| முகப்பு | தொடக்கம் | 
அலர் பூந் தும்பை  | 
 96  | 
அலர் பூந் தும்பை அம் பகட்டு மார்பின்,  | 
|
திரண்டு நீடு தடக்கை, என்னை இளையோற்கு  | 
|
இரண்டு எழுந்தனவால், பகையே: ஒன்றே,  | 
|
பூப் போல் உண்கண் பசந்து, தோள் நுணுகி,  | 
|
5  | 
நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று; ஒன்றே,  | 
'விழவின்றுஆயினும், படு பதம் பிழையாது,  | 
|
மை ஊன் மொசித்த ஒக்கலொடு, துறை நீர்க்  | 
|
கைமான் கொள்ளுமோ?' என,  | 
|
உறையுள் முனியும், அவன் செல்லும் ஊரே.  | 
|
திணை அது; துறை இயன்மொழி.
  | |
அவன் மகன் பொகுட்டெழினியை அவர் பாடியது.
  |