| முகப்பு | தொடக்கம் | 
தென் பவ்வத்து முத்துப் பூண்டு  | 
 380  | 
தென் பவ்வத்து முத்துப் பூண்டு,  | 
|
வட குன்றத்துச் சாந்தம் உரீஇ,  | 
|
........................................ங் கடல் தானை,  | 
|
இன் இசைய விறல் வென்றி,  | 
|
5  | 
தென்னவர் வய மறவன்;  | 
மிசைப் பெய்த நீர் கடல் பரந்து முத்து ஆகுந்து,  | 
|
நாறு இதழ்க் குளவியொடு கூதளம் குழைய,  | 
|
வேறுபெ.....................................................................த்துந்து,  | 
|
தீம் சுளைப் பலவின் நாஞ்சில் பொருநன்;  | 
|
10  | 
துப்பு எதிர்ந்தோர்க்கே உள்ளாச் சேய்மையன்;  | 
நட்பு எதிர்ந்தோர்க்கே அங்கை நண்மையன்;  | 
|
வல் வேல் கந்தன் நல் இசை அல்ல,  | 
|
.....................த்தார்ப் பிள்ளை அம் சிறாஅர்;  | 
|
அன்னன் ஆகன்மாறே, இந் நிலம்  | 
|
15  | 
இலம்படு காலை ஆயினும்,  | 
புலம்பல் போயின்று, பூத்த என் கடும்பே.  | 
|
திணை அது; துறை இயன்மொழி.
  | |
நாஞ்சில் வள்ளுவனைக் கருவூர்க் கதப்பிள்ளை பாடியது.
  |