முகப்பு | ![]() |
வாழ்த்தியல் |
2 |
மண் திணிந்த நிலனும், |
|
நிலன் ஏந்திய விசும்பும், |
|
விசும்பு தைவரு வளியும், |
|
வளித் தலைஇய தீயும், |
|
5 |
தீ முரணிய நீரும், என்றாங்கு |
ஐம் பெரும் பூதத்து இயற்கை போல |
|
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும், |
|
வலியும், தெறலும், அளியும், உடையோய்! |
|
நின் கடல் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின் |
|
10 |
வெண் தலைப் புணரிக் குட கடல் குளிக்கும், |
யாணர் வைப்பின், நல் நாட்டுப் பொருந! |
|
வான வரம்பனை! நீயோ, பெரும! |
|
அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ, |
|
நிலம் தலைக்கொண்ட பொலம் பூந் தும்பை |
|
15 |
ஈர் ஐம்பதின்மரும் பொருது, களத்து ஒழிய, |
பெருஞ் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய்! |
|
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும், |
|
நாஅல் வேத நெறி திரியினும், |
|
திரியாச் சுற்றமொடு முழுது சேண் விளங்கி, |
|
20 |
நடுக்கின்றி நிலியரோ அத்தை அடுக்கத்து, |
சிறு தலை நவ்விப் பெருங் கண் மாப் பிணை, |
|
அந்தி அந்தணர் அருங் கடன் இறுக்கும் |
|
முத் தீ விளக்கின், துஞ்சும் |
|
பொற் கோட்டு இமயமும், பொதியமும், போன்றே! |
|
திணை பாடாண் திணை; துறை செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
| |
சேரமான் பெருஞ் சோற்று உதியஞ் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர்பாடியது.
|
3 |
உவவு மதி உருவின் ஓங்கல் வெண் குடை |
|
நிலவுக் கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற, |
|
ஏம முரசம் இழுமென முழங்க, |
|
நேமி உய்த்த நேஎ நெஞ்சின், |
|
5 |
தவிரா ஈகை, கவுரியர் மருக! |
செயிர் தீர் கற்பின் சேயிழை கணவ! |
|
பொன் ஓடைப் புகர் அணி நுதல், |
|
துன் அருந் திறல், கமழ் கடாஅத்து, |
|
எயிறு படையாக எயிற் கதவு இடாஅ, |
|
10 |
கயிறு பிணிக்கொண்ட கவிழ் மணி மருங்கின், |
பெருங் கை, யானை இரும் பிடர்த் தலை இருந்து, |
|
மருந்து இல் கூற்றத்து அருந் தொழில் சாயாக் |
|
கருங் கை ஒள் வாட் பெரும்பெயர் வழுதி! |
|
நிலம் பெயரினும், நின் சொல் பெயரல்; |
|
15 |
பொலங் கழற் கால், புலர் சாந்தின் |
விலங்கு அகன்ற வியல் மார்ப! |
|
ஊர் இல்ல, உயவு அரிய, |
|
நீர் இல்ல, நீள் இடைய, |
|
பார்வல் இருக்கை, கவி கண் நோக்கின், |
|
20 |
செந் தொடை பிழையா வன்கண் ஆடவர் |
அம்பு விட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கை, |
|
திருந்து சிறை வளை வாய்ப் பருந்து இருந்து உயவும் |
|
உன்ன மரத்த துன் அருங் கவலை, |
|
நின் நசை வேட்கையின் இரவலர் வருவர் அது |
|
25 |
முன்னம் முகத்தின் உணர்ந்து, அவர் |
இன்மை தீர்த்தல் வன்மையானே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பாண்டியன் கருங் கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதியை இரும்பிடர்த்தலையார்பாடியது.
