| முகப்பு | தொடக்கம் | 
நனி பேதையே  | 
 227  | 
நனி பேதையே, நயன் இல் கூற்றம்!  | 
|
விரகு இன்மையின் வித்து அட்டு உண்டனை;  | 
|
இன்னும் காண்குவை, நன் வாய் ஆகுதல்;  | 
|
ஒளிறு வாள் மறவரும், களிறும், மாவும்,  | 
|
5  | 
குருதி அம் குரூஉப் புனல் பொரு களத்து ஒழிய,  | 
நாளும் ஆனான் கடந்து அட்டு, என்றும் நின்  | 
|
வாடு பசி அருத்திய வசை தீர் ஆற்றல்  | 
|
நின் ஓர் அன்ன பொன் இயல் பெரும் பூண்  | 
|
வளவன் என்னும் வண்டு மூசு கண்ணி  | 
|
10  | 
இனையோற் கொண்டனைஆயின்,  | 
இனி யார், மற்று நின் பசி தீர்ப்போரே?  | 
|
திணையும் துறையும் அவை.
  | |
அவனை ஆடுதுறை மாசாத்தனார் பாடியது.
  |