முகப்பு | ![]() |
பரிசில் துறை |
126 |
ஒன்னார் யானை ஓடைப் பொன் கொண்டு, |
|
பாணர் சென்னி பொலியத் தைஇ, |
|
வாடாத் தாமரை சூட்டிய விழுச் சீர் |
|
ஓடாப் பூட்கை உரவோன் மருக! |
|
5 |
வல்லேம் அல்லேம் ஆயினும், வல்லே |
நின்வயின் கிளக்குவமாயின், கங்குல் |
|
துயில் மடிந்தன்ன தூங்கு இருள் இறும்பின், |
|
பறை இசை அருவி, முள்ளூர்ப் பொருந! |
|
தெறல் அரு மரபின் நின் கிளையொடும் பொலிய, |
|
10 |
நிலமிசைப் பரந்த மக்கட்கு எல்லாம் |
புலன் அழுக்கு அற்ற அந்தணாளன், |
|
இரந்து செல் மாக்கட்கு இனி இடன் இன்றி, |
|
பரந்து இசை நிற்கப் பாடினன்; அதற்கொண்டு |
|
சினம் மிகு தானை வானவன் குட கடல், |
|
15 |
பொலம் தரு நாவாய் ஓட்டிய அவ் வழி, |
பிற கலம் செல்கலாது அனையேம் அத்தை, |
|
இன்மை துரப்ப, இசை தர வந்து, நின் |
|
வண்மையின் தொடுத்தனம், யாமே முள் எயிற்று |
|
அரவு எறி உருமின் முரசு எழுந்து இயம்ப, |
|
20 |
அண்ணல் யானையொடு வேந்து களத்து ஒழிய, |
அருஞ் சமம் ததையத் தாக்கி, நன்றும் |
|
நண்ணாத் தெவ்வர்த் தாங்கும் |
|
பெண்ணை அம் படப்பை நாடு கிழவோயே! |
|
திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை.
| |
மலையமான் திருமுடிக் காரியை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
|
135 |
கொடுவரி வழங்கும் கோடு உயர் நெடு வரை, |
|
அரு விடர்ச் சிறு நெறி ஏறலின், வருந்தி, |
|
தடவரல் கொண்ட தகை மெல் ஒதுக்கின், |
|
வளைக் கை விறலி என் பின்னள் ஆக, |
|
5 |
பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின் |
வரி நவில் பனுவல் புலம் பெயர்ந்து இசைப்ப, |
|
படுமலை நின்ற பயம் கெழு சீறியாழ் |
|
ஒல்கல் உள்ளமொடு ஒரு புடைத் தழீஇ, |
|
புகழ்சால் சிறப்பின் நின் நல் இசை உள்ளி, |
|
10 |
வந்தனென் எந்தை! யானே: என்றும், |
மன்று படு பரிசிலர்க் காணின், கன்றொடு |
|
கறை அடி யானை இரியல் போக்கும் |
|
மலை கெழு நாடன்! மா வேள் ஆஅய்! |
|
களிறும் அன்றே; மாவும் அன்றே; |
|
15 |
ஒளிறு படைப் புரவிய தேரும் அன்றே; |
பாணர், பாடுநர், பரிசிலர், ஆங்கு அவர், |
|
தமது எனத் தொடுக்குவராயின், 'எமது' எனப் |
|
பற்றல் தேற்றாப் பயங் கெழு தாயமொடு, |
|
அன்ன ஆக, நின் ஊழி; நின்னைக் |
|
20 |
காண்டல் வேண்டிய அளவை வேண்டார் |
உறு முரண் கடந்த ஆற்றல் |
|
பொது மீக்கூற்றத்து நாடு கிழவோயே! |
|
திணை அது; துறை பரிசில் துறை.
| |
அவனை அவர் பாடியது.