|
6 |
வடாஅது பனி படு நெடு வரை வடக்கும், |
|
தெனாஅது உரு கெழு குமரியின் தெற்கும், |
|
குணாஅது கரை பொரு தொடு கடற் குணக்கும், |
|
குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும், |
|
5 |
கீழது முப் புணர் அடுக்கிய முறை முதற் கட்டின் |
நீர் நிலை நிவப்பின் கீழும், மேலது |
|
ஆனிலை உலகத்தானும், ஆனாது, |
|
உருவும் புகழும் ஆகி, விரி சீர்த் |
|
தெரி கோல் ஞமன் போல, ஒரு திறம் |
|
10 |
பற்றல் இலியரோ! நின் திறம் சிறக்க! |
செய் வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்து, |
|
கடல் படை குளிப்ப மண்டி, அடர் புகர்ச் |
|
சிறு கண் யானை செவ்விதின் ஏவி, |
|
பாசவல் படப்பை ஆர் எயில் பல தந்து, |
|
15 |
அவ் எயில் கொண்ட செய்வுறு நன் கலம் |
பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கி, |
|
பணியியர் அத்தை, நின் குடையே முனிவர் |
|
முக் கட் செல்வர் நகர் வலம் செயற்கே! |
|
இறைஞ்சுக, பெரும! நின் சென்னி சிறந்த |
|
20 |
நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே! |
வாடுக, இறைவ! நின் கண்ணி ஒன்னார் |
|
நாடு சுடு கமழ் புகை எறித்தலானே! |
|
செலியர் அத்தை, நின் வெகுளி வால் இழை |
|
மங்கையர் துனித்த வாள் முகத்து எதிரே! |
|
25 |
ஆங்க, வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய |
தண்டா ஈகைத் தகை மாண் குடுமி! |
|
தண் கதிர் மதியம் போலவும், தெறு சுடர் |
|
ஒண் கதிர் ஞாயிறு போலவும், |
|
மன்னிய, பெரும! நீ நிலமிசையானே! |
|
திணையும் துறையும் அவை; துறை வாழ்த்தியலும் ஆம்.
| |
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரி கிழார் பாடியது.
|
13 |
'இவன் யார்?' என்குவை ஆயின், இவனே |
|
புலி நிறக் கவசம் பூம் பொறி சிதைய, |
|
எய் கணை கிழித்த பகட்டு எழில் மார்பின், |
|
மறலி அன்ன களிற்று மிசையோனே; |
|
5 |
களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும், |
பல் மீன் நாப்பண் திங்கள் போலவும், |
|
சுறவினத்து அன்ன வாளோர் மொய்ப்ப, |
|
மரீஇயோர் அறியாது, மைந்து பட்டன்றே; |
|
நோய் இலன் ஆகிப் பெயர்கதில் அம்ம! |
|
10 |
பழன மஞ்ஞை உகுத்த பீலி |
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும், |
|
கொழு மீன், விளைந்த கள்ளின், |
|
விழு நீர் வேலி நாடு கிழவோனே. |
|
திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
| |
சோழன் முடித் தலைக் கோப் பெருநற்கிள்ளி கருவூரிடம் செல்வானைக் கண்டு,சேரமான் அந்துவஞ் சேரல் இரும்பொறையோடு வேண்மாடத்து மேல் இருந்து,உறையூர் ஏணிச்சேரி முட மோசியார் பாடியது.
|
91 |
வலம் படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார் |
|
களம் படக் கடந்த கழல் தொடித் தடக் கை, |
|
ஆர் கலி நறவின், அதியர் கோமான்! |
|
போர் அடு திருவின் பொலந் தார் அஞ்சி! |
|
5 |
பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி |
நீலமணி மிடற்று ஒருவன் போல |
|
மன்னுக பெரும! நீயே, தொல் நிலைப் |
|
பெரு மலை விடரகத்து அரு மிசைக் கொண்ட |
|
சிறியிலை நெல்லித் தீம் கனி குறியாது, |
|
10 |
ஆதல் நின் அகத்து அடக்கி, |
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே! |
|
திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
| |
அவனை அவர் நெல்லிப் பழம் பெற்றுப் பாடியது.
