முகப்பு | ![]() |
விறலியாற்றுப்படை |
64 |
நல் யாழ், ஆகுளி, பதலையொடு சுருக்கி, |
|
செல்லாமோதில் சில் வளை விறலி! |
|
களிற்றுக் கணம் பொருத கண் அகன் பறந்தலை, |
|
விசும்பு ஆடு எருவை பசுந் தடி தடுப்ப, |
|
5 |
பகைப் புலம் மரீஇய தகைப் பெருஞ் சிறப்பின் |
குடுமிக் கோமாற் கண்டு, |
|
நெடு நீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே? |
|
திணை பாடாண் திணை; துறை விறலியாற்றுப்படை.
| |
பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெடும்பல்லியத்தனார் பாடியது.
|
103 |
ஒரு தலைப் பதலை தூங்க, ஒரு தலைத் |
|
தூம்பு அகச் சிறு முழாத் தூங்கத் தூக்கி, |
|
'கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்?' எனச் |
|
சுரன்முதல் இருந்த சில் வளை விறலி! |
|
5 |
செல்வைஆயின், சேணோன் அல்லன்; |
முனை சுட எழுந்த மங்குல் மாப் புகை |
|
மலை சூழ் மஞ்சின், மழ களிறு அணியும் |
|
பகைப் புலத்தோனே, பல் வேல் அஞ்சி; |
|
பொழுது இடைப்படாஅப் புலரா மண்டை |
|
10 |
மெழுகு மெல் அடையின் கொழு நிணம் பெருப்ப, |
அலத்தற் காலை ஆயினும், |
|
புரத்தல் வல்லன்; வாழ்க, அவன் தாளே! |
|
திணை அது; துறை விறலியாற்றுப்படை.
| |
அதியமான் நெடுமான் அஞ்சியை அவர் பாடியது.
|
105 |
சேயிழை பெறுகுவை வாள் நுதல் விறலி! |
|
தடவு வாய்க் கலித்த மா இதழ்க் குவளை |
|
வண்டு படு புது மலர்த் தண் சிதர் கலாவப் |
|
பெய்யினும், பெய்யாது ஆயினும், அருவி |
|
5 |
கொள் உழு வியன் புலத்துழை கால் ஆக, |
மால்புடை நெடு வரைக் கோடுதோறு இழிதரும் |
|
நீரினும் இனிய சாயல் |
|
பாரி வேள்பால் பாடினை செலினே. |
|
திணை பாடாண் திணை; துறை விறலியாற்றுப்படை.
| |
வேள் பாரியைக் கபிலர் பாடியது.
|
133 |
மெல் இயல் விறலி! நீ நல் இசை செவியின் |
|
கேட்பின் அல்லது, காண்பு அறியலையே; |
|
காண்டல் வேண்டினைஆயின் மாண்ட நின் |
|
விரை வளர் கூந்தல் வரை வளி உளர, |
|
5 |
கலவ மஞ்ஞையின் காண்வர இயலி, |
மாரி அன்ன வண்மைத் |
|
தேர் வேள் ஆயைக் காணிய சென்மே! |
|
திணை அது; துறை விறலியாற்றுப்படை.
| |
அவனை அவர் பாடியது.
|