| முகப்பு | தொடக்கம் | 
செஞ் ஞாயிற்றுச் செலவும்  | 
 30  | 
செஞ் ஞாயிற்றுச் செலவும்,  | 
|
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்,  | 
|
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்,  | 
|
வளி திரிதரு திசையும்,  | 
|
5  | 
வறிது நிலைஇய காயமும், என்று இவை  | 
சென்று அளந்து அறிந்தோர் போல, என்றும்  | 
|
இனைத்து என்போரும் உளரே; அனைத்தும்  | 
|
அறி அறிவு ஆகாச் செறிவினை ஆகி,  | 
|
களிறு கவுள் அடுத்த எறிகல் போல  | 
|
10  | 
ஒளித்த துப்பினைஆதலின், வெளிப்பட  | 
யாங்ஙனம் பாடுவர், புலவர்? கூம்பொடு  | 
|
மீப் பாய் களையாது மிசைப் பரம் தோண்டாது  | 
|
புகாஅர்ப் புகுந்த பெருங் கலம் தகாஅர்  | 
|
இடைப் புலப் பெரு வழிச் சொரியும்  | 
|
15  | 
கடல் பல் தாரத்த நாடு கிழவோயே!  | 
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி
  | |
அவனை அவர் பாடியது.
  |