| முகப்பு | தொடக்கம் | 
அமரர்ப் பேணியும்  | 
 99  | 
அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும்,  | 
|
அரும் பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்,  | 
|
நீர் அக இருக்கை ஆழி சூட்டிய  | 
|
தொல் நிலை மரபின் நின் முன்னோர் போல,  | 
|
5  | 
ஈகை அம் கழல் கால், இரும் பனம் புடையல்,  | 
பூ ஆர் காவின், புனிற்றுப் புலால் நெடு வேல்,  | 
|
எழு பொறி நாட்டத்து எழாஅத் தாயம்  | 
|
வழு இன்று எய்தியும் அமையாய், செரு வேட்டு,  | 
|
இமிழ் குரல் முரசின் எழுவரொடு முரணிச்  | 
|
10  | 
சென்று, அமர் கடந்து, நின் ஆற்றல் தோற்றிய  | 
அன்றும், பாடுநர்க்கு அரியை; இன்றும்  | 
|
பரணன் பாடினன் மற்கொல் மற்று நீ  | 
|
முரண் மிகு கோவலூர் நூறி, நின்  | 
|
அரண் அடு திகிரி ஏந்திய தோளே!  | 
|
திணையும் துறையும் அவை.
  | |
அவன் கோவலூர் எறிந்தானை அவர் பாடியது.
  |