முகப்பு | ![]() |
மூதில் முல்லை |
279 |
கெடுக சிந்தை; கடிது இவள் துணிவே; |
|
மூதில் மகளிர் ஆதல் தகுமே: |
|
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை, |
|
யானை எறிந்து, களத்து ஒழிந்தனனே; |
|
5 |
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன், |
பெரு நிரை விலங்கி, ஆண்டுப் பட்டனனே; |
|
இன்றும், செருப் பறை கேட்டு, விருப்புற்று, மயங்கி, |
|
வேல் கைக் கொடுத்து, வெளிது விரித்து உடீஇ, |
|
பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி, |
|
10 |
ஒரு மகன் அல்லது இல்லோள், |
'செருமுகம் நோக்கிச் செல்க' என விடுமே! |
|
திணை வாகை; துறை மூதில் முல்லை.
| |
ஒக்கூர் மாசாத்தியார் பாடியது.
|
288 |
மண் கொள வரிந்த வைந் நுதி மருப்பின் |
|
அண்ணல் நல் ஏறு இரண்டு உடன் மடுத்து, |
|
வென்றதன் பச்சை சீவாது போர்த்த |
|
திண் பிணி முரசம் இடைப் புலத்து இரங்க, |
|
5 |
ஆர் அமர் மயங்கிய ஞாட்பின், தெறுவர, |
நெடு வேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்து, |
|
அருகுகை ...................................... மன்ற |
|
குருதியொடு துயல்வரு மார்பின் |
|
முயக்கிடை ஈயாது மொய்த்தன, பருந்தே. |
|
திணை தும்பை; துறை மூதில் முல்லை.
| |
கழாத்தலையார் பாடியது.
|
306 |
களிறு பொரக் கலங்கு, கழல் முள் வேலி, |
|
அரிது உண் கூவல், அம் குடிச் சீறூர் |
|
ஒலி மென் கூந்தல் ஒள் நுதல் அரிவை |
|
நடுகல் கை தொழுது பரவும், ஒடியாது; |
|
5 |
விருந்து எதிர் பெறுகதில் யானே; என்னையும் |
ஒ ... ... ... ... ... ... ...வேந்தனொடு |
|
நாடுதரு விழுப் பகை எய்துக எனவே. |
|
திணை அது; துறை மூதில் முல்லை.
| |
அள்ளூர் நன்முல்லையார் பாடியது.
|
308 |
பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின், |
|
மின் நேர் பச்சை, மிஞிற்றுக் குரல் சீறியாழ் |
|
நன்மை நிறைந்த நய வரு பாண! |
|
சீறூர் மன்னன் சிறியிலை எஃகம் |
|
5 |
வேந்து ஊர் யானை ஏந்து முகத்ததுவே; |
வேந்து உடன்று எறிந்த வேலே, என்னை |
|
சாந்து ஆர் அகலம் உளம் கழிந்தன்றே; |
|
உளம் கழி சுடர்ப் படை ஏந்தி, நம் பெருவிறல் |
|
ஓச்சினன் துரந்த காலை, மற்றவன் |
|
10 |
புன் தலை மடப் பிடி நாண, |
குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத்தனவே. |
|
திணை வாகை; துறை மூதில் முல்லை.
| |
கோவூர் கிழார் பாடியது.
|
312 |
ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே; |
|
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே; |
|
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே; |
|
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே, |
|
5 |
ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி, |
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே. |
|
திணை வாகை; துறை மூதில்முல்லை.
| |
பொன்முடியார் பாடியது.
|
326 |
ஊர் முது வேலிப் பார் நடை வெருகின் |
|
இருள் பகை வெரீஇய நாகு இளம் பேடை |
|
உயிர் நடுக்குற்றுப் புலா விட்டு அரற்ற, |
|
சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த |
|
5 |
பருத்திப் பெண்டின் சிறு தீ விளக்கத்து, |
கவிர்ப் பூ நெற்றிச் சேவலின் தணியும் |
|
அரு மிளை இருக்கையதுவே மனைவியும், |
|
வேட்டச் சிறாஅர் சேண் புலம் படராது, |
|
படப்பைக் கொண்ட குறுந் தாள் உடும்பின் |
|
10 |
விழுக்கு நிணம் பெய்த தயிர்க் கண் விதவை, |
யாணர் நல்லவை பாணரொடு, ஒராங்கு |
|
வரு விருந்து அயரும் விருப்பினள்; கிழவனும், |
|
அருஞ் சமம் ததையத் தாக்கி, பெருஞ் சமத்து |
|
அண்ணல் யானை அணிந்த |
|
15 |
பொன் செய் ஓடைப் பெரும் பரிசிலனே. |
திணை வாகை; துறை மூதில் முல்லை.
