முகப்பு | ![]() |
பூவை நிலை |
8 |
வையம் காவலர் வழிமொழிந்து ஒழுக, |
|
போகம் வேண்டி, பொதுச் சொல் பொறாஅது, |
|
இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப, |
|
ஒடுங்கா உள்ளத்து, ஓம்பா ஈகை, |
|
5 |
கடந்து அடு தானைச் சேரலாதனை |
யாங்கனம் ஒத்தியோ? வீங்கு செலல் மண்டிலம்! |
|
பொழுது என வரைதி; புறக்கொடுத்து இறத்தி; |
|
மாறி வருதி; மலை மறைந்து ஒளித்தி; |
|
அகல் இரு விசும்பினானும் |
|
10 |
பகல் விளங்குதியால், பல் கதிர் விரித்தே. |
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி; பூவை நிலையும் ஆம்.
| |
சேரமான் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடியது.
|
56 |
ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை, |
|
மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோனும்; |
|
கடல் வளர் புரி வளை புரையும் மேனி, |
|
அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்; |
|
5 |
மண்ணுறு திரு மணி புரையும் மேனி, |
விண் உயர் புள் கொடி, விறல் வெய்யோனும், |
|
மணி மயில் உயரிய மாறா வென்றி, |
|
பிணிமுக ஊர்தி, ஒண் செய்யோனும் என |
|
ஞாலம் காக்கும் கால முன்பின், |
|
10 |
தோலா நல் இசை, நால்வருள்ளும், |
கூற்று ஒத்தீயே, மாற்று அருஞ் சீற்றம்; |
|
வலி ஒத்தீயே, வாலியோனை; |
|
புகழ் ஒத்தீயே, இகழுநர் அடுநனை; |
|
முருகு ஒத்தீயே, முன்னியது முடித்தலின்; |
|
15 |
ஆங்கு ஆங்கு அவர் அவர் ஒத்தலின், யாங்கும் |
அரியவும் உளவோ, நினக்கே? அதனால், |
|
இரவலர்க்கு அருங் கலம் அருகாது ஈயா, |
|
யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல் |
|
பொன் செய் புனை கலத்து ஏந்தி, நாளும் |
|
20 |
ஒண் தொடி மகளிர் மடுப்ப, மகிழ் சிறந்து, |
ஆங்கு இனிது ஒழுகுமதி! ஓங்கு வாள் மாற! |
|
அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும் |
|
வெங் கதிர்ச் செல்வன் போலவும், குட திசைத் |
|
தண் கதிர் மதியம் போலவும், |
|
25 |
நின்று நிலைஇயர், உலகமோடு உடனே! |
திணை அது; துறை பூவை நிலை.
| |
அவனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
|
59 |
ஆரம் தாழ்ந்த அணி கிளர் மார்பின், |
|
தாள் தோய் தடக் கை, தகை மாண் வழுதி! |
|
வல்லை மன்ற, நீ நயந்து அளித்தல்; |
|
தேற்றாய், பெரும! பொய்யே; என்றும் |
|
5 |
காய் சினம் தவிராது கடல் ஊர்பு எழுதரும் |
ஞாயிறு அனையை, நின் பகைவர்க்கு; |
|
திங்கள் அனையை, எம்மனோர்க்கே. |
|
திணை அது; துறை பூவை நிலை.
| |
பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனை மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் பாடியது.
|
374 |
கானல் மேய்ந்து வியன் புலத்து அல்கும் |
|
புல்வாய் இரலை நெற்றி அன்ன, |
|
பொலம் இலங்கு சென்னிய பாறு மயிர் அவியத் |
|
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர், |
|
5 |
மன்றப் பலவின் மால் வரை பொருந்தி, என் |
தெண் கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி, |
|
இருங் கலை ஓர்ப்ப இசைஇ, காண்வர, |
|
கருங் கோல் குறிஞ்சி அடுக்கம் பாட, |
|
புலிப் பல் தாலிப் புன் தலைச் சிறாஅர் |
|
10 |
மான் கண் மகளிர், கான் தேர் அகன்று உவா |
சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங் குறை, |
|
விடர் முகை அடுக்கத்துச் சினை முதிர் சாந்தம், |
|
புகர் முக வேழத்து மருப்பொடு, மூன்றும், |
|
இருங் கேழ் வயப் புலி வரி அதள் குவைஇ, |
|
15 |
விருந்து இறை நல்கும் நாடன், எம் கோன், |
கழல் தொடி ஆஅய் அண்டிரன் போல, |
|
வண்மையும் உடையையோ? ஞாயிறு! |
|
கொன் விளங்குதியால் விசும்பினானே! |
|
திணை பாடாண் திணை; துறை பூவை நிலை.
| |
ஆய் அண்டிரனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.
|