முகப்பு | ![]() |
மறக்கள வழி |
368 |
களிறு முகந்து பெயர்குவம் எனினே, |
|
ஒளிறு மழை தவிர்க்கும் குன்றம் போல, |
|
கைம்மா எல்லாம் கணை இடத் தொலைந்தன; |
|
கொடுஞ்சி நெடுந் தேர் முகக்குவம் எனினே; |
|
5 |
கடும் பரி நல் மான் வாங்குவயின் ஒல்கி, |
நெடும் பீடு அழிந்து, நிலம் சேர்ந்தனவே; |
|
கொய் சுவல் புரவி முகக்குவம் எனினே, |
|
மெய் நிறைந்த வழுவொடு பெரும்பிறிதாகி, |
|
வளி வழக்கு அறுத்த வங்கம் போல, |
|
10 |
குருதி அம் பெரும் புனல் கூர்ந்தனவே; ஆங்க |
முகவை இன்மையின் உகவை இன்றி, |
|
இரப்போர் இரங்கும் இன்னா வியன் களத்து, |
|
ஆள் அழிப்படுத்த வாள் ஏர் உழவ! |
|
கடாஅ யானைக் கால்வழி அன்ன என் |
|
15 |
தெடாரித் தெண் கண் தெளிர்ப்ப ஒற்றி, |
பாடி வந்தது எல்லாம், கோடியர் |
|
முழவு மருள் திரு மணி மிடைந்த நின் |
|
அரவு உறழ் ஆரம் முகக்குவம் எனவே. |
|
திணை வாகை; துறை மறக்களவழி.
| |
சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதன் சோழன் வேற் பல் தடக் கைப் பெரு நற்கிள்ளியொடு போர்ப் புறத்துப் பொருது வீழ்ந்து, ஆரம் கழுத்தன்னதாக உயிர் போகாது கிடந்தானைக் கழாத்தலையார் பாடியது.
|
369 |
இருப்பு முகஞ் செறித்த ஏந்து எழில் மருப்பின், |
|
கருங் கை யானை கொண்மூ ஆக, |
|
நீள்மொழி மறவர் எறிவனர் உயர்த்த |
|
வாள் மின் ஆக, வயங்கு கடிப்பு அமைந்த |
|
5 |
குருதிப் பலிய முரசு முழக்கு ஆக, |
அரசு அராப் பனிக்கும் அணங்கு உறு பொழுதின், |
|
வெவ் விசைப் புரவி வீசு வளி ஆக, |
|
விசைப்புறு வல் வில் வீங்கு நாண் உகைத்த |
|
கணைத் துளி பொழிந்த கண் அகன் கிடக்கை. |
|
10 |
ஈரச் செறுவயின் தேர் ஏர் ஆக, |
விடியல் புக்கு, நெடிய நீட்டி, நின் |
|
செருப் படை மிளிர்ந்த திருத்துறு பைஞ் சால், |
|
பிடித்து எறி வெள் வேல் கணையமொடு வித்தி, |
|
விழுத் தலை சாய்த்த வெருவரு பைங் கூழ், |
|
15 |
பேய்மகள் பற்றிய பிணம் பிறங்கு பல் போர்பு, |
கண நரியோடு கழுது களம் படுப்ப, |
|
பூதம் காப்ப, பொலிகளம் தழீஇ, |
|
பாடுநர்க்கு இருந்த பீடுடையாள! |
|
தேய்வை வெண் காழ் புரையும் விசி பிணி |
|
20 |
வேய்வை காணா விருந்தின் போர்வை |
அரிக் குரல் தடாரி உருப்ப ஒற்றி, |
|
பாடி வந்திசின்; பெரும! பாடு ஆன்று |
|
எழிலி தோயும் இமிழ் இசை அருவி, |
|
பொன்னுடை நெடுங் கோட்டு, இமையத்து அன்ன |
|
25 |
ஓடை நுதல, ஒல்குதல் அறியா, |
துடி அடிக் குழவிய பிடி இடை மிடைந்த |
|
வேழ முகவை நல்குமதி |
|
தாழா ஈகைத் தகை வெய்யோயே! |
|
திணையும் துறையும் அவை; துறை ஏர்க்கள உருவகமும் ஆம்.
