முகப்பு | ![]() |
பரிசில் விடை |
140 |
தடவு நிலைப் பலவின் நாஞ்சில் பொருநன் |
|
மடவன், மன்ற; செந் நாப் புலவீர்! |
|
வளைக் கை விறலியர் படப்பைக் கொய்த |
|
அடகின் கண்ணுறைஆக யாம் சில |
|
5 |
அரிசி வேண்டினேமாக, தான் பிற |
வரிசை அறிதலின், தன்னும் தூக்கி, |
|
இருங் கடறு வளைஇய குன்றத்து அன்னது ஓர் |
|
பெருங் களிறு நல்கியோனே; அன்னது ஓர் |
|
தேற்றா ஈகையும் உளதுகொல்? |
|
10 |
போற்றார் அம்ம, பெரியோர் தம் கடனே? |
திணை அது; துறை பரிசில் விடை.
| |
அவனை ஒளவையார் பாடியது.
|
152 |
'வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி |
|
பேழ் வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇ, |
|
புழல் தலைப் புகர்க் கலை உருட்டி, உரல் தலைக் |
|
கேழற் பன்றி வீழ, அயலது |
|
5 |
ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும், |
வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன், |
|
புகழ்சால் சிறப்பின் அம்பு மிகத் திளைக்கும் |
|
கொலைவன் யார்கொலோ? கொலைவன் மற்று இவன் |
|
விலைவன் போலான்; வெறுக்கை நன்கு உடையன்; |
|
10 |
ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின், |
சாரல் அருவிப் பய மலைக் கிழவன், |
|
ஓரி கொலோ? அல்லன்கொல்லோ? |
|
பாடுவல், விறலி! ஓர் வண்ணம்; நீரும் |
|
மண் முழா அமைமின்; பண் யாழ் நிறுமின்; |
|
15 |
கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்; |
எல்லரி தொடுமின்; ஆகுளி தொடுமின்; |
|
பதலை ஒரு கண் பையென இயக்குமின்; |
|
மதலை மாக் கோல் கைவலம் தமின்' என்று, |
|
இறைவன் ஆகலின், சொல்லுபு குறுகி, |
|
20 |
மூ ஏழ் துறையும் முறையுளிக் கழிப்பி, |
'கோ' எனப் பெயரிய காலை, ஆங்கு அது |
|
தன் பெயர் ஆகலின் நாணி, மற்று, 'யாம் |
|
நாட்டிடன் நாட்டிடன் வருதும்; ஈங்கு ஓர் |
|
வேட்டுவர் இல்லை, நின் ஒப்போர்' என, |
|
25 |
வேட்டது மொழியவும் விடாஅன், வேட்டத்தில் |
தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு, |
|
ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கி, |
|
தன் மலைப் பிறந்த தா இல் நன் பொன், |
|
பல் மணிக் குவையொடும் விரைஇ, 'கொண்ம்' என, |
|
30 |
சுரத்திடை நல்கியோனே விடர்ச் சிமை |
ஓங்கு இருங் கொல்லிப் பொருநன், |
|
ஓம்பா ஈகை விறல் வெய்யோனே! |
|
திணை அது; துறை பரிசில் விடை.
| |
வல் வில் ஓரியை வன்பரணர் பாடியது.
|
162 |
இரவலர் புரவலை நீயும் அல்லை; |
|
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்; |
|
இரவலர் உண்மையும் காண், இனி; இரவலர்க்கு |
|
ஈவோர் உண்மையும் காண், இனி; நின் ஊர்க் |
|
5 |
கடிமரம் வருந்தத் தந்து யாம் பிணித்த |
நெடு நல் யானை எம் பரிசில்; |
|
கடுமான் தோன்றல்! செல்வல் யானே. |
|
திணை அது; துறை பரிசில் விடை.
| |
அவர் வெளிமானுழைச் சென்றார்க்கு வெளிமான் துஞ்சுவான் தம்பியைப் 'பரிசில் கொடு' என, அவன் சிறிது கொடுப்பக் கொள்ளாது போய், குமணனைப் பாடி,குமணன் பகடு கொடுப்பக் கொணர்ந்து நின்று, வெளிமான் ஊர்க் கடிமரத்து யாத்துச் சென்று,
|
165 |
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் |
|
தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே; |
|
துன் அருஞ் சிறப்பின் உயர்ந்த செல்வர், |
|
இன்மையின் இரப்போர்க்கு ஈஇயாமையின், |
|
5 |
தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே; |
தாள் தாழ் படு மணி இரட்டும், பூ நுதல், |
|
ஆடு இயல் யானை பாடுநர்க்கு அருகாக் |
|
கேடு இல் நல் இசை வய மான் தோன்றலைப் |
|
பாடி நின்றனெனாக, 'கொன்னே |
|
10 |
பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என |
நாடு இழந்ததனினும் நனி இன்னாது' என, |
|
வாள் தந்தனனே, தலை எனக்கு ஈய, |
|
தன்னின் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின்; |
|
ஆடு மலி உவகையொடு வருவல், |
|
15 |
ஓடாப் பூட்கை நின் கிழமையோற் கண்டே. |
திணை அது; துறை பரிசில் விடை.
