| முகப்பு | தொடக்கம் | 
குன்றும் மலையும் பல  | 
 208  | 
'குன்றும் மலையும் பல பின் ஒழிய,  | 
|
வந்தனென், பரிசில் கொண்டனென் செலற்கு' என  | 
|
நின்ற என் நயந்து அருளி, 'ஈது கொண்டு,  | 
|
ஈங்கனம் செல்க, தான்' என, என்னை  | 
|
5  | 
யாங்கு அறிந்தனனோ, தாங்கு அருங் காவலன்?  | 
காணாது ஈத்த இப் பொருட்கு யான் ஓர்  | 
|
வாணிகப் பரிசிலன் அல்லென்; பேணி,  | 
|
தினை அனைத்துஆயினும், இனிது அவர்  | 
|
துணை அளவு அறிந்து, நல்கினர் விடினே.  | 
|
திணையும் துறையும் அவை.
  | |
அதியமான் நெடுமான் அஞ்சியுழைச் சென்ற பெருஞ்சித்திரனாரைக் காணாது,'இது கொண்டு செல்க!' என்று அவன் பரிசில் கொடுப்பக் கொள்ளாது, அவர் சொல்லியது.
  |