| முகப்பு | தொடக்கம் | 
புலவரை இறந்த  | 
 21  | 
புல வரை இறந்த புகழ்சால் தோன்றல்!  | 
|
'நில வரை இறந்த குண்டு கண் அகழி,  | 
|
வான் தோய்வு அன்ன புரிசை, விசும்பின்  | 
|
மீன் பூத்தன்ன உருவ ஞாயில்,  | 
|
5  | 
கதிர் நுழைகல்லா மரம் பயில் கடி மிளை,  | 
அருங் குறும்பு உடுத்த கானப்பேர் எயில்,  | 
|
கருங் கைக் கொல்லன் செந் தீ மாட்டிய  | 
|
இரும்பு உண் நீரினும் மீட்டற்கு அரிது' என,  | 
|
வேங்கை மார்பன் இரங்க, வைகலும்  | 
|
10  | 
ஆடு கொளக் குழைந்த தும்பை, புலவர்  | 
பாடுதுறை முற்றிய, கொற்ற வேந்தே!  | 
|
இகழுநர் இசையொடு மாய,  | 
|
புகழொடு விளங்கிப் பூக்க, நின் வேலே!  | 
|
திணையும் துறையும் அவை.
  | |
கானப்பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதியை ஐயூர் மூலங் கிழார் பாடியது.
  |