| |
தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு பற்றியிருந்த குமணனைக் கண்டு, அவன் தன் வாள் கொடுப்பக் கொண்டு வந்து, இளங் குமணற்குக் காட்டி, பெருந்தலைச் சாத்தனார் பாடியது.
|
397 |
வெள்ளியும் இரு விசும்பு ஏர்தரும்; புள்ளும் |
|
உயர் சினைக் குடம்பைக் குரல் தோற்றினவே; |
|
பொய்கையும் போது கண் விழித்தன; பைபயச் |
|
சுடரும் சுருங்கின்று, ஒளியே; பாடு எழுந்து |
|
5 |
இரங்குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப, |
இரவுப் புறங்கண்ட காலைத் தோன்றி, |
|
எஃகு இருள் அகற்றும் ஏமப் பாசறை, |
|
வைகறை அரவம் கேளியர்! 'பல கோள் |
|
செய் தார் மார்ப! எழுமதி துயில்' என, |
|
10 |
தெண் கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி, |
நெடுங் கடைத் தோன்றியேனே; அது நயந்து, |
|
'உள்ளி வந்த பரிசிலன் இவன்' என, |
|
நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ் சூடு, |
|
மணிக் கலன் நிறைந்த மணம் நாறு தேறல், |
|
15 |
பாம்பு உரித்தன்ன வான் பூங் கலிங்கமொடு, |
மாரி அன்ன வண்மையின் சொரிந்து, |
|
வேனில் அன்ன என் வெப்பு நீங்க, |
|
அருங் கலம் நல்கியோனே; என்றும், |
|
செறுவில் பூத்த சேயிதழ்த் தாமரை, |
|
20 |
அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த |
தீயொடு விளங்கும் நாடன், வாய் வாள் |
|
வலம் படு தீவின் பொலம் பூண் வளவன்; |
|
எறி திரைப் பெருங் கடல் இறுதிக்கண் செலினும், |
|
தெறு கதிர்க் கனலி தென் திசைத் தோன்றினும், |
|
25 |
'என்?' என்று அஞ்சலம், யாமே; வென் வேல் |
அருஞ் சமம் கடக்கும் ஆற்றல் அவன் |
|
திருந்து கழல் நோன் தாள் தண் நிழலேமே. |
|
திணை அது; துறை பரிசில்விடை; கடைநிலை விடையும் ஆம்.
| |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் பாடியது.
|
399 |
அடு மகள் முகந்த அளவா வெண்ணெல் |
|
தொடி மாண் உலக்கைப் பரூஉக் குற்று அரிசி |
|
காடி வெள் உலைக் கொளீஇ, நீழல் |
|
ஓங்கு சினை மாவின் தீம் கனி நறும் புளி, |
|
5 |
மோட்டு இரு வராஅல் கோட்டு மீன் கொழுங் குறை, |
செறுவின் வள்ளை, சிறு கொடிப் பாகல், |
|
பாதிரி ஊழ் முகை அவிழ் விடுத்தன்ன |
|
மெய் களைந்து, இனனொடு விரைஇ, |
|
மூழ்ப்பப் பெய்த முழு அவிழ்ப் புழுக்கல், |
|
10 |
அழிகளின் படுநர் களி அட வைகின், |
பழஞ்சோறு அயிலும் முழங்கு நீர்ப் படப்பைக் |
|
காவிரிக் கிழவன், மாயா நல் இசைக் |
|
கிள்ளிவளவன் உள்ளி, அவற் படர்தும்; |
|
செல்லேன் செல்லேன், பிறர் முகம் நோக்கேன்; |
|
15 |
நெடுங் கழைத் தூண்டில் விடு மீன் நொடுத்து, |
கிணைமகள் அட்ட பாவல் புளிங்கூழ் |
|
பொழுது மறுத்து உண்ணும் உண்டியேன், அழிவு கொண்டு, |
|
ஒரு சிறை இருந்தேன்; என்னே! 'இனியே, |
|
அறவர் அறவன், மறவர் மறவன், |
|
20 |
மள்ளர் மள்ளன், தொல்லோர் மருகன், |
இசையின் கொண்டான், நசை அமுது உண்க' என, |
|
மீப் படர்ந்து இறந்து, வன் கோல் மண்ணி, |
|
வள் பரிந்து கிடந்த.......................மணக்க |
|
விசிப்புறுத்து அமைந்த புதுக் காழ்ப் போர்வை, |
|
25 |
அலகின் மாலை ஆர்ப்ப வட்டித்து, |
கடியும் உணவு என்னக் கடவுட்கும் தொடேன், |
|
'கடுந் தேர் அள்ளற்கு அசாவா நோன் சுவல் |
|
பகடே அத்தை யான் வேண்டி வந்தது' என, |
|
ஒன்று யான் பெட்டாஅளவை, அன்றே |
|
30 |
ஆன்று விட்டனன் அத்தை, விசும்பின் |
மீன் பூத்தன்ன உருவப் பல் நிரை |
|
ஊர்தியொடு நல்கியோனே; சீர் கொள |
|
இழுமென இழிதரும் அருவி, |
|
வான் தோய் உயர் சிமைத் தோன்றிக் கோவே. |
|
திணை அது; துறை பரிசில் விடை.
| |
தாமான் தோன்றிக் கோனை ஐயூர் முடவனார் பாடியது.
|