| முகப்பு | தொடக்கம் | 
அஞ்சு வரு மரபின்  | 
 211  | 
அஞ்சுவரு மரபின் வெஞ் சினப் புயலேறு  | 
|
அணங்குடை அரவின் அருந் தலை துமிய,  | 
|
நின்று காண்பன்ன நீள் மலை மிளிர,  | 
|
குன்று தூவ எறியும் அரவம் போல,  | 
|
5  | 
முரசு எழுந்து இரங்கும் தானையொடு தலைச்சென்று,  | 
அரைசு படக் கடக்கும் உரைசால் தோன்றல்! நின்  | 
|
உள்ளி வந்த ஓங்கு நிலைப் பரிசிலென்,  | 
|
'வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன்' என,  | 
|
கொள்ளா மாந்தர் கொடுமை கூற, நின்  | 
|
10  | 
உள்ளியது முடித்தோய் மன்ற; முன் நாள்  | 
கை உள்ளது போல் காட்டி, வழி நாள்  | 
|
பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம்  | 
|
நாணாய் ஆயினும், நாணக் கூறி, என்  | 
|
நுணங்கு செந் நா அணங்க ஏத்தி,  | 
|
15  | 
பாடப் பாடப் பாடுபுகழ் கொண்ட நின்  | 
ஆடு கொள் வியன் மார்பு தொழுதனென் பழிச்சிச்  | 
|
செல்வல் அத்தை, யானே வைகலும்,  | 
|
வல்சி இன்மையின் வயின்வயின் மாறி,  | 
|
இல் எலி மடிந்த தொல் சுவர் வரைப்பின்,  | 
|
20  | 
பாஅல் இன்மையின் பல் பாடு சுவைத்து,  | 
முலைக்கோள் மறந்த புதல்வனொடு,  | 
|
மனைத் தொலைந்திருந்த என் வாள்நுதல் படர்ந்தே.  | 
|
திணையும் துறையும் அவை.
  | |
அவனை அவர் பாடியது.
  |