண் திணை; துறை பரிசில் கடாநிலை.
| |
சோழன் உருவப் பல் தேர் இளஞ் சேட்சென்னியைப் பெருங்குன்றூர் கிழார் பாடியது.
|