முகப்பு | ![]() |
பொருண் மொழிக் காஞ்சி |
5 |
எருமை அன்ன கருங் கல் இடை தோறு, |
|
ஆனின் பரக்கும் யானைய, முன்பின், |
|
கானக நாடனை! நீயோ, பெரும! |
|
நீ ஓர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்: |
|
5 |
அருளும் அன்பும் நீக்கி, நீங்கா |
நிரயம் கொள்பவரொடு ஒன்றாது, காவல், |
|
குழவி கொள்பவரின், ஓம்புமதி! |
|
அளிதோ தானே; அது பெறல் அருங் குரைத்தே. |
|
திணை பாடாண்திணை; துறை செவியறிவுறூஉ; பொருண்மொழிக் காஞ்சியும் ஆம்.
| |
சேரமான் கருவூர் ஏறிய ஒள் வாட் கோப் பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்ட ஞான்று, நின் உடம்பு பெறுவாயாக!' என, அவனைச் சென்று கண்டு, தம் உடம்பு பெற்று நின்ற நரிவெரூஉத்தலையார் பாடியது.
|
24 |
நெல் அரியும் இருந் தொழுவர் |
|
செஞ் ஞாயிற்று வெயில் முனையின், |
|
தெண் கடல் திரை மிசைப் பாயுந்து; |
|
திண் திமில் வன் பரதவர் |
|
5 |
வெப்பு உடைய மட்டு உண்டு, |
தண் குரவைச் சீர் தூங்குந்து; |
|
தூவல் கலித்த தேம் பாய் புன்னை |
|
மெல் இணர்க் கண்ணி மிலைந்த மைந்தர் |
|
எல் வளை மகளிர்த் தலைக் கை தரூஉந்து; |
|
10 |
வண்டு பட மலர்ந்த தண் நறுங் கானல் |
முண்டகக் கோதை ஒண் தொடி மகளிர் |
|
இரும் பனையின் குரும்பை நீரும், |
|
பூங் கரும்பின் தீம் சாறும், |
|
ஓங்கு மணல் குவவுத் தாழைத் |
|
15 |
தீம் நீரொடு உடன் விராஅய், |
முந் நீர் உண்டு முந்நீர்ப் பாயும்; |
|
தாங்கா உறையுள் நல் ஊர் கெழீஇய |
|
ஓம்பா ஈகை மா வேள் எவ்வி |
|
புனல் அம் புதவின் மிழலையொடு கழனிக் |
|
20 |
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும், |
பொன் அணி யானைத் தொல் முதிர் வேளிர், |
|
குப்பை நெல்லின், முத்தூறு தந்த |
|
கொற்ற நீள் குடை, கொடித் தேர்ச் செழிய! |
|
நின்று நிலைஇயர் நின் நாள்மீன்; நில்லாது |
|
25 |
படாஅச் செலீஇயர், நின் பகைவர் மீனே |
நின்னொடு, தொன்று மூத்த உயிரினும், உயிரொடு |
|
நின்று மூத்த யாக்கை அன்ன, நின் |
|
ஆடு குடி மூத்த விழுத் திணைச் சிறந்த |
|
வாளின் வாழ்நர் தாள் வலம் வாழ்த்த, |
|
30 |
இரவல் மாக்கள் ஈகை நுவல, |
ஒண் தொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய |
|
தண் கமழ் தேறல் மடுப்ப, மகிழ் சிறந்து, |
|
ஆங்கு இனிது ஒழுகுமதி, பெரும! 'ஆங்கு அது |
|
வல்லுநர் வாழ்ந்தோர்' என்ப தொல் இசை, |
|
35 |
மலர் தலை உலகத்துத் தோன்றி, |
பலர், செலச் செல்லாது, நின்று விளிந்தோரே. |
|
திணை பொதுவியல்; துறை பொருண்மொழிக் காஞ்சி.
| |
அவனை மாங்குடி கிழார் பாடியது.
|
75 |
'மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தென, |
|
பால் தர வந்த பழ விறல் தாயம் |
|
எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்பு' எனக் |
|
குடி புரவு இரக்கும் கூர் இல் ஆண்மைச் |
|
5 |
சிறியோன் பெறின், அது சிறந்தன்று மன்னே; |
மண்டு அமர் பரிக்கும் மதன் உடை நோன் தாள் |
|
விழுமியோன் பெறுகுவனாயின், தாழ் நீர் |
|
அறு கயமருங்கின் சிறு கோல் வெண் கிடை |
|
என்றூழ் வாடு வறல் போல, நன்றும் |
|
10 |
நொய்தால் அம்ம தானே மை அற்று, |
விசும்புற ஓங்கிய வெண் குடை, |
|
முரசு கெழு வேந்தர் அரசு கெழு திருவே. |
|
திணை அது; துறை பொருண்மொழிக் காஞ்சி.