|
137 |
இரங்கு முரசின், இனம்சால் யானை, |
|
முந்நீர் ஏணி விறல் கெழு மூவரை |
|
இன்னும் ஓர் யான் அவா அறியேனே; |
|
நீயே, முன் யான் அறியுமோனே துவன்றிய |
|
5 |
கயத்து இட்ட வித்து வறத்தின் சாவாது, |
கழைக் கரும்பின் ஒலிக்குந்து, |
|
கொண்டல் கொண்ட நீர் கோடை காயினும், |
|
கண் அன்ன மலர் பூக்குந்து, |
|
கருங் கால் வேங்கை மலரின், நாளும் |
|
10 |
பொன் அன்ன வீ சுமந்து, |
மணி அன்ன நீர் கடல் படரும்; |
|
செவ் வரைப் படப்பை நாஞ்சில் பொருந! |
|
சிறு வெள் அருவிப் பெருங் கல் நாடனை! |
|
நீ வாழியர்! நின் தந்தை |
|
15 |
தாய் வாழியர், நிற் பயந்திசினோரே! |
திணை அது; துறை இயன்மொழி; பரிசில் துறையும் ஆம்.
| |
நாஞ்சில் வள்ளுவனை ஒரு சிறைப் பெரியனார் பாடியது.
|
148 |
கறங்கு மிசை அருவிய பிறங்கு மலை நள்ளி! நின் |
|
அசைவு இல் நோன் தாள் நசை வளன் ஏத்தி, |
|
நாள்தொறும் நன் கலம் களிற்றொடு கொணர்ந்து, |
|
கூடு விளங்கு வியல் நகர், பரிசில் முற்று அளிப்ப; |
|
5 |
பீடு இல் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டி, |
செய்யா கூறிக் கிளத்தல் |
|
எய்யாதாகின்று, எம் சிறு செந் நாவே. |
|
திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை.
| |
கண்டீரக் கோப் பெருநள்ளியை வன்பரணர் பாடியது.
|
154 |
திரை பொரு முந்நீர்க் கரை நணிச் செலினும், |
|
அறியுநர்க் காணின், வேட்கை நீக்கும் |
|
சில் நீர் வினவுவர், மாந்தர்; அது போல், |
|
அரசர் உழையராகவும், புரை தபு |
|
5 |
வள்ளியோர்ப் படர்குவர், புலவர்: அதனால், |
யானும், 'பெற்றது ஊதியம்; பேறு யாது?' என்னேன்; |
|
உற்றனென் ஆதலின் உள்ளி வந்தனனே; |
|
'ஈ' என இரத்தலோ அரிதே; நீ அது |
|
நல்கினும், நல்காய் ஆயினும், வெல் போர் |
|
10 |
எறி படைக்கு ஓடா ஆண்மை, அறுவைத் |
தூ விரி கடுப்பத் துவன்றி மீமிசைத் |
|
தண் பல இழிதரும் அருவி நின் |
|
கொண் பெருங் கானம், பாடல் எனக்கு எளிதே. |
|
திணை அது; துறை பரிசில் துறை.
| |
கொண்கானங்கிழானை மோசிகீரனார் பாடியது.