| |
தங்கால் பொற்கொல்லனார் பாடியது.
|
327 |
எருது கால் உறாஅது, இளைஞர் கொன்ற |
|
சில் விளை வரகின் புல்லென் குப்பை, |
|
தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில் |
|
பசித்த பாணர் உண்டு, கடை தப்பலின், |
|
5 |
ஒக்கல் ஒற்கம் சொலிய, தன் ஊர்ச் |
சிறு புல்லாளர் முகத்து அவை கூறி, |
|
வரகு கடன் இரக்கும் நெடுந் தகை |
|
அரசு வரின் தாங்கும் வல்லாளன்னே. |
|
திணையும் துறையும் அவை.
| |
..............................................................
|
328 |
..........டை முதல் புறவு சேர்ந்திருந்த |
|
புன் புலச் சீறூர், நெல் விளையாதே; |
|
வரகும் தினையும் உள்ளவை எல்லாம் |
|
இரவல் மாக்களுக்கு ஈயத் தொலைந்தன; |
|
5 |
................. டு அமைந்தனனே; |
அன்னன் ஆயினும், பாண! நன்றும் |
|
வெள்ளத்திடும் பாலுள் உறை தொட.... |
|
களவுப் புளி அன்ன விளை.... |
|
..............வாடு ஊன் கொழுங் குறை |
|
10 |
கொய் குரல் அரிசியொடு நெய் பெய்து அட்டு, |
துடுப்பொடு சிவணிய களிக் கொள் வெண் சோறு |
|
உண்டு, இனிது இருந்த பின் |
|
... ... ... ... .... ... தருகுவன் மாதோ |
|
தாளி முதல் நீடிய சிறு நறு முஞ்ஞை |
|
15 |
முயல் வந்து கறிக்கும் முன்றில், |
சீறூர் மன்னனைப் பாடினை செலினே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பங்கு ............................. பாடியது.
|
329 |
இல் அடு கள்ளின் சில் குடிச் சீறூர்ப் |
|
புடை நடு கல்லின் நாட் பலி ஊட்டி, |
|
நல் நீராட்டி, நெய்ந் நறைக் கொளீஇய, |
|
மங்குல் மாப் புகை மறுகுடன் கமழும், |
|
5 |
அரு முனை இருக்கைத்துஆயினும், வரி மிடற்று |
அரவு உறை புற்றத்து அற்றே நாளும் |
|
புரவலர் புன்கண் நோக்காது, இரவலர்க்கு |
|
அருகாது ஈயும் வண்மை, |
|
உரைசால், நெடுந்தகை ஓம்பும் ஊரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் பாடியது.
|
330 |
வேந்துடைத் தானை முனை கெட நெரிதர, |
|
ஏந்து வாள் வலத்தன் ஒருவன் ஆகி, |
|
தன் இறந்து வாராமை விலக்கலின், பெருங் கடற்கு |
|
ஆழி அனையன்மாதோ என்றும் |
|
5 |
பாடிச் சென்றோர்க்கு அன்றியும், வாரிப் |
புரவிற்கு ஆற்றாச் சீறூர்த் |
|
தொன்மை சுட்டிய வண்மையோனே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மதுரைக் கணக்காயனார் பாடியது.
|
331 |
கல் அறுத்து இயற்றிய வல் உவர்க் கூவல், |
|
வில் ஏர் வாழ்க்கை, சீறூர் மதவலி |
|
நனி நல்கூர்ந்தனன்ஆயினும், பனி மிக, |
|
புல்லென் மாலைச் சிறு தீ ஞெலியும் |
|
5 |
கல்லா இடையன் போல, குறிப்பின் |
இல்லது படைக்கவும் வல்லன்; உள்ளது |
|
தவச் சிறிது ஆயினும் மிகப் பலர் என்னாள், |
|
நீள் நெடும் பந்தர் ஊண் முறை ஊட்டும் |
|
இல் பொலி மகடூஉப் போல, சிற் சில |
|
10 |
வரிசையின் அளிக்கவும் வல்லன்; உரிதினின் |
காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும் |
|
போகு பலி வெண் சோறு போலத் |
|
தூவவும் வல்லன், அவன் தூவுங்காலே. |
|
திணையும் துறையும் அவை.