| |
சோழன் நலங்கிள்ளி பாட்டு.
|
121 |
ஒரு திசை ஒருவனை உள்ளி, நால் திசைப் |
|
பலரும் வருவர், பரிசில் மாக்கள்; |
|
வரிசை அறிதலோ அரிதே; பெரிதும் |
|
ஈதல் எளிதே; மா வண் தோன்றல்! |
|
5 |
அது நற்கு அறிந்தனைஆயின், |
பொது நோக்கு ஒழிமதி, புலவர் மாட்டே! |
|
திணை அது; துறை பொருண் மொழிக் காஞ்சி.
| |
மலையமான் திருமுடிக்காரியைக் கபிலர் பாடியது.
|
182 |
உண்டால் அம்ம, இவ் உலகம் இந்திரர் |
|
அமிழ்தம் இயைவதுஆயினும், 'இனிது' எனத் |
|
தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்; |
|
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி, |
|
5 |
புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழி எனின், |
உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்; |
|
அன்ன மாட்சி அனையர் ஆகி, |
|
தமக்கு என முயலா நோன் தாள், |
|
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே. |
|
திணை பொதுவியல்; துறை பொருண்மொழிக் காஞ்சி.
| |
கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி பாட்டு.
|
183 |
உற்றுழி உதவியும், உறு பொருள் கொடுத்தும், |
|
பிற்றை நிலை முனியாது, கற்றல் நன்றே; |
|
பிறப்பு ஓரன்ன உடன்வயிற்றுள்ளும், |
|
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்; |
|
5 |
ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும், |
'மூத்தோன் வருக' என்னாது, அவருள் |
|
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்; |
|
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும், |
|
கீழ்ப்பால் ஒருவன் கற்பின், |
|
10 |
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே. |
திணையும் துறையும் அவை.
| |
பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் பாட்டு.
|
185 |
கால் பார் கோத்து, ஞாலத்து இயக்கும் |
|
காவற் சாகாடு கைப்போன் மாணின், |
|
ஊறு இன்றாகி ஆறு இனிது படுமே; |
|
உய்த்தல் தேற்றானாயின், வைகலும், |
|
5 |
பகைக் கூழ் அள்ளற் பட்டு, |
மிகப் பல் தீ நோய் தலைத்தலைத் தருமே. |
|
திணை பொதுவியல்; துறை பொருண்மொழிக் காஞ்சி.
| |
தொண்டைமான் இளந்திரையன் பாட்டு.
|
186 |
நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; |
|
மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம்: |
|
அதனால், யான் உயிர் என்பது அறிகை |
|
வேல் மிகு தானை வேந்தற்குக் கடனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மோசிகீரனார் பாடியது.
|
187 |
நாடா கொன்றோ; காடா கொன்றோ; |
|
அவலா கொன்றோ; மிசையா கொன்றோ; |
|
எவ் வழி நல்லவர் ஆடவர், |
|
அவ் வழி நல்லை; வாழிய நிலனே! |
|
திணையும் துறையும் அவை.
| |
ஒளவையார் பாடியது.
|
188 |
படைப்புப் பல படைத்துப் பலரோடு உண்ணும் |
|
உடைப் பெருஞ் செல்வர் ஆயினும், இடைப் படக் |
|
குறுகுறு நடந்து, சிறு கை நீட்டி, |
|
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும், |
|
5 |
நெய்யுடை அடிசில் மெய் பட விதிர்த்தும், |
மயக்குறு மக்களை இல்லோர்க்குப் |
|
பயக் குறை இல்லை தாம் வாழு நாளே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பாண்டியன் அறிவுடை நம்பி பாட்டு.
