[காஞ்சியின் பொதுவிலக்கணம்]
 
  பாங்கருஞ் சிறப்பின் பல்லாற் றானும்
நில்லா வுலகம் புல்லிய நெறித்தே
(தொல்-புறத்திணை-23-சூ)

 

17. முதுமொழிக்காஞ்சி - மதுரை கூடலூர் கிழார் இயற்றியது. பத்ததிகாரமாய் ஒவ்வோரதிகாரமும் பப்பத்துக் குறட்டாழிசையால் அமைந்தது. ஒவ்வோரடியும் ஒவ்வொரு முதுமொழி. (தொல்-பொருள்-490)

18. ஏலாதி - தமிழாசிரியர் மகனார் மாக்காயனார் மாணாக்கர் கணிமேதாவியர் (ஜைனர்) இயற்றியது. அவ்வாறு பொருளுரைக்கும் வெண்பாக்கள் (கடவுள் வாழ்த்து நீங்கலாக) எண்பதுடையது.