| முகப்பு | தொடக்கம் | 
வெள்ளி தோன்ற, புள்ளுக் குரல் இயம்ப  | 
 385  | 
வெள்ளி தோன்ற, புள்ளுக் குரல் இயம்ப,  | 
|
புலரி விடியல் பகடு பல வாழ்த்தி,  | 
|
தன் கடைத் தோன்றினும் இலனே; பிறன் கடை,  | 
|
அகன்கண் தடாரிப் பாடு கேட்டருளி,  | 
|
5  | 
வறன் யான் நீங்கல் வேண்டி, என் அரை  | 
நீல் நிறச் சிதாஅர் களைந்து,  | 
|
வெளியது உடீஇ, என் பசி களைந்தோனே;  | 
|
காவிரி அணையும் தாழ் நீர்ப் படப்பை  | 
|
நெல் விளை கழனி அம்பர் கிழவோன்,  | 
|
10  | 
நல் அருவந்தை, வாழியர்! புல்லிய  | 
வேங்கட விறல் வரைப் பட்ட  | 
|
ஓங்கல் வானத்து உறையினும் பலவே!  | 
|
திணை அது; துறை வாழ்த்தியல்.
  | |
அம்பர் கிழான் அருவந்தையைக் கல்லாடனார் பாடியது.
  |