|
158 |
முரசு கடிப்பு இகுப்பவும், வால் வளை துவைப்பவும், |
|
அரசுடன் பொருத அண்ணல் நெடு வரை, |
|
கறங்கு வெள் அருவி கல் அலைத்து ஒழுகும் |
|
பறம்பின் கோமான் பாரியும்; பிறங்கு மிசைக் |
|
5 |
கொல்லி ஆண்ட வல் வில் ஓரியும்; |
காரி ஊர்ந்து பேர் அமர்க் கடந்த, |
|
மாரி ஈகை, மறப் போர் மலையனும்; |
|
ஊராது ஏந்திய குதிரை, கூர் வேல், |
|
கூவிளங் கண்ணி, கொடும் பூண், எழினியும்; |
|
10 |
ஈர்ந் தண் சிலம்பின் இருள் தூங்கு நளி முழை, |
அருந் திறல் கடவுள் காக்கும் உயர் சிமை, |
|
பெருங் கல் நாடன் பேகனும்; திருந்து மொழி |
|
மோசி பாடிய ஆயும்; ஆர்வம் உற்று |
|
உள்ளி வருநர் உலைவு நனி தீர, |
|
15 |
தள்ளாது ஈயும் தகைசால் வண்மை, |
கொள்ளார் ஓட்டிய, நள்ளியும் என ஆங்கு |
|
எழுவர் மாய்ந்த பின்றை, 'அழிவரப் |
|
பாடி வருநரும் பிறரும் கூடி |
|
இரந்தோர் அற்றம் தீர்க்கு' என, விரைந்து, இவண் |
|
20 |
உள்ளி வந்தனென், யானே; விசும்புறக் |
கழை வளர் சிலம்பின் வழையொடு நீடி, |
|
ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று, |
|
முள் புற முது கனி பெற்ற கடுவன் |
|
துய்த் தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும், |
|
25 |
அதிரா யாணர், முதிரத்துக் கிழவ! |
இவண் விளங்கு சிறப்பின், இயல் தேர்க் குமண! |
|
இசை மேந்தோன்றிய வண்மையொடு, |
|
பகை மேம்படுக, நீ ஏந்திய வேலே! |
|
திணை அது; துறை வாழ்த்தியல்; பரிசில் கடா நிலையும் ஆம்.
| |
குமணனைப் பெருஞ்சித்திரனார் பாடியது.
|
367 |
நாகத்து அன்ன பாகு ஆர் மண்டிலம் |
|
தமவேஆயினும் தம்மொடு செல்லா; |
|
வேற்றோர்ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்; |
|
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங் கை நிறையப் |
|
5 |
பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து, |
பாசிழை மகளிர் பொலங் கலத்து ஏந்திய |
|
நார் அரி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து, |
|
இரவலர்க்கு அருங் கலம் அருகாது வீசி, |
வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்; |
10 |
வாழச் செய்த நல்வினை அல்லது |
ஆழுங் காலைப் புணை பிறிது இல்லை; |
|
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர் |
|
முத்தீப் புரையக் காண்தக இருந்த |
|
கொற்ற வெண் குடைக் கொடித் தேர் வேந்திர்! |
|
15 |
யான் அறி அளவையோ இதுவே: வானத்து |
வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப் |
|
பரந்து இயங்கு மா மழை உறையினும், |
|
உயர்ந்து மேந் தோன்றிப் பொலிக, நும் நாளே! |
|
திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
| |
சேரமான் மாரிவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும், ஒருங்கு இருந்தாரை ஒளவையார் பாடியது.
|
375 |
அலங்கு கதிர் சுமந்த கலங்கற் சூழி, |
|
நிலைதளர்வு தொலைந்த ஒல்கு நிலைப் பல் காற் |
|
பொதியில் ஒரு சிறை பள்ளி ஆக, |
|
முழாஅரைப் போந்தை அர வாய் மா மடல் |
|
5 |
நாரும் போழும் கிணையொடு சுருக்கி, |
ஏரின் வாழ்நர் குடிமுறை புகாஅ, |
|
'ஊழ் இரந்து உண்ணும் உயவல் வாழ்வைப் |
|
புரவு எதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார்?' எனப் |
|
பிரசம் தூங்கும் அறாஅ யாணர், |
|
10 |
வரை அணி படப்பை, நல் நாட்டுப் பொருந! |
பொய்யா ஈகைக் கழல் தொடி ஆஅய்! |
|
யாவரும் இன்மையின் கிணைப்ப, தாவது, |
|
பெரு மழை கடல் பரந்தாஅங்கு, யானும் |
|
ஒரு நின் உள்ளி வந்தனென்; அதனால் |
|
15 |
புலவர் புக்கில் ஆகி, நிலவரை |
நிலீஇயர் அத்தை, நீயே! ஒன்றே |
|
நின் இன்று வறுவிது ஆகிய உலகத்து, |
|
நிலவன்மாரோ, புரவலர்! துன்னி, |
|
பெரிய ஓதினும் சிறிய உணராப் |
|
20 |
பீடு இன்று பெருகிய திருவின், |
பாடு இல், மன்னரைப் பாடன்மார், எமரே! |
|
திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
| |
அவனை அவர் பாடியது.
