| முகப்பு | தொடக்கம் | 
வெருக்கு விடை அன்ன  | 
 324  | 
வெருக்கு விடை அன்ன வெகுள் நோக்குக் கயந் தலை,  | 
|
புள் ஊன் தின்ற புலவு நாறு கய வாய்,  | 
|
வெள் வாய் வேட்டுவர் வீழ் துணை மகாஅர்  | 
|
சிறியிலை உடையின் சுரையுடை வால் முள்  | 
|
5  | 
ஊக நுண் கோல் செறித்த அம்பின்,  | 
வலாஅர் வல்வில் குலாவரக் கோலி,  | 
|
பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்  | 
|
புன் புலம் தழீஇய அம் குடிச் சீறூர்,  | 
|
குமிழ் உண் வெள்ளை பகு வாய் பெயர்த்த  | 
|
10  | 
வெண் காழ் தாய வண் கால் பந்தர்,  | 
இடையன் பொத்திய சிறு தீ விளக்கத்து,  | 
|
பாணரொடு இருந்த நாணுடை நெடுந்தகை  | 
|
வலம் படு தானை வேந்தர்க்கு  | 
|
உலந்துழி உலக்கும் நெஞ்சு அறி துணையே.  | 
|
திணையும் துறையும் அவை.
  | |
ஆலத்தூர் கிழார் பாடியது.
  |