| |
சேரமான் கடல் ஓட்டிய வெல் கெழு குட்டுவனைப் பரணர் பாடியது.
|
370 |
...............................................................................................................ளி, |
|
நாரும் போழும் செய்து உண்டு, ஒராங்குப் |
|
பசி தினத் திரங்கிய இரு பேர் ஒக்கற்கு |
|
ஆர் பதம் கண்ணென மாதிரம் துழைஇ, |
|
5 |
வேர் உழந்து உலறி, மருங்கு செத்து ஒழிய வந்து, |
அத்தக் குடிஞைத் துடி மருள் தீம் குரல், |
|
உழுஞ்சில் அம் கவட்டிடை இருந்த பருந்தின் |
|
பெடை பயிர் குரலோடு, இசைக்கும் ஆங்கண், |
|
கழை காய்ந்து உலறிய வறம் கூர் நீள் இடை, |
|
10 |
வரி மரல் திரங்கிய கானம் பிற்பட, |
பழுமரம் உள்ளிய பறவை போல, |
|
ஒண் படை மாரி வீழ் கனி பெய்தென, |
|
துவைத்து எழு குருதி நிலமிசைப் பரப்ப, |
|
விளைந்த செழுங் குரல் அரிந்து, கால் குவித்து, |
|
15 |
படு பிணப் பல் போர்பு அழிய வாங்கி, |
எருது களிறு ஆக, வாள் மடல் ஓச்சி, |
|
அதரி திரித்த ஆள் உகு கடாவின், |
|
அகன் கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி, |
|
'வெந் திறல் வியன் களம் பொலிக!' என்று ஏத்தி, |
|
20 |
இருப்பு முகம் செறித்த ஏந்து மருப்பின் |
வரை மருள் முகவைக்கு வந்தனென்; பெரும! |
|
வடி நவில் எஃகம் பாய்ந்தென, கிடந்த |
|
தொடியுடைத் தடக் கை ஓச்சி, வெருவார் |
|
இனத் தடி விராய வரிக் குடர் அடைச்சி, |
|
25 |
அழு குரல் பேய்மகள் அயர, கழுகொடு |
செஞ் செவி எருவை திரிதரும், |
|
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே! |
|
திணையும் துறையும் அவை.
| |
சோழன் செருப்பாழி எறிந்த இளந்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.
|
371 |
அகன் தலை வையத்துப் புரவலர்க் காணாது, |
|
மரந்தலைச் சேர்ந்து, பட்டினி வைகி, |
|
போது அவிழ் அலரி நாரின் தொடுத்து, |
|
தயங்கு இரும் பித்தை பொலியச் சூடி, |
|
5 |
பறையொடு தகைத்த கலப் பையென், முரவு வாய் |
ஆடுறு குழிசி பாடு இன்று தூக்கி, |
|
மன்ற வேம்பின் ஒண் பூ உறைப்ப, |
|
குறை செயல் வேண்டா நசைய இருக்கையேன், |
|
அரிசி இன்மையின் ஆர் இடை நீந்தி, |
|
10 |
கூர் வாய் இரும் படை நீரின் மிளிர்ப்ப, |
வரு கணை வாளி....... அன்பு இன்று தலைஇ, |
|
இரைமுரசு ஆர்க்கும் உரைசால் பாசறை, |
|
வில் ஏர் உழவின் நின் நல் இசை உள்ளி, |
|
குறைத் தலைப் படு பிணன் எதிர, போர்பு அழித்து, |
|
15 |
யானை எருத்தின் வாள் மடல் ஓச்சி |
அதரி திரித்த ஆள் உகு கடாவின், |
|
மதியத்து அன்ன என் விசி உறு தடாரி |
|
அகன் கண் அதிர, ஆகுளி தொடாலின், |
|
பணை மருள் நெடுந் தாள், பல் பிணர்த் தடக் கை, |
|
20 |
புகர்முக முகவைக்கு வந்திசின் பெரும! |
களிற்றுக் கோட்டன்ன வால் எயிறு அழுத்தி, |
|
விழுக்கொடு விரைஇய வெண் நிணச் சுவையினள், |
|
குடர்த் தலை மாலை சூடி, 'உணத் தின |
|
ஆனாப் பெரு வளம் செய்தோன் வானத்து |
|
25 |
வயங்கு பல் மீனினும் வாழியர், பல' என, |
உரு கெழு பேய்மகள் அயர, |
|
குருதித் துகள் ஆடிய களம் கிழவோயே! |
|
திணையும் துறையும் அவை.