|
161 |
நீண்டு ஒலி அழுவம் குறைபட முகந்துகொண்டு, |
|
ஈண்டு செலல் கொண்மூ வேண்டுவயின் குழீஇ, |
|
பெரு மலை அன்ன தோன்றல, சூல் முதிர்பு, |
|
உரும் உரறு கருவியொடு, பெயல் கடன் இறுத்து, |
|
5 |
வள மழை மாறிய என்றூழ்க் காலை, |
மன்பதை எல்லாம் சென்று உண, கங்கைக் |
|
கரை பொரு மலி நீர் நிறைந்து தோன்றியாங்கு, |
|
எமக்கும் பிறர்க்கும் செம்மலைஆகலின், |
|
'அன்பு இல் ஆடவர் கொன்று, ஆறு கவர, |
|
10 |
சென்று தலைவருந அல்ல, அன்பு இன்று, |
வன் கலை தெவிட்டும், அருஞ் சுரம் இறந்தோர்க்கு, |
|
இற்றை நாளொடும் யாண்டு தலைப்பெயர' எனக் |
|
கண் பொறி போகிய கசிவொடு உரன் அழிந்து, |
|
அருந் துயர் உழக்கும் என் பெருந் துன்புறுவி நின் |
|
15 |
தாள் படு செல்வம் காண்தொறும் மருள, |
பனை மருள் தடக் கையொடு முத்துப் பட முற்றிய |
|
உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு, |
|
ஒளி திகழ் ஓடை பொலிய, மருங்கில் |
|
படு மணி இரட்ட, ஏறிச் செம்மாந்து, |
|
20 |
செலல் நசைஇ உற்றனென் விறல் மிகு குருசில்! |
இன்மை துரப்ப, இசைதர வந்து, நின் |
|
வண்மையின் தொடுத்த என் நயந்தனை கேண்மதி! |
|
வல்லினும், வல்லேன்ஆயினும், வல்லே, |
|
என் அளந்து அறிந்தனை நோக்காது, சிறந்த |
|
25 |
நின் அளந்து அறிமதி, பெரும! என்றும் |
வேந்தர் நாணப் பெயர்வேன்; சாந்து அருந்திப் |
|
பல் பொறிக் கொண்ட ஏந்து எழில் அகலம் |
|
மாண் இழை மகளிர் புல்லுதொறும் புகல, |
|
நாள் முரசு இரங்கும் இடனுடை வரைப்பில் நின் |
|
30 |
தாள் நிழல் வாழ்நர் நன் கலம் மிகுப்ப, |
வாள் அமர் உழந்த நின் தானையும், |
|
சீர் மிகு செல்வமும், ஏத்துகம் பலவே. |
|
திணை அது; துறை பரிசில் துறை.
| |
அவனை அவர் பாடிப் பகடு பெற்றது.
|
168 |
அருவி ஆர்க்கும் கழை பயில் நனந் தலைக் |
|
கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள் |
|
கொழுங் கிழங்கு மிளிரக் கிண்டி, கிளையொடு, |
|
கடுங் கண் கேழல் உழுத பூழி, |
|
5 |
நல் நாள் வரு பதம் நோக்கி, குறவர் |
உழாஅது வித்திய பரூஉக் குரல் சிறு தினை |
|
முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார் |
|
மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால், |
|
மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி |
|
10 |
வான் கேழ் இரும் புடை கழாஅது, ஏற்றி, |
சாந்த விறகின் உவித்த புன்கம் |
|
கூதளம் கவினிய குளவி முன்றில், |
|
செழுங் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும் |
|
ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல், |
|
15 |
நறை நார்த் தொடுத்த வேங்கை அம் கண்ணி, |
வடி நவில் அம்பின் வில்லோர் பெரும! |
|
கை வள் ஈகைக் கடு மான் கொற்ற! |
|
வையக வரைப்பில் தமிழகம் கேட்ப, |
|
பொய்யாச் செந் நா நெளிய ஏத்திப் |
|
20 |
பாடுப என்ப பரிசிலர், நாளும் |
ஈயா மன்னர் நாண, |
|
வீயாது பரந்த நின் வசை இல் வான் புகழே. |
|
திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை; இயன்மொழியும், அரச வாகையும் ஆம்.
| |
பிட்டங் கொற்றனைக் கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் பாடியது.
