| முகப்பு | தொடக்கம் | 
கவி செந் தாழிக்  | 
 238  | 
கவி செந் தாழிக் குவி புறத்து இருந்த  | 
|
செவி செஞ் சேவலும் பொகுவலும் வெருவா,  | 
|
வாய் வன் காக்கையும் கூகையும் கூடி,  | 
|
பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும்  | 
|
5  | 
காடு முன்னினனே, கள் காமுறுநன்;  | 
தொடி கழி மகளிரின் தொல் கவின் வாடி,  | 
|
பாடுநர் கடும்பும் பையென்றனவே;  | 
|
தோடு கொள் முரசும் கிழிந்தன, கண்ணே;  | 
|
ஆள் இல், வரை போல், யானையும் மருப்பு இழந்தனவே;  | 
|
10  | 
வெந் திறல் கூற்றம் பெரும் பேதுறுப்ப,  | 
எந்தை ஆகுல அதற் படல் அறியேன்;  | 
|
அந்தோ! அளியேன் வந்தனென்; மன்ற  | 
|
என் ஆகுவர்கொல், என் துன்னியோரே?  | 
|
மாரி இரவின், மரம் கவிழ் பொழுதின்,  | 
|
15  | 
ஆர் அஞர் உற்ற நெஞ்சமொடு, ஒராங்குக்  | 
கண் இல் ஊமன் கடல் பட்டாங்கு,  | 
|
வரை அளந்து அறியாத் திரை அரு நீத்தத்து,  | 
|
அவல மறு சுழி மறுகலின்,  | 
|
தவலே நன்றுமன்; தகுதியும் அதுவே.  | 
|
திணையும் துறையும் அவை.
  | |
வெளிமான் துஞ்சிய பின் அவர் பாடியது.
  |