| |
உறையூர் முது கூத்தனார் பாடியது.
|
332 |
பிறர் வேல் போலாதாகி, இவ் ஊர் |
|
மறவன் வேலோ பெருந் தகை உடைத்தே; |
|
இரும் புறம் நீறும் ஆடி, கலந்து இடைக் |
|
குரம்பைக் கூரைக் கிடக்கினும் கிடக்கும்; |
|
5 |
மங்கல மகளிரொடு மாலை சூட்டி, |
இன் குரல் இரும் பை யாழொடு ததும்ப, |
|
தெண் நீர்ப் படுவினும் தெருவினும் திரிந்து, |
|
மண் முழுது அழுங்கச் செல்லினும் செல்லும்; ஆங்கு, |
|
இருங் கடல் தானை வேந்தர் |
|
10 |
பெருங் களிற்று முகத்தினும் செலவு ஆனாதே. |
திணையும் துறையும் அவை.
| |
விரியூர் நக்கனார் பாடியது.
|
333 |
நீருள் பட்ட மாரிப் பேர் உறை |
|
மொக்குள் அன்ன பொகுட்டு விழிக் கண்ண, |
|
உள் ஊர்க் குறும் புதல் துள்ளுவன உகளும் |
|
5 |
தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின், |
'உண்க' என உணரா உயவிற்று ஆயினும், |
|
தங்கினிர் சென்மோ, புலவிர்! நன்றும்; |
|
சென்றதற் கொண்டு, மனையோள் விரும்பி, |
|
வரகும் தினையும் உள்ளவை எல்லாம் |
|
10 |
இரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தென, |
குறித்து மாறு எதிர்ப்பை பெறாஅமையின், |
|
குரல் உணங்கு விதைத் தினை உரல் வாய்ப் பெய்து, |
|
சிறிது புறப்பட்டன்றோ இலளே; தன் ஊர் |
|
வேட்டக் குடிதொறும் கூட்டு |
|
15 |
.............................................. உடும்பு செய் |
பாணி நெடுந் தேர் வல்லரோடு ஊரா, |
|
வம்பு அணி யானை வேந்து தலைவரினும், |
|
உண்பது மன்னும் அதுவே; |
|
பரிசில் மன்னும், குருசில் கொண்டதுவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
.................................................................
|
334 |
காமரு பழனக் கண்பின் அன்ன |
|
தூ மயிர்க் குறுந் தாள் நெடுஞ் செவிக் குறு முயல், |
|
புன் தலைச் சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின், |
|
படப்பு ஒடுங்கும்மே ........... பின்பு |
|
5 |
..................... ன் ஊரே மனையோள் |
பாணர் ஆர்த்தவும், பரிசிலர் ஓம்பவும், |
|
ஊண் ஒலி அரவமொடு கைதூவாளே; |
|
உயர் மருப்பு யானைப் புகர் முகத்து அணிந்த |
|
பொலம் .............................. ப் |
|
10 |
பரிசில் பரிசிலர்க்கு ஈய, |
உரவு வேல் காளையும் கை தூவானே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மதுரைத் தமிழக் கூத்தனார் பாடியது.
|
335 |
அடல் அருந் துப்பின்.................... |
|
...................குருந்தே முல்லை என்று |
|
இந் நான்கு அல்லது பூவும் இல்லை; |
|
கருங் கால் வரகே, இருங் கதிர்த் தினையே, |
|
5 |
சிறு கொடிக் கொள்ளே, பொறி கிளர் அவரையொடு, |
இந் நான்கு அல்லது உணாவும் இல்லை; |
|
துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று |
|
இந் நான்கு அல்லது குடியும் இல்லை; |
|
ஒன்னாத் தெவ்வர் முன் நின்று விலங்கி, |
|
10 |
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தென, |
கல்லே பரவின் அல்லது, |
|
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
மாங்குடி கிழார் பாடியது.
|