|
200 |
பனி வரை நிவந்த பாசிலைப் பலவின் |
|
கனி கவர்ந்து உண்ட கரு விரல் கடுவன் |
|
செம் முக மந்தியொடு சிறந்து, சேண் விளங்கி, |
|
மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்து, |
|
5 |
கழை மிசைத் துஞ்சும் கல்லக வெற்ப! |
நிணம் தின்று செருக்கிய நெருப்புத் தலை நெடு வேல், |
|
களம் கொண்டு கனலும் கடுங்கண் யானை, |
|
விளங்கு மணிக் கொடும் பூண், விச்சிக்கோவே! |
|
இவரே, பூத் தலை அறாஅப் புனை கொடி முல்லை |
|
10 |
நாத் தழும்பு இருப்பப் பாடாதுஆயினும், |
'கறங்கு மணி நெடுந் தேர் கொள்க!' எனக் கொடுத்த |
|
பரந்து ஓங்கு சிறப்பின் பாரி மகளிர்; |
|
யானே, பரிசிலன், மன்னும் அந்தணன்; நீயே, |
|
வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன்; |
|
15 |
நினக்கு யான் கொடுப்பக் கொண்மதி சினப் போர் |
அடங்கா மன்னரை அடக்கும் |
|
மடங்கா விளையுள் நாடு கிழவோயே! |
|
திணை அது; துறை பரிசில் துறை.
| |
பாரி மகளிரை விச்சிக் கோனுழைக் கொண்டு சென்ற கபிலர் பாடியது.
|
201 |
'இவர் யார்?' என்குவைஆயின், இவரே, |
|
ஊருடன் இரவலர்க்கு அருளி, தேருடன் |
|
முல்லைக்கு ஈத்த செல்லா நல் இசை, |
|
படு மணி யானை, பறம்பின் கோமான் |
|
5 |
நெடு மாப் பாரி மகளிர்; யானே |
தந்தை தோழன்; இவர் என் மகளிர்; |
|
அந்தணன், புலவன், கொண்டு வந்தனனே. |
|
நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றி, |
|
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை, |
|
10 |
உவரா ஈகை, துவரை ஆண்டு, |
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த |
|
வேளிருள் வேளே! விறல் போர் அண்ணல்! |
|
தார் அணி யானைச் சேட்டு இருங் கோவே! |
|
ஆண் கடன் உடைமையின், பாண் கடன் ஆற்றிய |
|
15 |
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்! |
யான் தர, இவரைக் கொண்மதி! வான் கவித்து |
|
இருங் கடல் உடுத்த இவ் வையகத்து, அருந் திறல் |
|
பொன் படு மால் வரைக் கிழவ! வென் வேல் |
|
உடலுநர் உட்கும் தானை, |
|
20 |
கெடல் அருங்குரைய நாடு கிழவோயே! |
திணையும் துறையும் அவை.
| |
பாரி மகளிரை இருங்கோவேளுழைக் கொண்டு சென்ற கபிலர் பாடியது.
|
202 |
வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்ட, |
|
கட்சி காணாக் கடமா நல் ஏறு |
|
கடறு மணி கிளர, சிதறு பொன் மிளிர, |
|
கடிய கதழும் நெடு வரைப் படப்பை |
|
5 |
வென்றி நிலைஇய விழுப் புகழ் ஒன்றி, |
இரு பால் பெயரிய உரு கெழு மூதூர், |
|
கோடி பல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய |
|
நீடு நிலை அரையத்துக் கேடும் கேள், இனி: |
|
நுந்தை தாயம் நிறைவுற எய்திய |
|
10 |
ஒலியல் கண்ணிப் புலிகடி மாஅல்! |
நும் போல் அறிவின் நுமருள் ஒருவன் |
|
புகழ்ந்த செய்யுள் கழாஅத்தலையை |
|
இகழ்ந்ததன் பயனே; இயல் தேர் அண்ணல்! |
|
எவ்வி தொல் குடிப் படீஇயர், மற்று, 'இவர் |
|
15 |
கை வண் பாரி மகளிர்' என்ற என் |
தேற்றாப் புன்சொல் நோற்றிசின்; பெரும! |
|
விடுத்தனென்; வெலீஇயர், நின் வேலே! அடுக்கத்து, |
|
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கை |
|
மாத் தகட்டு ஒள் வீ தாய துறுகல் |
|
20 |
இரும் புலி வரிப் புறம் கடுக்கும் |
பெருங் கல் வைப்பின் நாடு கிழவோயே! |
|
திணையும் துறையும் அவை.
