| முகப்பு | தொடக்கம் | 
களிறு அணைப்பக் கலங்கின  | 
 345  | 
களிறு அணைப்பக் கலங்கின, காஅ,  | 
|
தேர் ஓடத் துகள் கெழுமின, தெருவு;  | 
|
மா மறுகலின் மயக்குற்றன, வழி;  | 
|
கலம் கழாஅலின், துறை கலக்குற்றன;  | 
|
5  | 
தெறல் மறவர் இறை கூர்தலின்,  | 
பொறை மலிந்து நிலன் நெளிய,  | 
|
வந்தோர் பலரே, வம்ப வேந்தர்,  | 
|
பிடி உயிர்ப்பு அன்ன கை கவர் இரும்பின்  | 
|
ஓவு உறழ் இரும் புறம் காவல் கண்ணி,  | 
|
10  | 
கருங் கண் கொண்ட நெருங்கல் வெம் முலை,  | 
மையல் நோக்கின், தையலை நயந்தோர்  | 
|
அளியர் தாமே; இவள் தன்னைமாரே  | 
|
செல்வம் வேண்டார், செருப் புகல் வேண்டி,  | 
|
'நிரல் அல்லோர்க்குத் தரலோ இல்' என;  | 
|
15  | 
கழிப் பிணிப் பலகையர், கதுவாய் வாளர்,  | 
குழாஅம் கொண்ட குருதிஅம் புலவொடு  | 
|
கழாஅத் தலையர், கருங் கடை நெடு வேல்  | 
|
இன்ன மறவர்த்துஆயினும் அன்னோ!  | 
|
என் ஆவது கொல்தானே  | 
|
20  | 
பன்னல் வேலி இப் பணை நல் ஊரே!  | 
திணையும் துறையும் அவை.
  | |
அவனை அவர் பாடியது.
  |