|
377 |
பனி பழுநிய பல் யாமத்துப் |
|
பாறு தலை மயிர் நனைய, |
|
இனிது துஞ்சும் திரு நகர் வரைப்பின், |
|
இனையல் அகற்ற, என் கிணை தொடாக் குறுகி, |
|
5 |
'அவி உணவினோர் புறங்காப்ப, |
அற நெஞ்சத்தோன் வாழ, நாள்' என்று, |
|
அதற் கொண்டு வரல் ஏத்தி, |
|
'''கரவு இல்லாக் கவி வண் கையான், |
|
வாழ்க!'' எனப் பெயர் பெற்றோர் |
|
10 |
பிறர்க்கு உவமம் தான் அல்லது, |
தனக்கு உவமம் பிறர் இல்' என, |
|
அது நினைந்து, மதி மழுகி, |
|
ஆங்கு நின்ற எற் காணூஉச் |
|
'சேய் நாட்டுச் செல் கிணைஞனை! |
|
15 |
நீ புரவலை, எமக்கு' என்ன, |
மலை பயந்த மணியும், கடறு பயந்த பொன்னும், |
|
கடல் பயந்த கதிர் முத்தமும், |
|
வேறு பட்ட உடையும், சேறுபட்ட தசும்பும், |
|
கனவில் கண்டாங்கு, வருந்தாது நிற்ப, |
|
20 |
நனவின் நல்கியோன், நசைசால் தோன்றல்; |
நாடு என மொழிவோர், 'அவன் நாடு' என மொழிவோர்; |
|
வேந்து என மொழிவோர், 'அவன் வேந்து' என மொழிவோர்; |
|
.........................பொற் கோட்டு யானையர், |
|
கவர் பரிக் கச்சை நல் மான், |
|
25 |
வடி மணி, வாங்கு உருள, |
.....................,..........நல் தேர்க் குழுவினர், |
|
கதழ் இசை வன்கணினர், |
|
வாளின் வாழ்நர், ஆர்வமொடு ஈண்டி, |
|
கடல் ஒலி கொண்ட தானை |
|
30 |
அடல் வெங் குருசில்! மன்னிய நெடிதே! |
திணை அது; துறை வாழ்த்தியல்.
| |
சோழன் இராசசூயம் வேட்ட பெரு நற்கிள்ளியை உலோச்சனார் பாடியது.
|
385 |
வெள்ளி தோன்ற, புள்ளுக் குரல் இயம்ப, |
|
புலரி விடியல் பகடு பல வாழ்த்தி, |
|
தன் கடைத் தோன்றினும் இலனே; பிறன் கடை, |
|
அகன்கண் தடாரிப் பாடு கேட்டருளி, |
|
5 |
வறன் யான் நீங்கல் வேண்டி, என் அரை |
நீல் நிறச் சிதாஅர் களைந்து, |
|
வெளியது உடீஇ, என் பசி களைந்தோனே; |
|
காவிரி அணையும் தாழ் நீர்ப் படப்பை |
|
நெல் விளை கழனி அம்பர் கிழவோன், |
|
10 |
நல் அருவந்தை, வாழியர்! புல்லிய |
வேங்கட விறல் வரைப் பட்ட |
|
ஓங்கல் வானத்து உறையினும் பலவே! |
|
திணை அது; துறை வாழ்த்தியல்.
| |
அம்பர் கிழான் அருவந்தையைக் கல்லாடனார் பாடியது.
