முகப்பு | தொடக்கம் |
முன்னை |
320 |
முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பி, |
|
பந்தர் வேண்டாப் பலா தூங்கு நீழல், |
|
கைம்மான் வேட்டுவன் கனை துயில் மடிந்தென, |
|
பார்வை மடப் பிணை தழீஇ, பிறிது ஓர் |
|
5 |
தீர் தொழில் தனிக் கலை திளைத்து விளையாட, |
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள் |
|
கணவன் எழுதலும் அஞ்சி, கலையே |
|
பிணைவயின் தீர்தலும் அஞ்சி, யாவதும், |
|
இல் வழங்காமையின், கல்லென ஒலித்து, |
|
10 |
மான் அதள் பெய்த உணங்கு தினை வல்சி |
கானக் கோழியோடு இதல் கவர்ந்து உண்டென, |
|
ஆர நெருப்பின், ஆரல் நாற, |
|
தடிவு ஆர்ந்திட்ட முழு வள்ளூரம் |
|
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிது அருந்தி, |
|
15 |
தங்கினை சென்மோ, பாண! தங்காது, |
வேந்து தரு விழுக் கூழ் பரிசிலர்க்கு என்றும் |
|
அருகாது ஈயும் வண்மை |
|
உரைசால் நெடுந் தகை ஓம்பும் ஊரே. |
|
திணையும் துறையும் அவை.
| |
வீரை வெளியனார் பாடியது.
|
328 |
..........டை முதல் புறவு சேர்ந்திருந்த |
|
புன் புலச் சீறூர், நெல் விளையாதே; |
|
வரகும் தினையும் உள்ளவை எல்லாம் |
|
இரவல் மாக்களுக்கு ஈயத் தொலைந்தன; |
|
5 |
................. டு அமைந்தனனே; |
அன்னன் ஆயினும், பாண! நன்றும் |
|
வெள்ளத்திடும் பாலுள் உறை தொட.... |
|
களவுப் புளி அன்ன விளை.... |
|
..............வாடு ஊன் கொழுங் குறை |
|
10 |
கொய் குரல் அரிசியொடு நெய் பெய்து அட்டு, |
துடுப்பொடு சிவணிய களிக் கொள் வெண் சோறு |
|
உண்டு, இனிது இருந்த பின் |
|
... ... ... ... .... ... தருகுவன் மாதோ |
|
தாளி முதல் நீடிய சிறு நறு முஞ்ஞை |
|
15 |
முயல் வந்து கறிக்கும் முன்றில், |
சீறூர் மன்னனைப் பாடினை செலினே. |
|
திணையும் துறையும் அவை.
| |
பங்கு ............................. பாடியது.
|