|
189 |
தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி |
|
வெண் குடை நிழற்றிய ஒருமையோர்க்கும், |
|
நடு நாள் யாமத்தும் பகலும் துஞ்சான் |
|
கடு மாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும், |
|
5 |
உண்பது நாழி; உடுப்பவை இரண்டே; |
பிறவும் எல்லாம் ஓர் ஒக்குமே; |
|
செல்வத்துப் பயனே ஈதல்; |
|
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
|
190 |
விளை பதச் சீறிடம் நோக்கி, வளை கதிர் |
|
வல்சி கொண்டு, அளை மல்க வைக்கும் |
|
எலி முயன்றனையர் ஆகி, உள்ள தம் |
|
வளன் வலியுறுக்கும் உளம் இலாளரொடு |
|
5 |
இயைந்த கேண்மை இல்லாகியரோ! |
கடுங் கண் கேழல் இடம் பட வீழ்ந்தென, |
|
அன்று அவண் உண்ணாதாகி, வழி நாள், |
|
பெரு மலை விடரகம் புலம்ப, வேட்டு எழுந்து, |
|
இருங் களிற்று ஒருத்தல் நல் வலம் படுக்கும் |
|
10 |
புலி பசித்தன்ன மெலிவு இல் உள்ளத்து |
உரனுடையாளர் கேண்மையொடு |
|
இயைந்த வைகல் உள ஆகியரோ! |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் நல்லுருத்திரன் பாட்டு.
|
191 |
'யாண்டு பல ஆக, நரை இல ஆகுதல் |
|
யாங்கு ஆகியர்?' என வினவுதிர் ஆயின், |
|
யான் கண்டனையர் என் இளையரும்; வேந்தனும் |
|
5 |
அல்லவை செய்யான், காக்கும்; அதன்தலை |
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் |
|
சான்றோர் பலர், யான் வாழும் ஊரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தானுழைச் சென்ற பிசிராந்தையாரை,'கேட்கும் காலம் பலவாலோ? நரை நுமக்கு இல்லையாலோ?' என்ற சான்றோர்க்கு அவர் சொற்றது.
|
192 |
யாதும் ஊரே; யாவரும் கேளிர்; |
|
தீதும் நன்றும் பிறர் தர வாரா; |
|
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன; |
|
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் |
|
5 |
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின், |
இன்னாது என்றலும் இலமே; 'மின்னொடு |
|
வானம் தண் துளி தலை இ, ஆனாது |
|
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று |
|
நீர் வழிப்படூஉம் புணை போல், ஆர் உயிர் |
|
10 |
முறை வழிப்படூஉம்' என்பது திறவோர் |
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் |
|
பெரியோரை வியத்தலும் இலமே; |
|
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. |
|
திணையும் துறையும் அவை.
| |
கணியன் பூங்குன்றன் பாட்டு.
|
193 |
அதள் எறிந்தன்ன நெடு வெண் களரின் |
|
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல, |
|
ஓடி உய்தலும் கூடும்மன்; |
|
ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே. |
|
திணையும் துறையும் அவை.
| |
ஓரேருழவர் பாட்டு.
|
195 |
பல் சான்றீரே! பல் சான்றீரே! |
|
கயல் முள் அன்ன நரை முதிர் திரை கவுள், |
|
பயன் இல் மூப்பின், பல் சான்றீரே! |
|
கணிச்சிக் கூர்ம் படைக் கடுந் திறல் ஒருவன் |
|
5 |
பிணிக்கும் காலை, இரங்குவிர் மாதோ; |
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும், |
|
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான் |
|
எல்லாரும் உவப்பது; அன்றியும், |
|
நல் ஆற்றுப் படூஉம் நெறியும்மார் அதுவே. |
|
திணை அது; துறை பொருண் மொழிக் காஞ்சி.
| |
நரிவெரூஉத்தலையார் பாடியது.
|
214 |
'செய்குவம்கொல்லோ, நல்வினை?' எனவே |
|
ஐயம் அறாஅர், கசடு ஈண்டு காட்சி |
|
நீங்கா நெஞ்சத்துத் துணிவு இல்லோரே; |
|
யானை வேட்டுவன் யானையும் பெறுமே; |
|
5 |
குறும்பூழ் வேட்டுவன் வறுங் கையும் வருமே: |
அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு, |
|
செய்வினை மருங்கின் எய்தல் உண்டு எனின், |
|
தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்; |
|
தொய்யா உலகத்து நுகர்ச்சி இல் எனின், |
|
10 |
மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்; |
மாறிப் பிறவார் ஆயினும், இமயத்துக் |
|
கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டு, |
|
தீது இல் யாக்கையொடு மாய்தல் தவத் தலையே. |
|
திணை பொதுவியல்; துறை பொருண்மொழிக் காஞ்சி.
| |
அவன் வடக்கிருந்தான் சொற்றது.
|