| முகப்பு | தொடக்கம் | 
களங்கனி அன்ன  | 
 127  | 
'களங்கனி அன்ன கருங் கோட்டுச் சீறியாழ்ப்  | 
|
பாடு இன் பனுவல் பாணர் உய்த்தென,  | 
|
களிறு இலவாகிய புல் அரை நெடு வெளில்,  | 
|
கான மஞ்ஞை கணனொடு சேப்ப,  | 
|
5  | 
ஈகை அரிய இழை அணி மகளிரொடு  | 
சாயின்று' என்ப, ஆஅய் கோயில்;  | 
|
சுவைக்கு இனிது ஆகிய குய்யுடை அடிசில்  | 
|
பிறர்க்கு ஈவு இன்றித் தம் வயிறு அருத்தி,  | 
|
உரைசால் ஓங்கு புகழ் ஒரீஇய  | 
|
10  | 
முரைசு கெழு செல்வர் நகர் போலாதே.  | 
திணை அது; துறை கடைநிலை.
  | |
ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.
  |