பாய்ச்சி, மேலும் அது அளவிற் குறுகும் வண்ணம் சற்றுத் தறித்து வைத்தாற் போன்றதாம்.

குறிப்புகள்:

(1) இத் திருவள்ளுவ மாலை கடைக்கழகப் புலவரால் பாடப் பட்டதன்றாயினும் பலபாக்களிலுள்ள கருத்துக்கள் சிறந்தனவும் நடுநிலையானவும் மேற்கோளாக ஆளத்தக்கனவுமாக உள்ளன.

(2) சில பாக்கள் அவற்றைப் பாடியவரின் அளவிறந்த ஆரிய வெறியையோ அடிமைத் தனத்தையோ காட்டுவனவாக வுள்ளன.

(3) சிலபாக்கள் அளவிறந்த உயர்வுநவிற்சியாகவுள்ளன.

(4) சிலபாக்கள் நூலின் பாகுபாட்டையே எடுத்துக்கூறுவன.

10. திருவள்ளுவர் காலத் தமிழ் நூல்களும் கலையறிவியல்களும்.

பல்துறை நூல்கள்:-

தூங்காமை கல்வி துணிவுடைமை யிம்மூன்று
நீங்கா நிலனாள் பவர்க்கு. (313)

கற்க கசடறக் கற்பவை கற்றபி
னிற்க வதற்குத் தக. (361)

யாதானு நாடாமா லூராமா லென்னொருவன்
சாந்துணையுங் கல்லாதவாறு. (397)

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல். (401)

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்
தெப்பானூ லோர்க்குந் துணிவு. (533)

அறிதோ றறியாமை கண்டற்றாற் காமஞ்
செறிதோறுஞ் சேயிழை மாட்டு. (1110)

சிறந்த நூல்கள்:-

நுண்ணிய நூல்பல கற்பினு மற்றுந்த
னுண்மை யறிவே மிகும். (373)

விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநூல்
கற்றாரோ டேனை யவர். (410)