| |
தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியது.
|
373 |
உருமிசை முழக்கு என முரசம் இசைப்ப, |
|
செரு நவில் வேழம் கொண்மூ ஆக, |
|
தேர் மா அழி துளி தலைஇ, நாம் உறக் |
|
கணைக் காற்று எடுத்த கண் அகன் பாசறை, |
|
5 |
இழிதரு குருதியொடு ஏந்திய ஒள் வாள் |
பிழிவது போலப் பிட்டை ஊறு உவப்ப, |
|
மைந்தர் ஆடிய மயங்கு பெருந் தானை, |
|
கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்தே! |
|
................................................தண்ட மாப் பொறி. |
|
10 |
மடக் கண் மயில் இயல் மறலியாங்கு, |
நெடுஞ் சுவர் நல் இல் புலம்ப, கடை கழிந்து, |
|
மென் தோள் மகளிர் மன்றம் பேணார், |
|
புண்ணுவ |
|
..........................அணியப் புரவி வாழ்க என, |
|
15 |
சொல் நிழல் இன்மையின் நல் நிழல் சேர, |
நுண் பூண் மார்பின் புன் தலைச் சிறாஅர் |
|
அம்பு அழி பொழுதில் தமர் முகம் காணா, |
|
........................................................ற் றொக்கான |
|
வேந்து புறங்கொடுத்த வீய்ந்து உகு பறந்தலை, |
|
20 |
மாடம் மயங்கு எரி மண்டி, கோடு இறுபு, |
உரும் எறி மலையின், இரு நிலம் சேர, |
|
சென்றோன் மன்ற, சொª |
|
........................ ண்ணறிநர் கண்டு கண் அலைப்ப, |
|
வஞ்சி முற்றம் வயக் களன் ஆக, |
|
25 |
அஞ்சா மறவர் ஆட் போர்பு அழித்துக் |
கொண்டனை, பெரும! குட புலத்து அதரி; |
|
பொலிக அத்தை, நின் பணைதனற............ளம்! |
|
விளங்கு திணை வேந்தர் களம்தொறும் சென்று, |
|
''புகர்முக முகவை பொலிக!'' என்று ஏத்தி, |
|
30 |
கொண்டனர்' என்ப, பெரியோர்; யானும் |
அம் கண் மாக் கிணை அதிர ஒற்ற, |
|
............... லென்ஆயினும், காதலின் ஏத்தி, |
|
நின்னோர் அன்னோர் பிறர் இவண் இன்மையின், |
|
மன் எயில் முகவைக்கு வந்திசின், பெரும! |
|
35 |
பகைவர் புகழ்ந்த ஆண்மை, நகைவர்க்குத் |
தா இன்று உதவும் பண்பின், பேயொடு |
|
கண நரி திரிதரூஉம் ஆங்கண், நிணன் அருந்து |
|
செஞ் செவி எருவை குழீஇ, |
|
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே! |
|
40 |
திணை அது; துறை மறக்களவழி; ஏர்க்கள உருவகமும் ஆம். |
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூர் எறிந்தானைக் கோவூர்
| |
கிழார் பாடியது.
|