| |
இருங்கோவேள் பாரிமகளிரைக் கொள்ளானாக, கபிலர் பாடியது.
|
203 |
'கழிந்தது பொழிந்து' என வான் கண்மாறினும், |
|
'தொல்லது விளைந்து' என நிலம் வளம் கரப்பினும், |
|
எல்லா உயிர்க்கும் இல்லால், வாழ்க்கை; |
|
'இன்னும் தம்' என எம்மனோர் இரப்பின், |
|
5 |
'முன்னும் கொண்டிர்' என, நும்மனோர் மறுத்தல் |
இன்னாது அம்ம; இயல் தேர் அண்ணல்! |
|
இல்லது நிரப்பல் ஆற்றாதோரினும், |
|
உள்ளி வருநர் நசை இழப்போரே; |
|
அனையையும் அல்லை, நீயே; ஒன்னார் |
|
10 |
ஆர் எயில் அவர்கட்டாகவும், 'நுமது' எனப் |
பாண் கடன் இறுக்கும் வள்ளியோய்! |
|
பூண் கடன், எந்தை! நீ இரவலர்ப் புரவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சேரமான் பாமுளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ் சேட்சென்னியை ஊன் பொதி பசுங்குடையார் பாடியது.
|
204 |
'ஈ' என இரத்தல் இழிந்தன்று; அதன் எதிர், |
|
'ஈயேன்' என்றல் அதனினும் இழிந்தன்று; |
|
'கொள்' எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர், |
|
'கொள்ளேன்' என்றல் அதனினும் உயர்ந்தன்று; |
|
5 |
தெண் நீர்ப் பரப்பின் இமிழ் திரைப் பெருங் கடல் |
உண்ணார் ஆகுப, நீர் வேட்டோரே; |
|
ஆவும் மாவும் சென்று உண, கலங்கி, |
|
சேற்றொடு பட்ட சிறுமைத்துஆயினும், |
|
உண்நீர் மருங்கின் அதர் பல ஆகும்; |
|
10 |
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை, |
உள்ளிச் சென்றோர்ப் பழியலர்; அதனால் |
|
புலவேன் வாழியர், ஓரி! விசும்பில் |
|
கருவி வானம் போல |
|
வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே. |
|
திணையும் துறையும் அவை.
| |
வல்வில் ஓரியைக் கழைதின்யானையார் பாடியது.
|
205 |
முற்றிய திருவின் மூவர் ஆயினும், |
|
பெட்பின்று ஈதல் யாம் வேண்டலமே; |
|
விறல் சினம் தணிந்த விரை பரிப் புரவி |
|
உறுவர் செல் சார்வு ஆகி, செறுவர் |
|
5 |
தாள் உளம் தபுத்த வாள் மிகு தானை, |
வெள் வீ வேலிக் கோடைப் பொருந! |
|
சிறியவும் பெரியவும் புழை கெட விலங்கிய |
|
மான் கணம் தொலைச்சிய கடு விசைக் கத நாய், |
|
நோன் சிலை, வேட்டுவ! நோய் இலையாகுக! |
|
10 |
ஆர் கலி யாணர்த் தரீஇய, கால் வீழ்த்து, |
கடல்வயின் குழீஇய அண்ணல் அம் கொண்மூ |
|
நீர் இன்று பெயராவாங்கு, தேரொடு |
|
ஒளிறு மருப்பு ஏந்திய செம்மல் |
|
களிறு இன்று பெயரல, பரிசிலர் கடும்பே. |
|
திணையும் துறையும் அவை.
| |
கடிய நெடுவேட்டுவன் பரிசில் நீட்டித்தானைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.