|
386 |
நெடு நீர நிறை கயத்துப் |
|
படு மாரித் துளி போல, |
|
நெய் துள்ளிய வறை முகக்கவும், |
|
சூடு கிழித்து வாடுஊன் மிசையவும், |
|
5 |
ஊன் கொண்ட வெண் மண்டை |
ஆன் பயத்தான் முற்று அழிப்பவும், |
|
வெய்து உண்ட வியர்ப்பு அல்லது, |
|
செய் தொழிலான் வியர்ப்பு அறியாமை |
|
ஈத்தோன், எந்தை, இசை தனது ஆக; |
|
10 |
வயலே, நெல்லின் வேலி நீடிய கரும்பின் |
பாத்திப் பன் மலர்ப் பூத் ததும்பின; |
|
புறவே, புல் அருந்து பல் ஆயத்தான், |
|
வில் இருந்த வெங் குறும்பின்று; |
|
கடலே, கால் தந்த கலன் எண்ணுவோர் |
|
15 |
கானல் புன்னைச் சினை நிலைக்குந்து; |
கழியே, சிறு வெள் உப்பின் கொள்ளை சாற்றி, |
|
பெருங் கல் நல் நாட்டு உமண் ஒலிக்குந்து; |
|
அன்ன நல் நாட்டுப் பொருநம், யாமே; |
|
பொராஅப் பொருநரேம்; |
|
20 |
குண திசை நின்று குடமுதல் செலினும், |
குட திசை நின்று குணமுதல் செலினும், |
|
வட திசை நின்று தென்வயின் செலினும், |
|
தென் திசை நின்று குறுகாது நீடினும், |
|
யாண்டும் நிற்க, வெள்ளி; யாம் |
|
25 |
வேண்டியது உணர்ந்தோன் தாள் வாழியவே! |
திணையும் துறையும் அவை.
| |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கோவூர் கிழார் பாடியது.
|
387 |
வள் உகிர வயல் ஆமை |
|
வெள் அகடு கண்டன்ன, |
|
வீங்கு விசிப் புதுப் போர்வைத் |
|
தெண் கண் மாக் கிணை இயக்கி, 'என்றும் |
|
5 |
மாறு கொண்டோர் மதில் இடறி, |
நீறு ஆடிய நறுங் கவுள, |
|
பூம் பொறிப் பணை எருத்தின, |
|
வேறு வேறு பரந்து இயங்கி, |
|
வேந்துடை மிளை அயல் பரக்கும் |
|
10 |
ஏந்து கோட்டு இரும் பிணர்த் தடக் கை, |
திருந்து தொழில் பல பகடு |
|
பகைப் புல மன்னர் பணிதிறை தந்து, நின் |
|
நகைப் புலவாணர் நல்குரவு அகற்றி, |
|
மிகப் பொலியர், தன் சேவடி அத்தை!' என்று, |
|
15 |
யான் இசைப்பின், நனி நன்று எனா, |
பல பிற வாழ்த்த இருந்தோர் என்கோ?......... |
|
மருவ இன் நகர் அகன்................................. |
|
திருந்து கழல் சேவடி குறுகல் வேண்டி, |
|
வென்று இரங்கும் விறல் முரசினோன், |
|
20 |
என் சிறுமையின், இழித்து நோக்கான், |
தன் பெருமையின் தகவு நோக்கி, |
|
குன்று உறழ்ந்த களிறு என்கோ? |
|
கொய் உளைய மா என்கோ? |
|
மன்று நிறையும் நிரை என்கோ? |
|
25 |
மனைக் களமரொடு களம் என்கோ? |
ஆங்கு அவை, கனவு என மருள, வல்லே, நனவின் |
|
நல்கியோனே, நசைசால் தோன்றல், |
|
ஊழி வாழி, பூழியர் பெரு மகன்! |
|
பிணர் மருப்பு யானைச் செரு மிகு நோன் தாள் |
|
30 |
செல்வக் கடுங்கோ வாழியாதன் |
ஒன்னாத் தெவ்வர் உயர்குடை பணித்து, இவண் |
|
விடுவர் மாதோ நெடிதே நி |
|
புல் இலை வஞ்சிப் புற மதில் அலைக்கும் |
|
கல்லென் பொருநை மணலினும், ஆங்கண் |
|
35 |
பல் ஊர் சுற்றிய கழனி |
எல்லாம் விளையும் நெல்லினும் பலவே. |
|
திணையும் துறையும் அவை.
| |
சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதனைக் குண்டுகட் பாலியாதன் பாடியது.
|