| முகப்பு | தொடக்கம் | 
கலை உணக் கிழிந்த  | 
 236  | 
கலை உணக் கிழிந்த, முழவு மருள், பெரும் பழம்  | 
|
சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவு ஆகும்  | 
|
மலை கெழு நாட! மா வண் பாரி!  | 
|
கலந்த கேண்மைக்கு ஒவ்வாய், நீ; எற்  | 
|
5  | 
புலந்தனை ஆகுவை புரந்த ஆண்டே  | 
பெருந் தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது,  | 
|
ஒருங்கு வரல் விடாது, 'ஒழிக' எனக் கூறி,  | 
|
இனையைஆதலின் நினக்கு மற்று யான்  | 
|
மேயினேன் அன்மையானே; ஆயினும்,  | 
|
10  | 
இம்மை போலக் காட்டி, உம்மை  | 
இடை இல் காட்சி நின்னோடு  | 
|
உடன் உறைவு ஆக்குக, உயர்ந்த பாலே!  | 
|
திணை அது; துறை கையறுநிலை.
  | |
வேள் பாரி துஞ்சியவழி, அவன் மகளிரைப் பார்ப்பார்ப் படுத்து, வடக்கிருந்த கபிலர் பாடியது.
  |