|
206 |
வாயிலோயே! வாயிலோயே! |
|
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தி, தாம் |
|
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து |
|
வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கைப் |
|
5 |
பரிசிலர்க்கு அடையா வாயிலோயே! |
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி |
|
தன் அறியலன்கொல்? என் அறியலன்கொல்? |
|
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென, |
|
வறுந் தலை உலகமும் அன்றே; அதனால், |
|
10 |
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை; |
மரம் கொல் தச்சன் கை வல் சிறாஅர் |
|
மழுவுடைக் காட்டகத்து அற்றே |
|
எத் திசைச் செலினும், அத் திசைச் சோறே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் நீட்டித்தானை ஒளவையார் பாடியது.
|
207 |
எழு இனி, நெஞ்சம்! செல்கம்; யாரோ, |
|
பருகு அன்ன வேட்கை இல்வழி, |
|
அருகில் கண்டும் அறியார் போல, |
|
அகம் நக வாரா முகன் அழி பரிசில் |
|
5 |
தாள் இலாளர் வேளார் அல்லர்? |
'வருக' என வேண்டும் வரிசையோர்க்கே |
|
பெரிதே உலகம்; பேணுநர் பலரே; |
|
மீளி முன்பின் ஆளி போல, |
|
உள்ளம் உள் அவிந்து அடங்காது, வெள்ளென |
|
10 |
நோவாதோன்வயின் திரங்கி, |
வாயா வன் கனிக்கு உலமருவோரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
வெளிமான் துஞ்சிய பின், அவன் தம்பி இள வெளிமானை, 'பரிசில் கொடு' என, அவன் சிறிது கொடுப்பக் கொள்ளாது, பெருஞ்சித்திரனார் பாடியது.
|
208 |
'குன்றும் மலையும் பல பின் ஒழிய, |
|
வந்தனென், பரிசில் கொண்டனென் செலற்கு' என |
|
நின்ற என் நயந்து அருளி, 'ஈது கொண்டு, |
|
ஈங்கனம் செல்க, தான்' என, என்னை |
|
5 |
யாங்கு அறிந்தனனோ, தாங்கு அருங் காவலன்? |
காணாது ஈத்த இப் பொருட்கு யான் ஓர் |
|
வாணிகப் பரிசிலன் அல்லென்; பேணி, |
|
தினை அனைத்துஆயினும், இனிது அவர் |
|
துணை அளவு அறிந்து, நல்கினர் விடினே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அதியமான் நெடுமான் அஞ்சியுழைச் சென்ற பெருஞ்சித்திரனாரைக் காணாது,'இது கொண்டு செல்க!' என்று அவன் பரிசில் கொடுப்பக் கொள்ளாது, அவர் சொல்லியது.
|
379 |
யானே பெறுக, அவன் தாள் நிழல் வாழ்க்கை; |
|
அவனே பெறுக, என் நா இசை நுவறல்; |
|
நெல் அரி தொழுவர் கூர் வாள் மழுங்கின், |
|
பின்னை மறத்தோடு அரிய, கல் செத்து, |
|
5 |
அள்ளல் யாமைக் கூன் புறத்து உரிஞ்சும் |
நெல் அமல் புரவின் இலங்கை கிழவோன் |
|
வில்லியாதன் கிணையேம்; பெரும! |
|
'குறுந் தாள் ஏற்றைக் கொழுங் கண் அவ் விளர் |
|
நறு நெய் உருக்கி, நாட் சோறு ஈயா, |
|
10 |
வல்லன், எந்தை, பசி தீர்த்தல்' என, |
கொன் வரல் வாழ்க்கை நின் கிணைவன் கூற, |
|
விண் தோய் தலைய குன்றம் பின்பட, |
|
......................................ர வந்தனென், யானே |
|
15 |
தாய் இல் தூவாக் குழவி போல, ஆங்கு அத் |
திருவுடைத் திரு மனை, ஐது தோன்று கமழ் புகை |
|
வரு மழை மங்குலின் மறுகுடன் மறைக்கும் |
|
குறும்பு அடு குண்டு அகழ் நீள் மதில் ஊரே. |
|
திணை அது; துறை பரிசில் துறை.
| |
ஓய்மான் வில்லியாதனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.
|