| முகப்பு | தொடக்கம் | 
ஒண் செங் குரலித்  | 
 283  | 
ஒண் செங் குரலித் தண் கயம் கலங்கி,  | 
|
வாளை நீர்நாய் நாள் இரை பெறூஉப்  | 
|
பௌவ உறை அளவா,  | 
|
..................................................................... வி மயக்கி,  | 
|
5  | 
மாறு கொள் முதலையொடு ஊழ் மாறு பெயரும்  | 
அழும்பிலன் அடங்கான் தகையும் என்றும்,  | 
|
வலம் புரி கோசர் அவைக் களத்தானும்,  | 
|
மன்றுள் என்பது கெட...  | 
|
...........................................£னே பாங்கற்கு  | 
|
10  | 
ஆர் சூழ் குறட்டின் வேல் நிறத்து இங்க,  | 
உயிர் புறப்படாஅ அளவைத் தெறுவர,  | 
|
தெற்றிப் பாவை திணி மணல் அயரும்  | 
|
மென் தோள் மகளிர் நன்று புரப்ப,  | 
|
.....................................................ண்ட பாசிலைக்  | 
|
15  | 
கவிழ் பூந் தும்பை நுதல் அசைத்தோனே.  | 
திணை தும்பை; துறை பாண் பாட்டு.
  | |
அடை நெடுங் கல்வியார் பாடியது.
  |